செய்திகள் :

`எல்.முருகனின் விஷமத்தைவிட அவர் கருத்து ஆபத்தானது’ - ஆதரவு தெரிவித்த சீமானை விசிக தாக்கும் பின்னணி?

post image

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஒருபக்கம் விமர்சிக்க, மறு பக்கம் முருகனுக்கு எதிராக கடும் எதிர்வினையாற்றினார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். ஆனால் எல்.முருகனை காட்டிலும் சீமானை கடுமையாக விமர்சித்து அறிக்கைவிட்டிருக்கிறது வி.சி.க தரப்பு. வி.சி.க - நா.த.க - பா.ஜ.க என முக்கோண மோதலில் பின்னணி தான் என்ன?

வன்னி அரசு

நம்மிடம் பேசிய விவரமறிந்தவர்கள் ``தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற வி.சி.க துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு, `எங்கள் தலைவர் திருமாவை முதல்வராக்குவதே எங்கள் இலக்கு’ எனப் பேசியது சமூக வலைதளங்களில் பெரும் பேசு பொருளானது. இதனை வி.சி.க நிர்வாகிகள் பலரும் ஆதரிக்க, விமர்சிக்க தொடங்கியது எதிர்தரப்பு. குறிப்பாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ``சமூகநீதி குறித்து பேசுவதற்கே திருமாவளவனுக்கு எந்த அருகதையும் கிடையாது. அருந்ததியர் இட ஒதுக்கீட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த ஒருவர் எப்படி தலித் தலைவராக இருக்க முடியும்?’’ என வினவியதோடு திருமாவளவனை முதலமைச்சராக்கும் கனவெல்லாம் பலிக்காது” என சாடினார்.

இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பில் `எல்.முருகன் அருந்தியர்களுக்காக என்ன செய்தார்? ஆர்.எஸ்.எஸ் சொல்லித்தான் அவர் அருந்ததியர் என்பதே தெரியும்” என திருமாவளவன் பதில் சொல்ல, இவ்விவகாரத்தில் கருத்து தெரிவித்த சீமான் ``எல்.முருகன் மத்திய அமைச்சராக இருக்கும்போது, திருமா முதல்வராக கூடாதா? எனக் கேட்டுவிட்டு அவரை முதலவராக்குவோம் என சூளுரைத்தார். ஆனால் பட்டியல் சமூங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் மாநில அரசுக்கு வழங்குவதை எதிர்த்தும், கிரிமி லேயர் முறையை வி.சி.க எதிர்த்து வழக்கு போட்டதை வி.சி.க பட்டியல் சமூக உள் ஒதுக்கீட்டையே எதிர்ப்பதுபோலவும் அருந்ததியர்கள் தமிழர் அல்ல என்பதையும் வெளிப்படுத்தும் விதமாகவும் பேசி பரபரப்பை கிளப்பினார் சீமான்.

எல். முருகன்

திருமாவுக்காக பா.ஜ.க-வை சீமான் கடுமையாக விமர்சித்தாக பேசப்பட்ட நிலையில் சீமானை கடுமையாக விமர்சித்து அறிக்கை கொடுத்திருக்கிறார் வி.சி.க பொதுச் செயலாளர் சிந்தனை செல்வன், அதில் ``எல்.முருகன் அவர்களை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார் சீமான். அவரது அன்பிற்கு நன்றி சொல்கிற அதே தருணத்தில் விடுதலைச்சிறுத்தைகளை ஆதரிப்பதற்காக ஒட்டுமொத்த அருந்ததிய சமூகத்தையும் தமிழர் அல்லாதவர்கள் என மொழிவழி தேசிய பார்வை கொண்டு சிறுமைப்படுத்துவதை ஒருபோதும் விடுதலைச் சிறுத்தைகள் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.

பாஜக எல் முருகன் தெரிவித்த கருத்தை ஒரு அடிமை சங்கியின் தனிப்பட்ட தாக்குதலாக கடந்து செல்லலாம். ஆனால் எங்களை ஆதரிப்பதாக சொல்லி வெளிப்படும் சீமானின் கருத்து ஒட்டுமொத்த உழைக்கும் மக்களுக்கும் எதிரானது.

சீமான்

மொழிவழி தேசிய பார்வையின் அடிப்படையில் அருந்ததியர்களை தமிழர்கள் அல்ல என வகைப்படுத்துவதை ஒருபோதும் எளிதாக கடந்து போக முடியாது. சாதி அடையாளத்துடன் அவர்களை பிரிக்கும் எல். முருகனின் குரலைப்போலவே மொழி அடிப்படையில் எங்கள் உறவுகளை அந்நியர்களாக்குவதை ஒருபோதும் ஏற்க இயலாது. எங்கள் மீது உட்சாதி அவதூறுகளை அள்ளி தெளிக்கிற எல்.முருகனின் விஷமத்தை விட , எங்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதாக இனவாத அடிப்படையில் உழைக்கும் அருந்ததிய மக்களை மொழியால் பிரிக்கும் சீமானின் கருத்து ஆபத்தானது என்றிருக்கிறார்” சிந்தனை செல்வன்.

சிந்தனைச் செல்வன்

நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர்கள், ``சீமான் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஆதராவாக பேசுவதுபோல் ஒரு தோற்றத்தை கொடுத்தாலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி பட்டியல் சமூக உள் ஒதுக்கீட்டுக்கு எதிரான இயக்கம்போல பேசி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

ஏற்கனவே வி.சி.க அருந்தியருக்கு எதிரான இயக்கம் என்ற முத்திரை குத்தப்படும் சூழலில் `அருந்ததியர்கள் தமிழர் அல்ல’ எனப் பேசும் சீமானின் ஆதரவு ஆபத்தாகிவிடும் என சுதாரித்துக் கொண்டதால் எதிர்வினையாற்றியிருக்கிறது வி.சி.க.

சீமான்

அதேசமயம், பா.ஜ.க திருமாவை விமர்சித்தால் நாம் ஏன் பொங்க வேண்டும்? திருமாவை முதலமைச்சராக்குவோம் என ஏன் பேசவேண்டும் என நா.த.க-வினரே தலைமையை விமர்சித்துவந்த நிலையில் வி.சி.க-வின் இந்த காட்டமான விமர்சனம் அவர்களை மேலும் அப்செட்டாக்கிவிட்டது. சீமானின் திடீர் ஆதரவுக்கு பின்னால் கூட்டணி கணக்குகள் இருப்பதாக வலம்வந்த வதந்திகளை தவிடுபொடியாக்கியிருக்கிறது வி.சி.க” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

ஆம்பூர் மூதாட்டி பெயரில் ரூ.2.39 கோடிக்கு GST மோசடி; கேரளாவில் பரிவர்த்தனை - நடந்தது என்ன?!

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் கிருஷ்ணாபுரம், காமராஜர் 3-வது தெருவில் வசிக்கிறார் மூதாட்டி ராணி பாபு. அதே பகுதியிலுள்ள தோல் தொழிற்சாலை ஒன்றில் தூய்மைப் பணியாளராக வேலைச் செய்து வரும் ராணி பாபு பெயரில்... மேலும் பார்க்க

அட்டைப்படம்

அட்டைப்படம் - விகடன் ப்ளஸ் மேலும் பார்க்க

``மத சட்டங்களால், குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தை மீற முடியாது..'' - உச்ச நீதிமன்றம்

குழந்தைத் திருமணம் தடுப்புச் சட்டத்தை எந்தவொரு தனிப்பட்ட சட்டமும் மீற முடியாது என உச்ச நீதிமன்றம் அதிரடியாகத் தெரிவித்திருக்கிறது.இந்தியாவைப் பொறுத்தவரையில் சட்டப்படி பெண்களின் திருமண வயது 18, ஆண்களின... மேலும் பார்க்க

`திருவண்ணாமலை கோயிலுக்காக மாஸ்டர் பிளான் திட்டங்கள்’ - தீபத்திருவிழா ஆய்வில் உதயநிதி உத்தரவாதம்

திருவண்ணாமலை மாவட்டத்தில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று மாலை வருகைத் தந்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். அவருக்கு வழிநெடுகிலும் தி.மு.க-வினர் வரவேற்பு அளித்தனர்.இதையடுத்து, ... மேலும் பார்க்க

Aavin: `புதிய வகைப் பாலை அறிமுகப்படுத்த ஆய்வு மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது!' - ஆவின் விளக்கம்

தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனம், கிரீன் மேஜிக் எனும் பச்சை நிற பாக்கெட் பாலை, கிரீன் மேஜிக் பிளஸ் எனப் பெயர் மாற்றம் செய்து, லிட்டருக்கு ரூ. 11 உயர்த்தி விற்பது பகல் கொள்ளை எனவும், ஆவின் உடனடியாக இதை... மேலும் பார்க்க