செய்திகள் :

முடிச்சு உட்டீங்க போங்க..! கவினை கிண்டல் நெல்சன், ரெடின் கிங்ஸ்லி!

post image

இயக்குநர் நெல்சன் திலீப் குமார் கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதன்பின் டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கினார்.

சமீபத்தில் நெல்சன் ‘ஃபிளமெண்ட் பிக்சர்ஸ்’ (filament pictures) என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனம் துவங்கியுள்ளதாக அறிவித்திருந்தார்.

நெல்சன் தயாரிப்பில் முதல் படத்தில் நாயகனாக நடிகர் கவின் நடித்துள்ளார். இப்படத்திற்கு, ‘பிளடி பெக்கர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இயக்குநர் சிவபாலன் முத்துகுமார் எழுதி இயக்கும் இப்படத்துக்கு ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். மேலும், இப்படத்தில் ரெடின் கிங்ஸ்லி பிரதான வேடத்தில் நடிக்கிறார்.

படத்தின் போஸ்டர்.

இப்படம் தீபாவளி வெளியீடாக அக். 31 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

பிச்சைக்காரராக நடித்துள்ள கவின் கவனம் பாராட்டைப் பெற்றுவருகிறார். இந்நிலையில் படத்தின் புரமோஷனுக்காக யூடியூப் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நெல்சன், கவின், ரெடின் பங்கேற்றனர்.

அதில் நெல்சன் கூறியதாவது:

கவின் மெத்தேட் ஆக்டிங் வகையிலானவர். ஒருநாள் படப்பிடிப்பு சென்று பார்த்தேன். அதில் கவின் அவர் பாட்டுக்கு திரிகிறார். சிரித்தாலும் கவின் மெதுவாகவே சிரிப்பார்.

அப்புறம்தான் தெரிகிறது அவர் அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்கிறார். இரண்டு முறை சிரித்தால் அடுத்தமுறை மெதுவாக எழுந்து சென்றுவிடுவார்.

அதற்கு பக்கத்தில் இருந்த நபர் ‘தல அவர் அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்கிறார்’ என்று கூறினார். கவின் மெத்தேட் ஆங்கிடிங் செய்கிறார் என்று எனக்கே இது இப்போதுதான் தெரியும். 5 படங்களாக கவின் இதைத்தான் செய்கிறார் என எனக்குத் தெரியாது.

இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இன்னொரு விடியோவில் ரெடின் கவின் உடனான நடிப்பு குறித்து பேசும்போது, “அவர் உர்ரென்று இருப்பார்” என செய்து காட்டுவார். அதைப் பார்த்த கவின், “முடிச்சு உட்டீங்க போங்க” என்றார். அதற்கு நேர்காணல் செய்யும் பெண் “இருங்க பாய்” என்றார்...

இந்த வசனங்கள் சமீபகாலமாக சமூகவலைதளங்களில் டிரெண்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

எல்சியூ: 10 நிமிட முன்னோட்டம்..! லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் லியோ படத்திற்குப் பின் நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து கூலி படத்தை இயக்கி வருகிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக இப்படம் உருவாகி வருகிறது.கைதி, விக்ரம், லியோ ஆகிய படங்கள்... மேலும் பார்க்க

குட் பேட் அக்லி: தென்னிந்திய வெளியீட்டு உரிமையை கைப்பற்றியது யார்?

நடிகர் அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்திற்காக வெளிநாட்டில் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். அங்கு, இவருக்கான முக்கியமான காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவருடன் அவர் குடும்பத்தினரும் தங்கி... மேலும் பார்க்க

ஆண்ட்ரியா குரலில் ஜாலியோ ஜிம்கானா படத்தின் பாடல்!

இயக்குநரும் நடிகருமான பிரபு தேவா தமிழில் அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் நடிப்பில், பேட்ட ராப் படம், உல்ஃப் என பல படங்கள் தயாராகி வருகின்றன.பிஹைண்ட்வுட்ஸ் வழங்கும் இந்தத் திரைப்... மேலும் பார்க்க

நடிகரை கன்னத்தில் அறைந்த பெண்..! வைரலாகும் விடியோ!

ஹைதராபாத்தில் லவ் ரெட்டி படக்குழு திரையரங்குக்கு சென்றபோது படத்தின் வில்லன் நடிகரை பெண் அறைந்த விடியோ வைரலாகி வருகிறது. லவ் ரெட்டி படத்தின் வில்லன் நடிகர் என்.டி.ராமசாமி படத்தில் காதல் ஜோடியை பிரித்து... மேலும் பார்க்க

ராணுவ வீரர்களுக்காக திரையிடப்பட்ட அமரன்..! குவியும் வாழ்த்து!

சிவகார்த்திகேயன் தனது 21வது படமாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்திருக்கிறார். அமரன் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம் மேஜர் முந்த் வரதராஜனின் உண்மை சம்பவத்தின் தழுவலாக உருவாக... மேலும் பார்க்க