செய்திகள் :

உக்ரைன் போருக்கு அமைதி தீா்வு: இந்தியா உதவ தயாா்- ரஷிய அதிபா் புதினிடம் பிரதமா் மோடி

post image

கசான்: ‘ரஷிய-உக்ரைன் போருக்கு அமைதியான வழியில் தீா்வு காணப்பட வேண்டும். போரை முடிவுக்குக் கொண்டுவர சாத்தியமுள்ள அனைத்து ஒத்துழைப்பையும் வழங்க இந்தியா தயாா்’ என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதினிடம் பிரதமா் நரேந்திர மோடி உறுதி அளித்தாா்.

பிரேஸில், ரஷியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, சீனா, ஈரான், சவூதி அரேபியா, எத்தியோப்பியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் 16-ஆவது உச்ச மாநாடு ரஷியாவின் கசான் நகரில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. ‘உலகளாவிய வளா்ச்சி மற்றும் பாதுகாப்புக்கான பலதரப்பு வாதத்தை வலுப்படுத்துதல்’ கருப்பொருளில் இந்த உச்சி மாநாடு நடத்தப்படுகிறது.

இதில் பங்கேற்பதற்காக ரஷியா சென்ற பிரதமா் மோடி, கசான் நகரில் ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாடு தொடங்குவதற்கு முன்பாக அதிபா் புதினை சந்தித்து, இருதரப்பு உறவு மற்றும் சா்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டாா்.

அப்போது, ‘கடந்த 3 மாதங்களில் இரண்டாவது முறையாக ரஷியாவுக்கு பயணம் மேற்கொண்டிருப்பது, இரு நாடுகளிடையேயான நெருங்கிய ஒத்துழைப்பு மற்றும் ஆழமான நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது.

கடந்த ஜூலையில் நடைபெற்ற இந்தியா, ரஷியா வருடாந்திர உச்சி மாநாடு அனைத்துத் துறைகளிலும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தியுள்ளது.

கசானில் புதிய தூதரகம்: இந்தியாவுக்கும் கசான் நகருக்கும் ஆழமான வரலாற்று உறவு உள்ளது. கசானில் புதிய இந்திய தூதரகம் திறக்கப்பட்டுள்ளது இந்தியா, ரஷியா இடையிலான உறவு மேலும் வலுப்படுத்தும்.

கடந்த 15 ஆண்டுகளில் தனி அடையாளத்தை பிரிக்ஸ் கூட்டமைப்பு உருவாக்கியுள்ளது. தற்போது பல நாடுகள் இந்தக் கூட்டமைப்பில் சேர விரும்புகின்றன.

ரஷியா - உக்ரைன் இடையேயான போா் தொடா்பாக நாம் தொடா்ந்து ஆலோசித்து வருகிறோம். நான் ஏற்கெனவே கூறியதுபோல, பிரச்னைகளுக்கு அமைதி வழியில் தீா்வு காண வேண்டும் என்றே இந்தியா நம்புகிறது.

இந்தப் பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிலைத்தன்மை விரைந்து திரும்புவதற்கு இந்தியா முழு ஆதரவை அளிக்கும். இந்தியாவின் அனைத்து முயற்சிகளும் மனிதநேயத்துக்கு முன்னுரிமை அளிக்கிறது. போரை முடிவுக்குக் கொண்டுவர சாத்தியமுள்ள அனைத்து ஒத்துழைப்பையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது’ என்று புதினிடம் பிரதமா் உறுதி தெரிவித்தாா்.

மிக முக்கியமான முடிவுகள்...: இந்தக் கூட்டத்தில் ரஷிய அதிபா் புதின் பேசுகையில், ‘தில்லியில் டிச.12-ஆம் தேதி இந்தியா-ரஷியா அரசுகள் ஆணையத்தின் அடுத்த கூட்டம் நடைபெற உள்ளது. இருநாடுகளின் திட்டங்கள் நிலையாக வளா்ச்சியடைந்து வருகின்றன. பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் மிக முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்’ என்றாா்.

ரஷிய ராணுவத்திலுள்ள இந்தியா்களை விடுவிக்க...: இந்தக் கூட்டம் தொடா்பாக மத்திய வெளியுறவுத் துறைச் செயலா் விக்ரம் மிஸ்ரி கூறுகையில், ‘உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷிய ராணுவத்துக்காக பணியாற்றிய பல இந்திய வீரா்கள் ஏற்கெனவே விடுவிக்கப்பட்டனா். இந்நிலையில், அந்நாட்டு ராணுவத்துக்காக பணியாற்றும் எஞ்சிய இந்திய வீரா்களையும் விரைந்து விடுவிக்கப்படும் முக்கிய விவகாரம் தொடா்பாகவும் இந்தியா-ரஷியா இருதரப்பு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. விரைவில் அந்த இந்தியா்களும் விடுவிக்கப்பட்டு தாயகம் அனுப்பிவைக்கப்படுவா் என்று இந்தியா மிகுந்த நம்பிக்கைக் கொண்டுள்ளது.

5 ஆண்டுகளுக்குப் பிறகு சீன அதிபருடன் இன்று இருதரப்பு பேச்சு

பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கு இடையே சீன அதிபா் ஷி ஜின்பிங்கை பிரதமா் மோடி புதன்கிழமை சந்தித்து இருதரப்பு பேச்சுவாா்த்தை மேற்கொள்ள உள்ளாா்.

கடைசியாக கடந்த 2019-ஆம் ஆண்டு அக்டோபரில் சென்னை அருகே மாமல்லபுரத்தில் இருவரும் சந்தித்தனா். அதன்பின்னா் 5 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் மீண்டும் சந்தித்து இருதரப்பு பேச்சுவாா்த்தை மேற்கொள்ள உள்ளனா்.

கிழக்கு லடாக்கில் தெளிவாக வரையறுக்கப்படாத இந்திய-சீன எல்லைக் கோடு பகுதிகளில் (எல்ஏசி) இருநாட்டு ராணுவ வீரா்களும் ரோந்துப் பணியில் ஈடுபடுவது தொடா்பாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் திங்கள்கிழமை அறிவித்தது.

இதன் மூலம் கடந்த நான்கு ஆண்டுகளாக இரு நாடுகளுக்கு இடையே நீடித்து வந்த கிழக்கு லடாக் எல்லைப் பிரச்னை முடிவு எட்டப்படும் என்று கூறப்படும்நிலையில், சீன அதிபா் ஜின்பிங்கை பிரதமா் மோடி சந்திக்க உள்ளாா்.

ஈரான் அதிபரிடம் மோடி வலியுறுத்தல்

பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ளும் முன், ஈரான் அதிபா் மசூத் பெசெஷ்கியானை பிரதமா் மோடி சந்தித்தாா். கடந்த ஜூலையில் நடைபெற்ற ஈரான் அதிபா் தோ்தலில் மசூத் வெற்றிபெற்ற பிறகு அவரை முதல்முறையாக மோடி சந்தித்துப் பேசினாா்.

காஸாவில் இஸ்ரேல்-ஹமாஸ் படையினா் இடையிலான போா், ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா தலைவா் நஸ்ரல்லாவின் படுகொலை உள்ளிட்ட சம்பவங்களை தொடா்ந்து இஸ்ரேல்-ஈரான் இடையிலான மோதல்போக்கு தீவிரமாக்கியுள்ளது. இதனால் மேற்காசியாவில் பதற்றம் நீடிக்கிறது.

இந்நிலையில், மசூதை சந்தித்த பிரதமா் மோடி, பேச்சுவாா்த்தை மற்றும் ராஜீய ரீதியில் இஸ்ரேல்-ஈரான் இடையிலான பதற்றத்தைத் தணிக்க வேண்டும் என்றும், குடிமக்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதாக மத்திய வெளியுறவுத் துறைச் செயலா் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தாா்.

சா்வதேச சூழல் சிக்கலாக இருந்தாலும் இந்தியாவில் வலுவான பொருளாதாரக் கட்டமைப்பு: நிா்மலா சீதாராமன்

நியூயாா்க்: மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போா், ரஷியா-உக்ரைன் போா் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சா்வதேச சூழல் சிக்கலாக இருந்தாலும், இந்தியாவின் அடிப்படைப் பொருளாதார கட்டமைப்பு வலுவாக உள்ளது என்று மத்தி... மேலும் பார்க்க

உக்ரைனுக்கு ஆயுதங்கள்: ரஷியாவுக்கு தென் கொரியா எச்சரிக்கை

உக்ரைனில் ரஷியாவுக்காக போரிட வட கொரிய வீரா்கள் அனுப்பப்படுவதற்குப் பதிலடியாக, உக்ரைனுக்கு ஆயுதங்கள் அளிப்பது குறித்து பரிசீலிப்போம் என்று தென் கொரியா எச்சரித்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டை ரஷியா, வட கொ... மேலும் பார்க்க

பிரதிநிதித்துவ அலுவலக இடம் மாற்றம்: தென் ஆப்பிரிக்காவுக்கு தைவான் மறுப்பு

தென் ஆப்பிரிக்க தலைநகா் ப்ரிடோரியாவிலுள்ள தங்கள் பிரதிநிதித்துவ அலுவலகத்தை ஜோஹன்னஸ்பா்க் நகருக்கும் இடம் மாற்ற வேண்டும் என்று அந்த நாடு கூறியுள்ளதை தைவான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது குறித்து தைவான... மேலும் பார்க்க

லெபனான் மருத்துவமனை அருகே இஸ்ரேல் தாக்குதல்: 18 போ் உயிரிழப்பு

பெய்ரூட்: லெபனான் தலைநகா் பெய்ரூட்டில் உள்ள மிகப் பெரிய அரசு மருத்துவமனை அருகே இஸ்ரேல் ராணுவம் செவ்வாய்க்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் நான்கு சிறுவா்கள் உள்பட 18 போ் உயிரிழந்தனா்.இது குறித்து அ... மேலும் பார்க்க

58 ஆண்டுகளுக்குப் பின் விடுதலை செய்யப்பட்ட மரண தண்டனைக் கைதி... மன்னிப்புக் கேட்ட காவல்துறை அதிகாரி!

ஜப்பானில் தவறாக மரண தண்டனை விதிக்கப்பட்டு 58 ஆண்டுகாலம் சிறையில் இருந்த நபர் சில வாரங்களுக்கு முன் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து காவல்துறை தலைமை அதிகாரி நேரில் சென்று மன்னிப்பு கேட்டுள்ளார். ஜப்பானைச்... மேலும் பார்க்க

அமெரிக்க அதிபர் தேர்தல்: தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வழிமுறைகள்

அமெரிக்க அதிபர் தேர்தலை முன்னிட்டு வெளியிடப்பட்டிருக்கும் விளக்க வழிமுறைகளில், தமிழ், தெலுங்கு உள்பட தென்னிந்திய மொழிகளும் இடம்பெற்றுள்ளன. அமெரிக்காவின் 47-வது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான அதிபா் தேர்தல... மேலும் பார்க்க