செய்திகள் :

கர்ப்ப காலத்துக்கான செக்ஸ் பொசிஷன்ஸ்... விவரிக்கும் மருத்துவர் | காமத்துக்கு மரியாதை - 211

post image

திருமணமான புதிதிலேயே கருத்தரித்துவிட்ட தம்பதியருக்கு, தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ளும் ஆசையும் இருக்கும்; கூடவே, வைத்துக்கொண்டால் கரு கலைந்து விடுமோ என்கிற பயமும் இருக்கும். இவர்களுக்கு, எந்தெந்த டிரைமெஸ்டரில் எந்தெந்த பொசிஷன்களில் தாம்பத்திய உறவுகொண்டால் வயிறு அழுந்தாது; வயிற்றில் இருக்கிற சிசுவுக்கு எந்தப் பிரச்னையும் வராது என்பது தெரிந்தால் மிகுந்த உதவியாக இருக்கும். அவற்றைப்பற்றிதான் இன்றைக்கு பாலியல் மருத்துவர் காமராஜ் பேசவிருக்கிறார்.

Sex & Pregnancy

''முதல் டிரைமெஸ்டரில், அதாவது கருத்தரித்த முதல் மூன்று மாதங்களில் வயிற்றின் அளவில் பெரிதாக எந்த மாற்றமும் ஏற்படாது என்பதால், இந்த நேரத்தில் பொசிஷன்கள் பற்றி யோசிக்க வேண்டாம். வழக்கமான முறையிலேயே தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ளலாம். இரண்டாவது, மூன்றாவது டிரைமெஸ்டரில் வயிறு பெரிதாகும் என்பதால் அந்த நேரத்தில்தான் கவனமாக இருக்க வேண்டும். கருவுற்ற நேரத்தில் உறவுகொள்ள 550 பொசிஷன்கள் இருக்கின்றன. ஆனால், அவற்றின் பெயர்களை மட்டும் சொன்னால் மக்களுக்குப் புரியாது. அதனால், சிலவற்றை மட்டும் சொல்கிறேன்'' என்றவர், அவற்றை விவரித்தார்.

''வயிறு அழுந்தாமல் இருக்க, மனைவி ஒரு டேபிள் மீது படுத்துக்கொள்ள, கணவன் நின்றபடி தாம்பத்திய உறவு கொள்ளலாம். அல்லது இருவரும் நின்றபடி செய்யலாம், உட்கார்ந்தபடி செய்யலாம், பக்கவாட்டில் நின்றபடி செய்யலாம், டாகி பொசிஷனில் செய்யலாம். இதுதொடர்பான என்னுடைய மருத்துவ புத்தகத்தில் புகைப்படங்களுடன் விளக்கியிருப்பேன். அதை பார்த்துதான் செய்ய வேண்டும் என்பதில்லை. சம்பந்தப்பட்ட தம்பதியர் அவர்களுக்கு வசதியான பொசிஷனை அவர்களே கண்டறிந்து ஈடுபட முடியும். அப்படி செய்வதுதான் அவர்களுக்கு சரியாகவும் இருக்கும்.

Dr. Kamaraj

சில தம்பதியரை உறவில் ஈடுபடக்கூடாது என்று மருத்துவரே அறிவுறுத்தியிருப்பார். லட்சக்கணக்கில் செலவு செய்து ஐ.வி.எஃப் முறையில் கருத்தரித்தவர்கள், தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ள வேண்டாம். கர்ப்பத்தின்போதே ரத்தப்போக்கு இருந்தாலும் செக்ஸை தவிர்க்க வேண்டும். கருப்பைக்குள் பக்கவாட்டில் இருக்க வேண்டிய நஞ்சுக்கொடி, கீழிறிங்கி கருப்பை வாய் அருகே இருந்தால் உறவை தவிர்க்க வேண்டும். கருப்பையில் தொற்று ஏற்படக்கூடிய ஆபத்து இருக்கிறதென்றாலும் உறவு கூடாது. தொடர்ந்து கருச்சிதைவு ஏற்படுகிறது என்றால், அவர்கள் கர்ப்ப காலத்தில் உறவு கொள்ள கூடவே கூடாது. அது பெரிய ரிஸ்க். வேறு வழியில்லையா டாக்டர் என்பவர்கள், டீப் பெனிட்ரேஷன் செய்யாமல், ஃபோர்பிளே மூலமே ஆர்கசம் அடைந்துகொள்ளலாம்'' என்று அறிவுறுத்துகிறார்.

நீராவிக்குளியல் எடுத்தால் குழந்தைப் பிறக்காதா? | காமத்துக்கு மரியாதை - 210

உடம்பில் எந்தப் பிரச்னையும் இல்லை; ஆனால், குழந்தை பிறக்கவில்லை. இந்தப் பிரச்னை இருக்கிற பலரும் இதற்குக் காரணமாக சொல்வது, உடல் சூட்டை. இது உண்மையா என்று பாலியல் மருத்துவர் காமராஜ் அவர்களிடம் கேட்டோம். ... மேலும் பார்க்க

கர்ப்பமாகணும்னா இந்தக் காலங்களில் உறவு வெச்சுக்கோங்க... | காமத்துக்கு மரியாதை - 209

குளிர் காலங்களில் கருத்தரிப்பின் சதவிகிதம் அதிகமாக இருக்கும் என்கிற பாலியல் மருத்துவர் காமராஜ், அதற்கான அறிவியல் காரணங்களைவிவரிக்கிறார்.’’குளிர் காலங்களில் விந்துப்பைகள் குளிர்ச்சியாக இருப்பதால் விந்த... மேலும் பார்க்க