செய்திகள் :

நீராவிக்குளியல் எடுத்தால் குழந்தைப் பிறக்காதா? | காமத்துக்கு மரியாதை - 210

post image

நன்றி: விகடன்இணையதளம்.

உடம்பில் எந்தப் பிரச்னையும் இல்லை; ஆனால், குழந்தை பிறக்கவில்லை. இந்தப் பிரச்னை இருக்கிற பலரும் இதற்குக் காரணமாக சொல்வது, உடல் சூட்டை. இது உண்மையா என்று பாலியல் மருத்துவர் காமராஜ் அவர்களிடம் கேட்டோம்.

infertilty

''எல்லோருக்கும் உடல் வெப்பம் ஒரே மாதிரிதான் இருக்கும். மனித உடலின் இயல்பான வெப்பநிலை 36.5 முதல் 37.5 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். இது குறைந்தாலோ, அதிகமானாலோ வாழ முடியாது. தவிர, 2 ஆயிரம் வருடத்துக்கு முந்தைய மருத்துவ முறைகளில் மனித உடலில் வருகிற வியாதிகளுக்கு உடலில் சூடு மற்றும் குளிர்ச்சி ஆகியவைதான் காரணம் என்று நம்பினார்கள். மைக்ரோஸ்கோப் கண்டுபிடித்த பிறகுதான் நம் வியாதிகளுக்குக் காரணமான பாக்டீரியா, வைரஸ்களை அடையாளம் கண்டு கொண்டோம். அதனால், குழந்தையின்மைக்குக் காரணமாக இதுபோன்ற தகவல்களை நம்ப வேண்டாம். இதுபற்றி ஆராய்ச்சிகள் செய்து நிரூபிக்கும் வரையிலும் இது நம்பிக்கை மட்டுமே.

அதே நேரம், டிரைவராக வேலை பார்ப்பவர்கள், அதிகமான வெப்பத்தை உற்பத்தி செய்யும் என்ஜின் போன்ற உபகரணங்களின் அருகே பல மணி நேரம் வேலை பார்ப்பவர்களுக்கு, விந்துப்பைகள் சூடாகி, விந்தணுக்கள் உற்பத்தி குறையும். இதற்கு காரணம் அவருடைய உடம்பின் தன்மையல்ல. வெப்பமான சூழல்.

டாக்டர் காமராஜ்

இதனால்தான் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பவர்கள் சூரியக்குளியல், நீராவிக்குளியல் எடுக்கக்கூடாது என்றும் சொல்வோம். விந்துப்பைகளின் வெப்பநிலை உடம்பின் வெப்பநிலையைவிட குறைவாக இருக்க வேண்டும். உடல் வெப்பநிலையான 37 டிகிரி விந்துப்பைக்கு வந்தால், விந்தணுக்கள் உற்பத்தி ஆவதிலேயே சிக்கல் வரும். அதனால்தான், அது இயற்கையிலே உடலைவிட்டுத் தனியாக கீழே இருக்கிறது. தவிர, அந்த உறுப்புக்குப் போகும் ரத்தத்தை குளிர்விக்க ஆண்களின் உடலில் ஒரு மெக்கானிசம் இருக்கிறது. பெண்களுக்கு இந்தப் பிரச்னை வருமா என்றால், வராது. கருத்தரிப்பதற்கான உறுப்புகள் அவர்களுடைய வயிற்றுக்குள் உடலின் வெப்பநிலையிலேயே இருப்பதால் வெப்பமான சூழலும் அவர்களுடைய கருத்தரிப்பைப் பாதிக்காது'' என்கிறார் டாக்டர் காமராஜ்.

கர்ப்ப காலத்துக்கான செக்ஸ் பொசிஷன்ஸ்... விவரிக்கும் மருத்துவர் | காமத்துக்கு மரியாதை - 211

திருமணமான புதிதிலேயே கருத்தரித்துவிட்ட தம்பதியருக்கு, தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ளும் ஆசையும் இருக்கும்; கூடவே, வைத்துக்கொண்டால் கரு கலைந்து விடுமோ என்கிற பயமும் இருக்கும். இவர்களுக்கு, எந்தெந்த டிரை... மேலும் பார்க்க

கர்ப்பமாகணும்னா இந்தக் காலங்களில் உறவு வெச்சுக்கோங்க... | காமத்துக்கு மரியாதை - 209

குளிர் காலங்களில் கருத்தரிப்பின் சதவிகிதம் அதிகமாக இருக்கும் என்கிற பாலியல் மருத்துவர் காமராஜ், அதற்கான அறிவியல் காரணங்களைவிவரிக்கிறார்.’’குளிர் காலங்களில் விந்துப்பைகள் குளிர்ச்சியாக இருப்பதால் விந்த... மேலும் பார்க்க