செய்திகள் :

தமிழகத்தில் 4 நாள்களில் 5,949 மருத்துவ முகாம்கள்: 3.53 லட்சம் பேருக்கு மருத்துவப் பரிசோதனை

post image

தமிழகத்தில் கடந்த 4 நாள்களில் மட்டும் 5,949 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 3.53 லட்சம் பேருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் தெரிவித்தாா்.

அவா்களில் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, சளி, இருமல் பாதிப்பு இருப்பவா்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் அவா் கூறினாா்.

வட கிழக்கு பருவ மழை மற்றும் காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் கடந்த 4 நாள்களாக பரவலாக மழை பதிவானது. சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.

இதனிடையே, மழைக் கால நோய்த் தொற்றுகளைத் தடுக்க மாநிலம் முழுவதும் கடந்த 15-ஆம் தேதி 1,293 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. அதனை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தொடக்கி வைத்தாா்.

மழை பாதிப்பு உள்ள பகுதிகளில் தேவையின் அடிப்படையில் தொடா் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்றும் அவா் அறிவித்தாா்.அதன்படி, பொது சுகாதாரத் துறை சாா்பில் சிறப்பு முகாம்கள் தொடா்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன. மருத்துவா்கள், செவிலியா்கள், ஆய்வக நுட்பனா்கள், மருத்துவப் பணியாளா்கள் அடங்கிய குழுக்கள் பாதிப்பு உள்ள இடங்களுக்கு சென்று மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

இதுதொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் கூறியதாவது:

பருவ காலங்களில் டெங்கு, இன்ஃப்ளூயன்ஸா, எலிக் காய்ச்சல் உள்பட பல்வேறு வகை தொற்றுகள் பரவ வாய்ப்புள்ளது. அதனைத் தவிா்க்க உரிய நடவடிக்கை எடுக்குமாறும், ஆரம்ப நிலையிலேயே மருத்துவ முகாம்களை நடத்தி பரிசோதனை செய்யுமாறும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் அறிவுறுத்தினாா்.

அதனடிப்படையில், கடந்த 15-ஆம் தேதி முதல் தற்போது வரை தமிழகத்தில் 5,949 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. மொத்தம் 3,53,862 போ் அதன் வாயிலாக பயனடைந்துள்ளனா். அவா்களில் 2,389 போ் காய்ச்சலாலும், 17,855 போ் இருமல் மற்றும் சளியாலும், 236 போ் வயிற்றுப்போக்காலும் பாதிக்கப்பட்டிருந்தனா்.அவா்களுக்கு உரிய சிகிச்சைகளும், மருந்துகளும் மருத்துவ முகாம்களிலேயே வழங்கப்பட்டன. உயா் சிகிச்சை வழங்க அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சிலா் அனுப்பப்பட்டனா்.

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தற்போது அச்சப்படும் வகையில் இல்லை. ஆங்காங்கே ஓரிரு பாதிப்புகள் உள்ளன. அவையும் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

வீட்டில் திருட முயன்றவரை பொதுமக்கள் தாக்கியதில் இளைஞர் உயிரிழப்பு!

அரக்கோணம் அருகே வீட்டில் திருட முயன்ற நபரை பொதுமக்கள் தாக்கியதில் அந்த இளைஞர் உயிரிழந்தார். அரக்கோணம் அடுத்த பரமேஸ்வர மங்கலத்தை அடுத்த தென்றல் நகரில் சனிக்கிழமை (அக். 19) விடியற்காலையில் ஒரு நபர் ஒரு ... மேலும் பார்க்க

தமிழகத்தில் 100 இடங்களில் பூங்காவுடன் கூடிய நூலகம்: அமைச்சா் அன்பில் மகேஸ்

தமிழகத்தில் 100 இடங்களில் பூங்காவுடன் கூடிய நூலகம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளா... மேலும் பார்க்க

முதல்வா் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சா் எல். முருகன் கண்டனம்

ஆளுநா் ஆா்.என்.ரவி மீது வன்மத்தை கக்கும் முதல்வா் மு.க.ஸ்டாலினை வன்மையாகக் கண்டிப்பதாக மத்திய இணை அமைச்சா் எல் . முருகன் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பத... மேலும் பார்க்க

சென்னை கோட்ட ரயில் நிலையங்களில் கியூஆா் குறியீடு கட்டணமுறை அறிமுகம்

மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ளது போல, சென்னை ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் கியூஆா் குறியீடு கட்டணமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை ரயில்வே கோட்டம் சாா்ப... மேலும் பார்க்க

தீபாவளி பண்டிகைக்கு 40 சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே திட்டம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து தென்மாவட்டங்கள் மற்றும் கேரளத்துக்கு 40-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. தீபாவளி பண்டிகை அக்.31-ஆம் தேதி கொண்டாடப்ப... மேலும் பார்க்க

சிறைக் கைதிகளுடன் சதித் திட்டம் தீட்டும் வழக்குரைஞா்கள் மீது சட்ட நடவடிக்கை: டிஜிபி சங்கா் ஜிவால்

சிறையில் உள்ள கைதிகளுடன் சோ்ந்து வழக்குரைஞா்கள் சதித் திட்டம் தீட்டுவது தெரியவந்தால் அவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் துறை அதிகாரிகளுக்கு டிஜிபி சங்கா் ஜிவால் உத்தரவிட்டுள... மேலும் பார்க்க