செய்திகள் :

வக்ஃப் வாரிய மசோதா: நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் திரிணமூல் எம்பிக்கு காயம்

post image

புது தில்லி: வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை ஆராயும் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் கூட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜிக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

வக்ஃப் வாரியத்தில் முஸ்லிம் பெண்கள் மற்றும் முஸ்லிம்கள் அல்லாத இரண்டு நபா்களை உறுப்பினா்களாக இடம்பெறச் செய்வது, வாரிய நிலங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கட்டாயப் பதிவு செய்வது, வக்ஃப் நிலமா, இல்லையா என்பதை மாவட்ட நிா்வாகம் மற்றும் நீதிமன்றங்கள் முடிவு செய்ய அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை சட்டத்தில் மேற்கொள்ளும் வகையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கு இடையே மக்களவையில் கடந்த ஆகஸ்ட் மாதம் இம்மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. எதிா்க்கட்சிகளின் எதிா்ப்பு மற்றும் வலியுறுத்தலால், நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்கு மசோதாவை அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, பாஜக எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையில் திமுக எம்.பி. ஆ.ராசா உள்பட 21 மக்களவை எம்.பி.க்கள், திமுக மாநிலங்களவை உறுப்பினா் முகமது அப்துல்லா உள்பட 10 மாநிலங்களவை எம்.பி.க்கள் இடம்பெற்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டு, ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதையும் படிக்க : எப்போது கரையை கடக்கிறது டானா புயல்? தயாராகிறதா ஒடிசா?

முற்றிய வாக்குவாதம்

நாடாளுமன்ற வளாகத்தில் வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை ஆராய அமைக்கப்பட்ட நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற திரிணமூல் எம்பி கல்யாண் பானர்ஜிக்கும், பாஜக எம்பி கங்கோபாத்யாவுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில், ஆவேசமடைந்த கல்யாண் பானர்ஜி, தான் வைத்திருந்த கண்ணாடிக் குவளையை வீசியதில் சிதறிய கண்ணாடித் துண்டுகள் அவரின் கையை கிழித்துள்ளது.

இதையடுத்து, கூட்ட அரங்கில் இருந்து கல்யாண் பானர்ஜியை ஓவைசி, சஞ்சய் சிங் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அழைத்துச் சென்று முதலுதவி அளித்தனர்.

ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது டானா புயல்!

மத்திய கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் தனது எ... மேலும் பார்க்க

மனைவி திருநங்கை? மருத்துவப் பரிசோதனைக்காக நீதிமன்றம் நாடிய கணவர்!

தில்லியைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது மனைவிக்கு அரசு மருத்துவமனையில், பரிசோதனை செய்து பாலினத்தை உறுதிப்படுத்துமாறு உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். தனது மனைவி திருநங்கை என குற்றம் சாட்டியு... மேலும் பார்க்க

பெங்களூருவில் கட்டுமானப் பணியில் இருந்த கட்டடம் இடிந்தது: 17 தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என அச்சம்

பெங்களூருவில் கட்டுமானப் பணியில் இருந்த கட்டடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் 17 தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கர்நாடக மாநிலம், பாபுசபாளையவில் கட்டுமானத்தில் இருந்த கட்டடம் செவ்... மேலும் பார்க்க

நிராதரவாய் உணர்கிறோம்.. பெண் மருத்துவரின் பெற்றோர் அமித் ஷாவுக்கு கடிதம்

கொல்கத்தாவில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் பெற்றோர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள்.ஆர்ஜி கர் மருத்துவமனையில் பெண் மருத்... மேலும் பார்க்க

நாக்பூரில் ஷாலிமர் எக்ஸ்பிரஸின் இரண்டு பெட்டிகள் தடம்புரண்டன

நாக்பூரில் ஷாலிமர் எக்ஸ்பிரஸின் இரண்டு பெட்டிகள் தடம்புரண்டதால் பரபரப்பு நிலவியது. மகாராஷ்டிர மாநிலம், கலாம்னா ரயில் நிலையம் அருகே சிஎஸ்எம்டி ஷாலிமர் எக்ஸ்பிரஸ் ரயிலின் எஸ் 2 மற்றும் ஒரு பார்சல் பெட்ட... மேலும் பார்க்க

டானா புயல்: மேற்கு வங்க பள்ளிகளுக்கு அக். 26 வரை விடுமுறை!

டானா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அக்டோபர் 26 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மேற்கு வங்க அரசு உத்தரவிட்டுள்ளது.வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை காற்றழுத்த தாழ்வு ... மேலும் பார்க்க