செய்திகள் :

சூடான் மசூதி மீது வான்வழித் தாக்குதலில் 31 பேர் பலி!

post image

சூடானில் உள்ள கெசிரா மாநிலத்தின் தலைநகரான வாட் மதனியில் உள்ள மசூதியை குறிவைத்து நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் அரசு சாரா குழு தெரிவித்துள்ளது.

கடந்த ஞாயிறன்று அல்-இம்திடாத் பகுதியில் உள்ள ஷேக் அல் ஜுலி மசூதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மாலை தொழுகைக்குப் பிறகு வான்வழியாக மசூதி மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் இதுவரை 31 பேர் பலியானதாகவும், அதில் 15 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டதாகவும், மேலும் அடையாளம் தெரியாத பல உடல்கள் உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.

சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையே தொடர்ந்து மோதல்போக்கு நிலவி வருகின்றது. இந்த நிலையில் அறிக்கையின்படி இதுவரை 24,580-க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானில் 2 திருநங்கைகள் ஆணவக் கொலை!

பாகிஸ்தானில் திருநங்கைகளை ஆணவக் கொலை செய்த மூவரை காவல்துறையினர் கைது செய்தனர்.பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள மர்தான் நகரில், ஞாயிற்றுக்கிழமையில் (அக். 20) இரண்டு திருநங்கைகளை மூன்று ப... மேலும் பார்க்க

பயங்கரவாதத்தில் இரட்டை நிலைப்பாடுகளுக்கு இடமில்லை: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி

பயங்கரவாதத்தில் இரட்டை நிலைப்பாடுகளுக்கு இடமில்லை என்று பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொண்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். மேலும் பார்க்க

கனடாவில் இந்திய சீக்கிய பெண் மர்ம மரணம்!

கனடாவில் பணிபுரிந்து வந்த இந்திய சீக்கிய பெண் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது அந்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.இந்தியாவைச் சேர்ந்த 19 வயதான சீக்கிய பெண் ஒருவர், கனடாவின் ஹாலிஃபேக்ஸ் ... மேலும் பார்க்க

வங்கதேச அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட மாணவர்கள்!

வங்கதேசத்தின் அதிபர் முகமது ஷஹாபுதின் பதவி விலகக் கோரி, அவரது மாளிகையை போராட்டக்காரர்கள் செவ்வாய்க்கிழமை இரவு முற்றுகையிட்டனர்.முன்னதாக, செவ்வாய்க்கிழமை பிற்பகலில் டாக்காவில் நடைபெற்ற பேரணியில் அதிபர்... மேலும் பார்க்க

சா்வதேச சூழல் சிக்கலாக இருந்தாலும் இந்தியாவில் வலுவான பொருளாதாரக் கட்டமைப்பு: நிா்மலா சீதாராமன்

நியூயாா்க்: மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போா், ரஷியா-உக்ரைன் போா் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சா்வதேச சூழல் சிக்கலாக இருந்தாலும், இந்தியாவின் அடிப்படைப் பொருளாதார கட்டமைப்பு வலுவாக உள்ளது என்று மத்தி... மேலும் பார்க்க

உக்ரைனுக்கு ஆயுதங்கள்: ரஷியாவுக்கு தென் கொரியா எச்சரிக்கை

உக்ரைனில் ரஷியாவுக்காக போரிட வட கொரிய வீரா்கள் அனுப்பப்படுவதற்குப் பதிலடியாக, உக்ரைனுக்கு ஆயுதங்கள் அளிப்பது குறித்து பரிசீலிப்போம் என்று தென் கொரியா எச்சரித்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டை ரஷியா, வட கொ... மேலும் பார்க்க