செய்திகள் :

Aavin: `புதிய வகைப் பாலை அறிமுகப்படுத்த ஆய்வு மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது!' - ஆவின் விளக்கம்

post image

தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனம், கிரீன் மேஜிக் எனும் பச்சை நிற பாக்கெட் பாலை, கிரீன் மேஜிக் பிளஸ் எனப் பெயர் மாற்றம் செய்து, லிட்டருக்கு ரூ. 11 உயர்த்தி விற்பது பகல் கொள்ளை எனவும், ஆவின் உடனடியாக இதை நிறுத்த வேண்டும் எனவும் பா.ம.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் இன்று கண்டனம் தெரிவித்தன. இந்த நிலையில், ஆவின் தரப்பிலிருந்து இதற்குத் தற்போது விளக்கம் தரப்பட்டிருக்கிறது.

ஆவின் பால் பாக்கெட் கவர்கள்!

அந்த அறிக்கையில், ``ஆவின் நிறுவனம் நிலைப்படுத்தப்பட்ட பாலின் (பச்சை நிற பால்) விற்பனை குறைப்பு மற்றும் உற்பத்தி நிறுத்தம் என்று எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை. மக்கள் நலன் கருதி, எதிர்வரும் பால் தேவையைக் கருத்தில் கொண்டும் மற்றும் பால் சந்தையில் அனைவரும் விரும்பும் வகையில் வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்டு மற்றும் இதர கொழுப்புச் சத்துக்களை சற்று உயர்த்தி புதிய வகையான பாலினை அறிமுகப்படுத்த ஆய்வு மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Aavin

மேலும் பொது மக்களிடம் கருத்துக்கள் கேட்கப்படவுள்ளது. அதோடு, எந்த விதமான புதிய வகைப் பாலையும் இதுவரை ஆவின் விற்பனை செய்யத் தொடங்கவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஆவின் நிறுவனம் புதிய வகையான பால் விற்பனை தொடங்கும் பட்சத்தில் அனைத்து ஊடகங்களுக்கும் தெரிவித்த பின்னரே தொடங்கப்படும்." என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: `ஆளுநருக்கு இதில் எந்த சம்பந்தமும் இல்லை' - ஆளுநரின் ஆலோசகர் விளக்கம்

தூர்தர்ஷன் தமிழ் சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் அதன் பொன்விழா ஆண்டு இன்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியோடே, இந்தி மாத நிறைவுக் கொண்டாட்டங்களும் நடத்தப்பட்டது. ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தின... மேலும் பார்க்க

கோவை உக்கடம் குளத்தில் `மிதக்கும் சோலார்' மின் உற்பத்தி நிலையம்.. | Photo Album

சூரிய மின்சக்தி (சோலார்) தகடுகள்சூரிய மின்சக்தி (சோலார்) தகடுகள்சூரிய மின்சக்தி (சோலார்) தகடுகள்சூரிய மின்சக்தி (சோலார்) தகடுகள்கண்காணிப்பு காமிராக்கள்சூரிய மின்சக்தி (சோலார்) தகடுகள்சூரிய மின்சக்தி (... மேலும் பார்க்க

ஜோலார்பேட்டை: 150 ஆண்டுகள் பழமையான ரயில் நிலையம்.. குடிநீர், கழிவறை வசதியின்றி திண்டாடும் அவலம்!

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள ஜோலார்பேட்டை ரயில் நிலையம் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கன்னியாகுமரியில் இருந்து டெல்லி வரை செல்லும் முக்கிய ரயில்கள் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தை கடந்துதான் செல்லும். தி... மேலும் பார்க்க

விருதுநகர்: `நகராட்சியோடு இணைக்கத் தேவையில்லை’ - கூரைக்கூண்டு கிராம மக்கள் போராட்டத்தின் பின்னணி

விருதுநகர் மாவட்டம் , கூரைக்கூண்டு ஊராட்சியை விருதுநகர் நகராட்சியுடன் இணைப்பது குறித்த அறிவிப்பு வெளியாகி அந்தப் பகுதியை போராட்ட களமாய் மாற்றியது. விருதுநகர் நகராட்சியை, சிறப்பு நிலை நகராட்சியாகதரம் உ... மேலும் பார்க்க

Train ticket: `இதுவரை 120... இனி 60 நாள்கள்' - ரயில் டிக்கெட் ப்ரீ-புக்கிங் நடைமுறையில் மாற்றம்!

இதுவரை 120 நாள்களுக்கு முன்பே, ரயில் டிக்கெட்டை புக் செய்துவிட முடியும். ஆனால், நவம்பர் 1-ம் தேதியில் இருந்து, ரயில் டிக்கெட்டை, பயணம் மேற்கொள்ளும் 60 நாள்களுக்கு முன்புதான் புக் செய்ய முடியும். ரயில்... மேலும் பார்க்க