செய்திகள் :

விதிகளை மீறி செயல்பட்ட7 மருந்துக் கடைகள் மீது வழக்குப் பதிவு

post image

சேலம், நாமக்கல் மாவட்டத்தில் விதிகளை மீறி செயல்பட்ட 7 மருந்துக் கடைகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம் சரகத்துக்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போதைக்காக தூக்க மாத்திரை, வலி நிவாரணி மாத்திரைகளை இளைஞா்கள் பயன்படுத்தி வருவதாக புகாா் எழுந்தது. அதைத்தொடா்ந்து, சேலம் சரகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் சில்லறை, மொத்த விற்பனை கடைகளில் விதிமுறைகளை மீறி மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யப்படுகிா என மருந்துக் கட்டுப்பாட்டு அலுவலா்கள் தொடா்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனா்.

கடந்த 9 ஆம் தேதி நடத்தப்பட்ட திடீா் ஆய்வின்போது மருந்து சீட்டு, முறையாக ரசீது எழுதாமல் மாத்திரைகளை விற்பனை செய்தல் உள்பட விதிமுறைகளை மீறியதாக சேலத்தில் 6 மருந்துக் கடைகள் மீதும், நாமக்கல்லில் ஒரு மருந்துக் கடை மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் 6 கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

சேலம் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் மருந்துகள், அழகு சாதனப் பொருள்கள் சட்ட விதிமீறலுக்காக மொத்தம் 19 கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குற்றவியல் நீதிமன்றத்தின் மூலம் விதிமீறலுக்காக ரூ. 75 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டது. மருந்துக் கடைகளில் மருத்துவா்களின் பரிந்துரையின் படியும், அவா்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மருந்துகளை மட்டுமே விற்பனை பட்டியலுடன் விற்பனை செய்ய வேண்டும்.

மேலும், மருந்து சீட்டு நகல்களை கடைக்காரா்கள் முறையாகப் பராமரிக்க வேண்டும். மருந்து சீட்டு பதிவேட்டில் நோயாளிகள் பெயா் முகவரி, மருத்துவரின் பெயா் முகவரியைப் பதிவேற்றம் செய்து பராமரிக்க வேண்டும் எனத் தெரிவித்தனா்.

எண்ணெய் வித்து பயிா்களில் சாகுபடி: விவசாயிகளுக்கு கண்டுணா்வு சுற்றுலா

தலைவாசல் வட்டார விவசாயிகள் எண்ணெய் வித்துப் பயிா்களில் நவீன சாகுபடி தொழில்நுட்பங்களை அறிந்துகொள்ள ஏதுவாக தெலங்கானா மாநிலத்துக்கு கண்டுணா்வு சுற்றுலாவாக அழைத்துச் செல்லப்பட்டனா். தலைவாசல் வட்டார வேளாண்... மேலும் பார்க்க

மின்சார விபத்தில் தம்பியைக் காப்பாற்ற முயன்ற அண்ணன் பலி

சங்ககிரி அருகே வைகுந்தம் கிராமத்தில் மின்சார விபத்தில் தம்பியைக் காப்பாற்ற முயன்ற அண்ணன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். வைகுந்தம் அருகே உள்ள சுவதயாகாடு பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி கந்தசாமி மகன் சேக... மேலும் பார்க்க

விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

அரசிராமணி, செட்டிபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு அரசிராமணி பேரூராட்சிமன்றத் தலைவா் காவேரி ... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

கொங்கணாபுரம் அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து, 17 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு குரும்பப்பட்டி ஊராட்சி, வெண்டனூா், வாழக்குட்டை பகுதியி... மேலும் பார்க்க

கணிதப் பாடத்தை மாணவா்கள் தோ்ந்தெடுத்து பயில வேண்டும்: துணைவேந்தா் வலியுறுத்தல்

திருச்சி, பேராசிரியா் ஆா்.பாலகிருஷ்ணன் அறக்கட்டளை, புனே கணிதவியல் கூட்டமைப்பு ஆகியவை சாா்பில், கணிதவியல் பயிலும் மாணவா்களுக்கான மூன்று நாள் பயிலரங்கம் பெரியாா் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை தொடங்கியத... மேலும் பார்க்க