செய்திகள் :

விருதுநகர்: `நகராட்சியோடு இணைக்கத் தேவையில்லை’ - கூரைக்கூண்டு கிராம மக்கள் போராட்டத்தின் பின்னணி

post image

விருதுநகர் மாவட்டம் , கூரைக்கூண்டு ஊராட்சியை விருதுநகர் நகராட்சியுடன் இணைப்பது குறித்த அறிவிப்பு வெளியாகி அந்தப் பகுதியை போராட்ட களமாய் மாற்றியது. விருதுநகர் நகராட்சியை, சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தும் நோக்கில், ரோசல்பட்டி , கூரைக்கூண்டு ஊராட்சிகளை உடன் இணைக்க முடிவெடுக்கப்பட்டது. அதற்காக அந்த இரு ஊராட்சிகளின் அடிப்படை விவரங்கள், தீர்மானம் குறித்த விவரங்கள் அனுப்பும்படி, சம்பந்தப்பட்ட ஊராட்சிகளுக்கு மாவட்ட நிர்வாகம் கடிதம் அனுப்பியிருந்தது.

கூரைக்கூண்டு கிராம மக்கள் போராட்டம்

இந்த அறிவிப்பு கொடுக்கப்பட்ட தொடக்கத்திலிருந்தே எதிர்ப்புகள் கிளம்பிய  நிலையில், தற்போது  கூரைக்கூண்டு கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்திய காத்திருப்பு போரட்டம் பேசுபொருளாகியுள்ளது. கடந்த சுதந்திர தினத்தன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்திலும், காந்தி ஜெயந்தி அன்று நடைபெற்ற கூட்டத்திலும், விருதுநகர் நகராட்சியுடன் கூரைக்கூண்டு ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்களால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் எங்களுக்கு நகராட்சியுடன் இணைவதில் உடன்பாடில்லை எனக் கூறியும், அறிவிப்பை திரும்ப பெறக்கோரியும் 500-க்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்கள் எதிர்ப்பு பதாகைகளுடன்  விருதுநகர் எம்.எல்.ஏ சீனிவாசன் இல்லத்தை முற்றுகையிட்டனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் அங்கே சலசலப்பு ஏற்பட்டது. சிறிது நேர பேச்சு வார்த்தைக்கு பின்னர், எம்.எல்.ஏ சீனிவாசனிடம் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனர். அதைத் தொடர்ந்து, `இது குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என அவர் உறுதியளித்ததை தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட கிராம மக்கள், மீண்டும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

கூரைக்கூண்டு கிராம மக்கள் போராட்டம்

மேலும், அவர்களின் கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். இது குறித்து கிராம மக்கள் சிலரிடம் பேசினோம். அப்போது, ``சிறப்பு நிலை நகராட்சியாக எங்கள் கிராம அறிவிக்கப்பட்டால், எங்களுக்கு தற்போது 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் தினமும் கிடைக்கும் 200 ரூபாய், கலைஞர் கனவு இல்லத் திட்டம், பிரதம மந்திரி திட்டம் , ஆடு மாடுகள் வழங்கும் திட்டம் போன்ற  ஊராட்சிகளுக்கான நலத் திட்டங்கள்,  மறுக்கப்படும். எனவே, எங்களால் இந்த திட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை" எனத் தெரிவித்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

Aavin: `புதிய வகைப் பாலை அறிமுகப்படுத்த ஆய்வு மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது!' - ஆவின் விளக்கம்

தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனம், கிரீன் மேஜிக் எனும் பச்சை நிற பாக்கெட் பாலை, கிரீன் மேஜிக் பிளஸ் எனப் பெயர் மாற்றம் செய்து, லிட்டருக்கு ரூ. 11 உயர்த்தி விற்பது பகல் கொள்ளை எனவும், ஆவின் உடனடியாக இதை... மேலும் பார்க்க

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: `ஆளுநருக்கு இதில் எந்த சம்பந்தமும் இல்லை' - ஆளுநரின் ஆலோசகர் விளக்கம்

தூர்தர்ஷன் தமிழ் சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் அதன் பொன்விழா ஆண்டு இன்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியோடே, இந்தி மாத நிறைவுக் கொண்டாட்டங்களும் நடத்தப்பட்டது. ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தின... மேலும் பார்க்க

கோவை உக்கடம் குளத்தில் `மிதக்கும் சோலார்' மின் உற்பத்தி நிலையம்.. | Photo Album

சூரிய மின்சக்தி (சோலார்) தகடுகள்சூரிய மின்சக்தி (சோலார்) தகடுகள்சூரிய மின்சக்தி (சோலார்) தகடுகள்சூரிய மின்சக்தி (சோலார்) தகடுகள்கண்காணிப்பு காமிராக்கள்சூரிய மின்சக்தி (சோலார்) தகடுகள்சூரிய மின்சக்தி (... மேலும் பார்க்க

ஜோலார்பேட்டை: 150 ஆண்டுகள் பழமையான ரயில் நிலையம்.. குடிநீர், கழிவறை வசதியின்றி திண்டாடும் அவலம்!

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள ஜோலார்பேட்டை ரயில் நிலையம் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கன்னியாகுமரியில் இருந்து டெல்லி வரை செல்லும் முக்கிய ரயில்கள் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தை கடந்துதான் செல்லும். தி... மேலும் பார்க்க

Train ticket: `இதுவரை 120... இனி 60 நாள்கள்' - ரயில் டிக்கெட் ப்ரீ-புக்கிங் நடைமுறையில் மாற்றம்!

இதுவரை 120 நாள்களுக்கு முன்பே, ரயில் டிக்கெட்டை புக் செய்துவிட முடியும். ஆனால், நவம்பர் 1-ம் தேதியில் இருந்து, ரயில் டிக்கெட்டை, பயணம் மேற்கொள்ளும் 60 நாள்களுக்கு முன்புதான் புக் செய்ய முடியும். ரயில்... மேலும் பார்க்க

Satellite Spectrum: `ஏலம் விடுவதா?’ எலான் மஸ்க் Vs அம்பானி நிறுவனங்கள் - மத்திய அரசு முடிவென்ன?

இந்தியாவில் தொலைத் தொடர்பு, இணைய சேவைகள், இரண்டு முறைகளில் வழங்கப்பட்டு வருகிறது. தற்போதுவரை பெருவாரியான இடங்களில், டவர் அமைத்துதான் வழங்கப்பட்டு வருகிறது. வயாசாட், ஓம் டெலிகாம், சிபி டெக்னாலஜிஸ், ரில... மேலும் பார்க்க