செய்திகள் :

ரௌடி சோட்டா ராஜனின் தண்டனை நிறுத்திவைப்பு! ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்றம்!

post image

மும்பையில் கடந்த 2001-ஆம் ஆண்டு விடுதி உரிமையாளரைக் கொலை செய்த வழக்கில் பிரபல ரௌடி சோட்டா ராஜனுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை மும்பை உயர்நீதிமன்றம் நிறுத்திவைத்தது.

மேலும், ஒரு லட்சம் ரூபாய் பிணை உத்தரவாதத்துடன் ஜாமீன் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கொலை வழக்கு

மத்திய மும்பை, காம்தேவி பகுதியில் ‘கோல்டன் க்ரவுன்’ என்ற பெயரில் விடுதியொன்றை ஜெயா ஷெட்டி நடத்தி வந்தாா். கடந்த 2001-ஆம் ஆண்டு, மே 4-ஆம் தேதி நிகழ்ந்த சம்பவத்தில், விடுதியின் முதல் மாடியில் வைத்து 2 நபா்களால் ஜெயா ஷெட்டி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

விடுதி மேலாளா் அளித்த புகாரின் அடிப்படையில், மும்பை காவல்துறையினா் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். ரௌடி சோட்டா ராஜனுக்கு பணம் தர மறுத்த காரணத்தால் ஜெயா ஷெட்டி கொல்லப்பட்டதும், கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டவா்கள் சோட்டா ராஜனின் கும்பலைச் சோ்ந்தவா்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து, மிரட்டி பணம் பறித்தல், கொலை மற்றும் பிற தொடா்புடைய குற்ற வழக்கிலும் சோட்டா ராஜன் சோ்க்கப்பட்டாா். இந்த வழக்கு விசாரணை மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் சோட்டா ராஜன் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கிய சிறப்பு நீதிமன்றம், அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.

இதையும் படிக்க : அச்சுறுத்தும் டானா: 2013 பைலின் புயல் நினைவில் ஒடிசா மக்கள்! அவ்வளவு மோசமானதா?

உயர்நீதிமன்றத்தில் முறையீடு

சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சோட்டா ராஜன் தரப்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ரேவதி மொஹிதே தேரே மற்றும் பாக் சவான் அமர்வு அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட பிறகு இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

மும்பை சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைத்ததுடன் சோட்டா ராஜனுக்கு ஜாமீனும் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆனால், பத்திரிகையாளர் ஜோதிர்மே டே கொலை செய்யப்பட்ட மற்றொரு வழக்கில் சோட்டா ராஜனுக்கு சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

அந்த வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நிலையில், திகார் சிறையில் இருந்து சோட்டா ராஜா வெளிவர மாட்டார்.

ஆசிரியர் தாக்கியதில் மூளைக்காயம்: சிறுமிக்கு வென்டிலேட்டர் உதவியோடு சிகிச்சை

மும்பை: டியூசன் ஆசிரியர், காதுக்கு அருகே இரு முறை பலமாக அறைந்ததில், மூளைக் காயமடைந்த 9 வயது சிறுமி, வென்டிலேட்டர் உதவியோடு கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் பார்க்க

பல் இல்லாத.. சுற்றுச்சூழல் சட்டங்கள்: பயிர்க்கழிவுகள் எரிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம்

புது தில்லி: பற்கள் இல்லாத சுற்றுச்சூழல் சட்டங்கள் இயற்றப்பட்டிருப்பதாக மத்திய அரசு மீது உச்ச நீதிமன்றம் குற்றம்சாட்டியிருக்கிறது. பயிர்க் கழிவுகளை எரிப்பவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து அபராதம் விதி... மேலும் பார்க்க

வயநாடு தொகுதிக்காக மக்களவையில் 2 பிரதிநிதிகள் இருப்பர்.. ராகுல் சூசகம்!

நாட்டிலேயே நாடாளுமன்றத்தில் இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட ஒரே தொகுதி வயநாடு என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை தெரிவித்தார். கேரளத்தின் வயநாட்டு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் க... மேலும் பார்க்க

காமன்வெல்த் போட்டிகளை நடத்தாமல் இருப்பதே நல்லது! ப.சிதம்பரம்

பல்வேறு விளையாட்டுகள் இல்லாத காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்தாமல் இருப்பதே நல்லது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.ஆஸ்திரேலியாவில் நடைபெறுவதாக இருந்த காம... மேலும் பார்க்க

வயநாட்டில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரியங்கா

வயநாடு: கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸ் கூட்டணி சாா்பில் போட்டியிடும் பிரியங்கா வதேரா (52), இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.வயநாடு மக்களவைத் தொகுதியில் வேட்புமனு ... மேலும் பார்க்க

வயநாடு மக்களுக்குச் சேவையாற்ற வாய்ப்பு தாருங்கள்: பிரியங்கா காந்தி

வயநாடு தொகுதியில் இன்று பிரியங்கா வேட்புமனு தாக்கல் செய்யவுள்ள நிலையில், அங்கு நடைபெற்றுவரும் பிரசாரக் கூட்டத்தில் பிரியங்கா காந்தி உரையாற்றி வருகிறார். கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியின் இடைத்த... மேலும் பார்க்க