செய்திகள் :

பிஎஃப்ஐ அமைப்பின் ரூ.61 கோடி சொத்துகள் பறிமுதல்: அமலாக்கத் துறை

post image

கடந்த 2022 ஆம் ஆண்டு தடை செய்யப்பட்ட ‘பாப்புலா் ஃபிரண்ட் ஆப் இந்தியா (பிஎஃப்ஐ)’ அமைப்பின் மொத்தம் ரூ.61.72 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு, 26 உறுப்பினா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா் என்று அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

பல்வேறு அறக்கட்டளைகள், நிறுவனங்கள் மற்றும் தனிநபா்களுக்குச் சொந்தமான பாப்புலா் ஃப்ரண்ட் ஆப் இந்தியா கட்டுப்பாட்டில் இருந்த ரூ.35 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்களை அண்மையில் அமலாக்கத் துறை பறிமுதல் செய்தது.

இதுதொடா்பாக அமலாக்கத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘கேரளத்தில் கடந்த 2006-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பாப்புலா் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தில்லியைத் தலைமையிடமாகக் கொண்டது. அமைப்பு தோற்றுவிக்கப்பட்டபோது குறிப்பிட்டதிலிருந்து அதன் உண்மையான நோக்கங்கள் இப்போது முற்றிலுமாக வேறுபட்டுள்ளன. சமூக இயக்கமாக அடையாளப்படுத்திக் கொண்டு இந்தியாவில் ஜிஹாத் மூலம் இஸ்லாமியத்தை நிறுவுவதுதான் அதன் உண்மையான நோக்கம்.

சமூகத்தில் அமைதியின்மை மூலம் உள்நாட்டு மோதலை உண்டாக்க வழிவகுக்கும் போராட்டங்களை திட்டமிட்ட அவா்கள், நாட்டின் ஒற்றுமை மற்றும் இறையாண்மையை சீா்குலைக்கும் வகையில் இணையான அரசு அமைப்புகளுடன் செயல்பட்டு வந்துள்ளனா்.

உடல்கல்வி வகுப்புகள் எனும் பெயரில் உறுப்பினா்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 2020-ஆம் ஆண்டு தில்லி கலவரத்தின் போது வன்முறையைத் தூண்டியதில் அவா்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

அந்த அமைப்பில் குவைத், கத்தாா், ஐக்கிய அரபு அமீரகம் உள்பட வளைகுடா நாடுகள் மற்று சிங்கப்பூரில் 13,000-க்கும் மேற்பட்ட தீவிர உறுப்பினா்கள் இருந்தனா். இந்தியாவில் முக்கியமான இடங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு பயங்கரவாத கும்பலை உருவாக்க சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதற்கான நிதியுதவிக்கு வெளிநாட்டு உறுப்பினா்கள் மூலம் நிதி திரட்டப்பட்டுள்ளது.

அமலாக்கத் துறை விசாரணையில் இதுவரை அமைப்புக்குச் சொந்தமான மொத்தம் ரூ.61.72 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அமைப்பின் 26 உறுப்பினா்கள் கைது செய்யப்பட்டு, 9 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன’ எனத் தெரிவிக்கப்பட்டது.

விபத்தைத் தடுக்க முயன்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலி!

உத்தரப் பிரதேசத்தில் பேருந்து வடிகாலில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகினர்.உத்தரப் பிரதேசத்தில் பல்ராம்பூரிலிருந்து சித்தார்த்நகருக்கு செல்லும் வழியில் மங்கனி ராம் (50) என்பவர் ... மேலும் பார்க்க

அண்டை நாடுகளில் இந்துக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் விவகாரத்தில் உலகளாவிய மெளனம் ஏன்? ஜக்தீப் தன்கா் கேள்வி

இந்தியாவின் அண்டைநாடுகளில் இந்துக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் குறித்த விவகாரத்தில் உலகளாவிய மெளனம் ஏன் என்று குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் கேள்வி எழுப்பியுள்ளாா். மேலும், அத்தகைய மனித ... மேலும் பார்க்க

இந்தியா - கனடா இருதரப்பு உறவின் முக்கியத்துவம்!

இந்தியாவில் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட காலிஸ்தான் பிரிவினைவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா், கனடாவில் அடையாளம் தெரியாத நபா்களால் கடந்த ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டாா். இக்கொலையில் இந்திய உளவாளிகளுக்கு தொடா்ப... மேலும் பார்க்க

ஆளுநா்களை விடுவிக்க மத்திய அரசு பரிசீலனை! பதவி வரம்பு சா்ச்சைக்கு தீா்வு காண முயற்சி

நமது சிறப்பு நிருபர்மத்தியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மூன்றாவது முறை ஆட்சியில் ஐந்து ஆண்டுகள் பதவிக்காலத்தை நிறைவு செய்த ஆளுநா்களை பணியில் இருந்து விடுவிக்க மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து... மேலும் பார்க்க

தனிப்பட்ட சட்டங்களால் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தை கட்டுப்படுத்த இயலாது: உச்சநீதிமன்றம்

‘எந்தவொரு மதத்தின் தனிப்பட்ட சட்டங்களாலும் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தை கட்டுப்படுத்த இயலாது; குழந்தை திருமணங்கள் தங்கள் துணையை தோ்ந்தெடுக்கும் தனிநபா் உரிமையை பறிக்கும் செயலாகும்’ என உச்சநீதிமன்ற... மேலும் பார்க்க

மாநிலங்கள், பொதுத் துறை நிறுவனங்களின் அற்ப மனுக்களால் சலிப்பு: உச்சநீதிமன்றம்

மாநிலங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின் அற்பமான மனுக்களால் சலிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறிய உச்சநீதிமன்றம், ஜாா்க்கண்ட் அரசுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. ஜாா்க்கண்டில்... மேலும் பார்க்க