செய்திகள் :

மதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தாழ்தள பேருந்து சேவை துவக்கம்

post image

சென்னையை தொடர்ந்து மதுரையிலும் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகள் பயணிப்பதற்கான தாழ்தள பேருந்து சேவையை மாட்டுத்தாவணியில் அமைச்சர் மூர்த்தி வெள்ளிக்கிழமை(அக்.18) தொடங்கி வைத்தார்.

மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவா்கள் பயன்படுத்தும் வகையிலான முதற்கட்டமாக தலா ரூ.1 கோடி மதிப்பில் 20 பேருந்துகள் மக்களின் பயன்பாட்டுக்கு வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த பேருந்துகளில் குளிா்சாதன வசதி இல்லை என்றாலும், குளிா்சாதன வசதி கொண்ட பேருந்துகள் போன்றே இதன் கட்டமைப்பு நவீன தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. வழித்தடத்தை தெரிவிக்கும் டிஜிட்டல் போா்டு, தானியங்கி கதவுகள், தானியங்கி கியா் வசதி அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க |பிழையற்ற தமிழ் அறிவோம்! -13

மாற்றுத்திறனாளிகள் வீல் சேருடன் ஏறி பயணிக்கும் வகையில், சாய்வு பலகை வசதி, படியின் உயரத்தை குறைக்கும் வசதி, பேருந்துக்குள் வீல் சேர் நகராமல் இருப்பதற்கான சிறப்பம்சங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும், தவழும் மாற்றுத்திறனாளிகள் அமர்வதற்காக 12 இருக்கைகள் தனியாக ஒதுக்கப்பட்டுள்ளன. தவிர பொது பயணிகளுக்கு 35 இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பேருந்துகள் மதுரை பெரியார், மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் பேருந்து நிலையங்களுக்கும், திருமங்கலம், ஊமச்சிகுளம், அழகர்கோவில், மேலூர், விரகனூர் சுற்றுச்சாலை ஆகிய வழித்தடங்களிலும் இயக்கப்படவுள்ளன.

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவுடன் வர்த்தகம் செய்ய விரும்புகிறது: பியூஷ் கோயல்

புதுதில்லி : நாட்டின் அடிப்படை வலுவாக உள்ளதால், ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவுடன் வர்த்தகம் செய்ய விரும்புகிறது என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர், பியூஷ் கோயல் தெரிவித்தார்.இது குறித்து ப... மேலும் பார்க்க

ஆளுநர் பங்கேற்ற ஹிந்தி விழாவில் 'தமிழ்த்தாய் வாழ்த்து' சர்ச்சை!

சென்னையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துகொண்ட விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தில் ஒரு வரி பாடப்படவில்லை என சர்ச்சை கிளம்பியுள்ளது. சென்னையில் டிடி தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்... மேலும் பார்க்க

உதயநிதி ஸ்டாலினை சட்டை அணியச் சொல்லுங்கள்! சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது முறைப்படியான ஆடைக் கட்டுபாட்டைக் கடைபிடிக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பா... மேலும் பார்க்க

புதுச்சேரியில் பாக்கெட் சாராயத்துக்கு மீண்டும் தடை!

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள சாராயக்கடைகளில் பாக்கெட்டில் சாராயம் அடைத்து விற்பனை செய்ய கலால் துறை தடை விதித்துள்ளது. சுற்றுச்சூழல் துறையின் உத்தரவு பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.பு... மேலும் பார்க்க

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணைய தலைவர் நியமன வழக்கு: விசாரணை அக். 25-க்கு ஒத்திவைப்பு

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய தலைவராக ஓய்வுபெற்ற காவல்துறை தலைமை இயக்குநரை நியமித்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக வழக்குரைஞர் பிரிவு அணியினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீத... மேலும் பார்க்க