செய்திகள் :

தவெக மாநாடு: விறுவிறுப்பாக நடைபெறும் பணிகள்!

post image

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு சில நாள்களே உள்ள நிலையில் மாநாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய், கடந்த ஆகஸ்ட் மாதம் 22-ஆம் தேதி கட்சிக் கொடியையும், கொடிப் பாடலையும் அறிமுகம் செய்து வைத்தார்.

இதைத் தொடர்ந்து நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் அக். 27 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் நடைபெற உள்ளது.

கடந்தஅக். 4-ஆம் தேதி மாநாட்டுக்கான பந்தல் கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மாநாட்டுப் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக 27 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மாநாடு தொடா்பாக 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து மாநாட்டுக்கு சில நாள்களே இருப்பதால், மாநாடு நடைபெறும் இடத்தில் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாநாட்டு திடல் முழுவதும் 700 சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

சுமார் 50,000 பேர் இருக்கும்வகையில் இருக்கைகள், மழை பெய்தால் பாதிக்காதவண்ணம் ஒரு சில அடிகள் உயரத்தில் பலகைகள் போடப்பட்டு அதன் மேல் இருக்கைகள் வைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க | கருப்பை வாய்ப் புற்றுநோய்: சென்னையில் மறுக்கப்படும் பரிசோதனை?

விஜய் நடந்து சென்று தொண்டர்களைச் சந்திக்க 800 மீட்டர் தூரத்திற்கு நடை மேடை அமைக்கப்பட்டுள்ளது.

பார்க்கிங், கழிவறை, குடிநீர், மருத்துவம், தீயணைப்புத் துறை என அனைத்து வசதிகளும் செய்யப்படுகிறது.

மாநாட்டுக்கான பணிகள் 90% நிறைவடைந்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணிகள் பாதிக்கப்படுவதால் மாநாடு நடைபெறும் பகுதிக்கு யாரும் வர வேண்டாம் என்று கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளது.

முன்னதாக, பாதுகாப்பு மற்றும் உடல்நலன் கருதி கர்ப்பிணிப் பெண்கள், பள்ளிச் சிறுவர், சிறுமியர், நீண்ட காலமாக உடல்நலமின்றி இருப்பவர்கள், முதியவர்கள் மாநாட்டுக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும் என்று கட்சியின் தலைவர் விஜய் வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

எடப்பாடி பழனிசாமி கனவுலகில் இருக்கிறாரா? மு.க. ஸ்டாலின்

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கனவுலகில் இருக்கிறாரா? என முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (அக். 22) கேள்வி எழுப்பினார். தமிழ்நாட்டில் திமுகவின் மதிப்பு சரிந்துவிட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறியதற்... மேலும் பார்க்க

தீபாவளியை கொண்டாட சென்னை தயாரா? காவல் ஆணையர் அருண் விளக்கம்

தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்லும் நபர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் நடவடிக்கைகள் காவல்துறை மேற்கொண்டுள்ளது.கூட்டத்தை பயன்படுத்தி கூட்ட நெரிசலில் கொ... மேலும் பார்க்க

உதயநிதியை துணை முதல்வர் ஆக்கியதுதான் திமுகவின் சாதனை: இபிஎஸ்

உதயநிதியை துணை முதல்வர் ஆக்கியதுதான் திமுகவின் சாதனை என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம், கொங்கணாபுரத்தில் அதிமுகவின் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் இளங்கோவன் ... மேலும் பார்க்க

ரேஷன் கடை ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ்

ரேஷன் கடை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் தொடர்பான அறிவிப்பினை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள... மேலும் பார்க்க

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்,தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மே... மேலும் பார்க்க

நாமக்கல்லில் கருணாநிதி சிலை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் பங்கேற்பு!

நாமக்கல்லில், மறைந்த திமுக முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் திருவுருவச் சிலையை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார். சிலை திறப்புநாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், நா... மேலும் பார்க்க