செய்திகள் :

சென்னை வேப்பேரியில் தாறுமாறாக ஓடிய கார்.. பதறவைக்கும் விடியோ

post image

வேப்பேரி அருகே, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தாறுமாறாக ஓடிய இனோவா கார், சாலையில் சென்றுகொண்டிருந்த வாகனங்களை இடித்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இனோவா காரில் இருந்த இரண்டு பேரை மக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

சென்னை வேப்பேரி - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த பைக், ஆட்டோ மீது இனோவா கார் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தை ஏற்படுத்திவிட்டு, தப்பி ஓட முயன்ற இரண்டு பேரை பாதிக்கப்பட்ட வாகன ஓட்டிகள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் இனோவா கார் தாறுமாறாக ஓடி விபத்தை ஏற்படுத்தியதில் 1 கார், 2 ஆட்டோ 3 பைக் உள்பட ஐந்து வாகனங்கள் சேதம் அடைந்துள்ளன.

இந்த சம்பவத்தில் ஒரு குழந்தை உள்பட ஏழு பேர் படுகாயம் அடைந்து அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் காரில் வந்தவர்கள் உகாண்டாவைச் சேர்ந்தவர்கள் எனவும் தாங்கள் இருவரும் வாகனத்தை ஓட்டவில்லை, தங்களது ஓட்டுநர்தான் வாகனத்தை இயக்கியதாகவும், காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.

விபத்து ஏற்படுத்திவிட்டுத் தப்பி ஓடிய வாகன ஓட்டுநரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இது குறித்து வேப்பேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

7.5% உள் ஒதுக்கீடு: அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் விரிவுபடுத்த கோரிக்கை

7.5% உள் ஒதுக்கீடு உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத உதவிபெறும் பள்ளிகளின் உரிமை மீட்புக் குழு சார்ப... மேலும் பார்க்க

அரசியலும் ஆன்மிகமும் என்றும் கலக்காது: துணை முதல்வர் உதயநிதி

அரசியலும் ஆன்மிகமும் தமிழ்நாட்டில் என்றைக்கும் கலக்காது என துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், இந்நாள் ஆரியநர் செய்யும் சூழ்ச்சிகளை சுட்டிக்காட்டினால், முன்னா... மேலும் பார்க்க

கோவையில் இடியுடன் கூடிய பலத்தமழை

கோவையில் காந்திபுரம், பீளமேடு உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது.கோவை மாவட்டத்தில், காலை முதல் மழைக்கான அறிகுறிகள் தென்படாத நிலையில், பிற்பகலுக்குப் பிறகு வானிலையி... மேலும் பார்க்க

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை: ரூ. 247 கோடி ஒதுக்கீடு!

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்குவதற்காக ரூ. 247 கோடி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மாநில அரசு வழங்கும் சிறப்பு ஊக்கத்தொகையினால் சுமார் 1.20 லட்சம் கரும்பு விவசாயிகள் பயனடைவார்கள்... மேலும் பார்க்க

ஆளுநர் ஆர்.என். ரவி சொன்னதும்.. உண்மையில் நடந்ததும்!

தமிழகத்தில் போதைப் பொருள் பறிமுதல் தொடர்பாக ஆளுநர் ஆர்.என். ரவி சொன்னது உண்மையல்ல என்று காவல்துறை வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக செயற்கையாக தயாரிக்கப்படும் போதைப்ப... மேலும் பார்க்க

2 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை!

தமிழகத்தில் 2 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் பரவலாக கனமழை முதல் ஓரிரு இடங... மேலும் பார்க்க