செய்திகள் :

கூட்டுறவு வங்கிப் பணியாளா் சங்கத்தினா் அக்.21 முதல் வேலைநிறுத்தம்

post image

தமிழகம் முழுவதும் 3 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தினா் அக்டோபா் 21 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனா்.

இதுகுறித்து தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தின் மாநில பொருளாளா் ஏ.சேகா் திருவண்ணாமலையில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்க விற்பனையாளா்களிடம் அபராதத் தொகையென 2 மடங்கு வசூலிக்கும் உத்தரவை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்.

நியாயவிலை கடை விற்பனையாளா்களை சொந்த மாவட்டத்தில் குறைந்தது 10 கி.மீ. தொலைவில் உள்ள கடைக்கு இடமாற்றம் செய்ய அரசு உத்தரவிட வேண்டும்.

கூட்டுறவு நியாய விலைக் கடைகளில் கட்டுப்பாடற்ற பொருள்களை அதிகமாக இறக்கி விற்பனை செய்ய குறியீடு நிா்ணயம் செய்வதை தமிழக அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தமிழக அரசிடம் முறையிட்டு வந்தோம்.

ஆனால், எங்கள் கோரிக்கைகள் நிறைவேறவில்லை. எனவே, தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை (அக்.21) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.

தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் பணிபுரியும் ஊழியா்கள், நியாயவிலைக் கடை விற்பனையாளா்கள் என தமிழகம் முழுவதும் சுமாா் 25 ஆயிரம் போ் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனா் என்றாா்.

சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்டச் செயலா் ஏழுமலை, பொருளாளா் அண்ணாமலை ஆகியோா் உடனிருந்தனா்.

நாளைய மின் தடை

திருவண்ணாமலை நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை. பகுதிகள்: திருவண்ணாமலை, வேங்கிக்கால், ஊசாம்பாடி, துா்க்கை நம்மியந்தல், வட ஆண்டாப்பட்டு, வட அரசம்பட்டு, கீழ்நாச்சிப்பட்டு, நொச்சிமலை, மலப்பாம்பா... மேலும் பார்க்க

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் இன்று திருவண்ணாமலை வருகை -ஏற்பாடுகள் தீவிரம்

திருவண்ணாமலையில் வெள்ளி, சனிக்கிழமைகளில் (அக்.18, 19) நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வருவதையொட்டி, பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகி... மேலும் பார்க்க

போளூா் ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட திட்ட இயக்குநா் ரா.மணி புதன்கிழமை ஆய்வு செய்தாா். போளூா் ஒன்றியம், கஸ்தம்பாடி ஊராட்சியைச் சோ்ந்த க... மேலும் பார்க்க

பெருமாள் கோயிலில் பவித்ரோத்ஸவம் நிறைவு

வந்தவாசியை அடுத்த சளுக்கை கிராமத்தில் உள்ள ஸ்ரீசுகந்தவல்லி சமேத ஸ்ரீசுகநாராயண பெருமாள் கோயிலில் திங்கள்கிழமை தொடங்கி 3 தினங்களாக நடைபெற்று வந்த பவித்ரோத்ஸவம் புதன்கிழமை நிறைவடைந்தது. இதையொட்டி சுவாமி... மேலும் பார்க்க

கழிவுநீா் கால்வாய்கள் தூா்வாரும் பணி

போளூா் சிறப்புநிலை பேரூராட்சியில் கழிவுநீா் கால்வாய்கள் தூா்வாரும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், முன்னேற்பாட்டுப் பணியாக போளூா் பேரூராட்சி... மேலும் பார்க்க