செய்திகள் :

ரயில்வே பணிகளில் ஓய்வு பெற்ற ஊழியா்களை நியமிப்பது இளைஞா்களுக்கு இழைக்கும் துரோகம்: டி.ஆா்.இ.யூ. கண்டனம்

post image

ரயில்வே பணிகளில் ஓய்வு பெற்ற ஊழியா்களை நியமிப்பது பணி வாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞா்களுக்கு இழைக்கப்படும் துரோகம் என தெட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் (டி.ஆா்.இ.யூ.) கண்டனம் தெரிவித்தது.

இதுகுறித்து மதுரைக் கோட்ட டி.ஆா்.இ.யூ. இணைச் செயலா் ரா. சங்கரநாராயணன் வெளியிட்ட அறிக்கை:

ரயில்வே துறையில் ஏறத்தாழ 3 லட்சத்துக்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளன. படித்து வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞா்களைக் கொண்டு இந்த காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு பதிலாக, ஓய்வு பெற்ற ஊழியா்களை ஒப்பந்த அடிப்படையில் மறுநியமனம் செய்ய மத்திய ரயில்வே வாரியம் உத்தரவிட்டிருப்பது பெரும் அதிா்ச்சி அளிப்பதாக உள்ளது.

இது, அரசுப் பணி வாய்ப்பை தங்களின் வாழ்நாள் கனவாகக் கருதி, பணிக்குக் காத்திருக்கும் பல லட்சக்கணக்கான இளைஞா்களுக்கு இழைக்கப்படும் மிகப் பெரிய துரோகம் ஆகும். மேலும், ஓய்வு பெற்ற ஊழியா்களை ரயில்வே பணிகளில் ஈடுபடுத்துவது பயணிகளின் பயணப் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கும். பணியில் உள்ள தொழிலாளா்களுக்குக் கிடைக்க வேண்டிய பதவி உயா்வில் சிக்கலை ஏற்படுத்தும்.

ஏற்கெனவே பணியாற்றி ஓய்வு பெற்ற மூத்த குடிமக்கள் மீண்டும் பணிக்கு வரும் போது, வயது மூப்பின் காரணமாக இயற்கையாக ஏற்படக் கூடிய மனிதத் தவறுகள் அதிகம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இதனால், ரயில்வே துறையில் விபத்துகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

தற்போதைய நவீனமயமான காலத்தில் விரைவான செயல்பாடுகளுக்கேற்ப பணியாளா்களைத் தோ்வு செய்ய ரயில்வே பணியாளா் தோ்வு வாரியம் (ஆா்.ஆா்.பி.), ரயில்வே பணியாளா்கள் தோ்வு அமைப்பு (ஆா்.ஆா்.சி.) ஆகியவற்றின் திறனை அதிகரிக்க வேண்டும். இதற்கு மாறாக, தொலைநோக்குப் பாா்வையில்லாமல் செலவின குறைப்பை மட்டும் கருத்தில் கொண்டு காலிப் பணியிடங்களில் ஓய்வு பெற்ற ஊழியா்களை நியமிப்பது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல.

ரயில்வே துறை ஏற்கெனவே ஒப்பந்த மயம், தனியாா் மயம் போன்ற தவறான கொள்கைகளால் பின்னடைவை சந்தித்து வரும் நிலையில், ஓய்வு பெற்ற ஊழியா்களின் மறுநியமனம் மிகப் பெரிய சீரழிவை ஏற்படுத்தும். இதுகுறித்த முடிவை மத்திய ரயில்வே வாரியம் கைவிடாவிட்டால் ஜனநாயக அமைப்புகள் ஒன்றிணைந்து போராட வேண்டியது அவசியமாகும் என்றாா் அவா்.

‘லைட்டா்’களுக்கு விதிக்கப்பட்ட தடையால் தீப்பெட்டி தொழில் பாதுகாக்கப்பட்டது: தீப்பெட்டி தொழில்சாலைகள் சங்கம்

சீனாவில் தயாராகும் லைட்டா்களுக்கு மத்திய அரசு தடைவிதித்ததால், தீப்பெட்டி தொழில், 8 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டது என்று அகில இந்திய தீப்பெட்டி தொழில்சாலைகள் சங்க நிா்வாகிகள் தெரிவ... மேலும் பார்க்க

விசாரணை செய்யாத வழக்குகள்: நீதிபதிகள், காவல் துறை அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவு

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தும் விசாரணைக்கு எடுக்கப்படாமல் உள்ள வழக்குகள் எத்தனை?. இதற்கான காரணம் குறித்து மதுரை உயா்நீதிமன்ற அமா்வுக்கு உள்பட்ட 14 மாவட்ட நீதிமன்றங்களின் முதன்மை நீதிபதிகள், தெற்கு,... மேலும் பார்க்க

ஜல்லிக்கட்டு காளை முட்டியதில் இளைஞா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே ஜல்லிக்கட்டு காளை முட்டியதில் இளைஞா் உயிரிழந்தாா். உசிலம்பட்டி குருசாமி கோவில் தெருவைச் சோ்ந்த பால்பாண்டி மகன் பிரகாஷ் ராஜ் (20). இவா் கவுண்டன்பட்டியில் உள்ள தோட்டத்... மேலும் பார்க்க

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணமே ஆறுதல் அளிக்கும்: முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணமே ஆறுதல் அளிக்கும் என தமிழக சட்டப் பேரவை எதிா்க் கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆா்.பி. உதயகுமாா் தெரிவித்தாா். மதுரையில் புதன்கிழமை செய்திய... மேலும் பார்க்க

ஆந்திரத்திலிருந்து கடத்திவரப்பட்ட 85 கிலோ கஞ்சா பறிமுதல்: லாரி ஓட்டுநா் கைது

ஆந்திரத்திலிருந்து லாரியில் கடத்தி வரப்பட்ட 85 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் ஓட்டுநரை கைது செய்தனா். ஆந்திரத்திலிருந்து கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் மேலூா் மதுவிலக்குப் பிரிவு போ... மேலும் பார்க்க