செய்திகள் :

லாரன்ஸ் பிஷ்னோய் கேங்ஸ்டரின் வாழ்க்கை: இணையத் தொடராக!!

post image

முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலையில் சம்பந்தப்பட்ட கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் வாழ்க்கை வெப் சீரிஸாக தயாரிக்கப்படவுள்ளது.

குண்டர் வழக்கில் சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோயின் வாழ்க்கை குறித்த இணையத்தொடரை தயாரிக்கப்படவிருப்பதாக நொய்டாவைச் சேர்ந்த தயாரிப்பாளர் அமித் ஜானி அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்தத் தொடருக்கு லாரன்ஸ் - ஒரு கேங்க்ஸ்டர் ஸ்டோரி என்று பெயரில், ஃபயர் ஃபாக்ஸ் ஃபிலிம் புரொடக்ஷனின்கீழ் தயாரிக்கப்படவுள்ளது. இந்தத் தொடரில் நடிக்கவிருக்கும் நடிகர்கள் குறித்த அறிவிப்புகள் தீபாவளிக்கு பிறகு அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லாரன்ஸ் பிஷ்னோய் தற்போது பஞ்சாப் சபர்மதி மத்திய சிறையில் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிக்க:தில்லியில் பள்ளி அருகே வெடிவிபத்து? போலீஸார் விசாரணை!

1998 ஆம் ஆண்டு, ஹிந்தி நடிகர் பிளாக்பக் இனமான்களை வேட்டையாடியதற்கு, லாரன்ஸ் பிஷ்னோய் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பிளாக்பக் இனமான்களை பிஷ்னோய் இனத்தவர் வணங்கி வருகையில், அதனை வேட்டையாடியது, அவர்களைக் காயப்படுத்தி விட்டதாக, சுமார் 25 ஆண்டுகளாகக் கூறி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி, மான்களை வேட்டையாடியதற்காக, சல்மான் கானை கொலை செய்ய லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் சிலர் பல ஆண்டுகளாக முயற்சியும் செய்து வருகின்றனர்.

தற்போது, மான்களை வேட்டையாடியதற்காக சல்மான் கான் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்று பிஷ்னோய் இனத் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிக்க:சொல்லப் போனால்... மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!

ஆனால், சல்மான் கான் ரூ. 5 கோடி கொடுத்தால் மட்டுமே, அவர் மீதான கொலை முயற்சிகள் கைவிடப்படும் என்று லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் தெரிவித்துள்ளது.

மேலும், மகாராஷ்டிர முன்னாள் அமைச்சா் பாபா சித்திக்கை மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள கோ் நகரில் அக். 12 ஆம் தேதி, இரவில் மூன்று போ் துப்பாக்கியால் சுட்டனா். இந்த தாக்குதலில் பாபா சித்திக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பாபா சித்திக் கொலைக்கு முழு பொறுப்பேற்பதாக தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் ஃபேஸ்புக்கில் பதிவிட்டது.

வீர தீர சூரனில் 18 நிமிட சிங்கிள் ஷாட் காட்சி!

வீர தீர சூரன் படத்தின் சிங்கிள் ஷாட் காட்சி குறித்து நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு பேசியுள்ளார்.சித்தா படத்தின் இயக்குநர் சு. அருண்குமார் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு நடி... மேலும் பார்க்க

பிளாக் வசூல்!

ஜீவா நடித்த பிளாக் படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் ஜீவா நடிப்பில் வெளியாகிய பிளாக் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது. தமிழின் முன்னணி நடிகராக இருந்தாலும் வெற்றிப்... மேலும் பார்க்க

லக்கி பாஸ்கர் டிரைலர் தேதி!

'லக்கி பாஸ்கர்' படத்தின் டிரைலர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் துல்கர் சல்மான் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் லக்கி பாஸ்கர் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் நாயகியாக மீனாட்... மேலும் பார்க்க

சசிகுமாரின் ஃபிரீடம் கிளிம்ஸ் விடியோ!

நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ஃபிரீடம் படத்தின் கிளிம்ஸ் விடியோ வெளியாகியுள்ளது.இயக்குநரான சசிகுமார் நடிகராக அடுத்தடுத்த படங்களைக் கைவசம் வைத்துள்ளார். கருடன் ஹிட் அடித்தது. சமீபத்தில் வெளிய... மேலும் பார்க்க

கங்குவா இசை வெளியீட்டுத் தேதி!

கங்குவா திரைப்படத்தின் இசை வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்தின் மேல் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதன் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றதா... மேலும் பார்க்க

இன்றைய ராசி பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.20.10.2024மேஷம்:இன்று குடும்பத்தில் திடீர் குழப்பங்கள் தலை தூக்கும். அமைதியாக இருக்க ... மேலும் பார்க்க