செய்திகள் :

உதயநிதியை துணை முதல்வர் ஆக்கியதுதான் திமுகவின் சாதனை: இபிஎஸ்

post image

உதயநிதியை துணை முதல்வர் ஆக்கியதுதான் திமுகவின் சாதனை என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம், கொங்கணாபுரத்தில் அதிமுகவின் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில் செவ்வாய்கிழமை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, சேலத்தில் உள்ள மற்ற தொகுதிகளுக்கு முன்மாதிரி தொகுதியாக எடப்பாடி தொகுதி விளங்குகிறது.

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கலாம், ஆனால் வருகிற பேரவைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை அடைவோம். உதயநிதி சொன்னதை போல் பைனல் விளையாட்டின் வெற்றி கோப்பையை அதிமுக பெறும். அதிமுக என்னும் வலிமையான இயக்கத்தை திமுக சிதைக்க நினைக்கிறது. திமுக பலமாக இல்லை. கூட்டணி கட்சிகள் தான் பலமாக உள்ளது. கூட்டணி கட்சிகள் கைவிட்டால் திமுக விழுந்து விடும்.

உணவு டெலிவரி செய்து இந்திய தம்பதியுடன் உரையாடிய டிரம்ப்!

எந்த கட்சிக்கும் வெற்றி தோல்வி நிரந்தரம் கிடையாது. இன்று இருக்கும் முதல்வர், துணை முதல்வர் மக்களுக்கு எதையும் செய்யவில்லை. அதிமுகவின் பத்தாண்டு கால ஆட்சியில் நடந்த திட்டத்தை தான் திறந்து வைக்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்து 41 மாதத்தில் எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. உதயநிதியை துணை முதல்வர் ஆக்கியதுதான் திமுகவின் சாதனை. தமிழகத்தில் வாரிசு அரசியல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கருணாநிதி குடும்பத்தில் இருந்து மட்டும் தான் அதிகாரத்திற்கு வர முடியும். ஸ்டாலின் மகன் என்ற ஒரே காரணத்திற்காக துணை முதல்வர் பதவி உதயநிதிக்கு வழங்கப்பட்டுள்ளது. 50 ஆண்டு காலமாக கட்சிக்கு உழைத்து படிப்படியாக இந்த பதவிக்கு வந்துள்ளேன். சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சியை அகற்றி அதிமுக ஆட்சிக்கு வரும் அப்போது அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

சென்னையில் 'இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டம்' - பெண்கள் விண்ணப்பிக்கலாம்!

சென்னையில் வசிக்கும் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்த உள்ளது. தமிழ்நாடு தொழில் துறை சார்பில் ஆட்டோ ஓட்டுவதற்கு விருப்பமுள்... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமி கனவுலகில் இருக்கிறாரா? மு.க. ஸ்டாலின்

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கனவுலகில் இருக்கிறாரா? என முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (அக். 22) கேள்வி எழுப்பினார். தமிழ்நாட்டில் திமுகவின் மதிப்பு சரிந்துவிட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறியதற்... மேலும் பார்க்க

தீபாவளியை கொண்டாட சென்னை தயாரா? காவல் ஆணையர் அருண் விளக்கம்

தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்லும் நபர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் நடவடிக்கைகள் காவல்துறை மேற்கொண்டுள்ளது.கூட்டத்தை பயன்படுத்தி கூட்ட நெரிசலில் கொ... மேலும் பார்க்க

தவெக மாநாடு: விறுவிறுப்பாக நடைபெறும் பணிகள்!

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு சில நாள்களே உள்ள நிலையில் மாநாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜ... மேலும் பார்க்க

ரேஷன் கடை ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ்

ரேஷன் கடை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் தொடர்பான அறிவிப்பினை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள... மேலும் பார்க்க

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்,தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மே... மேலும் பார்க்க