செய்திகள் :

49-வது வயதில் மீண்டும் சிக்ஸ்பேக் வைத்திருக்கிறேன்: சூர்யா

post image

நடிகர் சூர்யா ரசிகர்களுக்காக 49-வது வயதிலும் சிக்ஸ்பேக் வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா நடிப்பில் உருவான கங்குவா திரைப்பட நவ.14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கான, புரமோஷன்கள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. முக்கியமாக, வட இந்தியாவில் மட்டும் 3500 திரைகளில் படம் வெளியாவதால் அங்கு கூடுதல் கவனமெடுத்து சூர்யா, இயக்குநர் சிவா உள்பட படக்குழுவினர் நேர்காணல்களில் கலந்துகொண்டு படத்திற்கான ஆவலைத் தூண்டி வருகின்றனர்.

அப்படி, நடிகர் சூர்யா மும்பையில் நேர்காணல் நிகழ்வில் கலந்துகொண்டார். அங்கு தமிழ் ரசிகர்களுடனான உரையாடலும் நடைபெற்றது.

இதையும் படிக்க: சூர்யாவுக்கு ஜோடியாக மிருணாள் தாக்குர், ருக்மணி வசந்த்?

நேர்காணலில் பேசிய சூர்யா, “கங்குவா திரைப்படத்திற்காகக் கடுமையான உழைப்பைக் கொடுத்திருக்கிறோம். ஒரு குழந்தையைப்போல் இரண்டு ஆண்டுகளாக உருவான படமிது. மற்ற மொழிகளிலிருந்து பாகுபலி, ஆர்ஆர்ஆர், கல்கி போன்ற பிரம்மாண்ட படங்கள் வந்துவிட்டன. தமிழில் கங்குவா திரைப்படமே அதற்கான அடியை எடுத்து வைத்திருக்கிறது.

கீழடியில் 1800 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்களின் சுவடுகள் கிடைத்திருக்கின்றன. பல நாடுகளுக்கு 500 ஆண்டுகால வரலாறுகூட இல்லை. ஆனால், தமிழ் மொழியின் தொல்லியல் சான்றுகளுக்கும் இலக்கியத்துக்கும் 2500 ஆண்டுகால வரலாறு இருக்கிறது. இந்த வரலாற்றைக் கொண்டு கங்குவாவின் கதையை என்னால் உணர முடிந்தது.

நேருக்கு நேர் வெளியானபோது திரையரங்கில் விசிலடித்து உற்சாகப்படுத்திய ரசிகர்களுக்கும் எனக்கும் எந்தத் தொப்புள் கொடி உறவும் இல்லை. அவர்களின் அன்பிற்காக எதையாவதை செய்துகொண்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். காலங்கள் மாறிக்கொண்டிருக்கின்றன. எனக்கும் 49 வயதாகிவிட்டது; புதிய தலைமுறை பார்வையாளர்கள் வந்துவிட்டனர்.

ஆனாலும், அவர்களின் அன்பும் ஆதரவும் இப்போதும் எனக்குக் கிடைத்துக்கொண்டிருக்கிறது. அதற்கு, உண்மையாக இருக்க வேண்டும் என்பதால் 49-வது வயதில் கங்குவா படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக் வைத்திருக்கிறேன். இந்திய சினிமாவில் கங்குவா நீண்ட நாள் பேசப்படும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மலையாளத்தில் நடிக்கும் தமிழ் சீரியல் நடிகை!

மலர், மோதலும் காதலும் உள்ளிட்டத் தொடர்களில் நடித்து புகழ் பெற்ற சின்னத்திரை நடிகை அஸ்வதி மலையாளத் தொடரில் நடித்து வருகிறார். மலையாளத்தில் அபூர்வராகம் என்ற தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடித்து வருகிறா... மேலும் பார்க்க

நடிகர் பாலா 4-வது திருமணம்!

பிரபல நடிகர் பாலா 4-வது திருமணம் செய்துள்ளார். இயக்குநர் சிவாவின் சகோதரரான நடிகர் பாலா தமிழில் வீரம், அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெற்றார். தற்போது, மலையாளப் படங... மேலும் பார்க்க

500 மில்லியன் பார்வைகளைக் கடந்த கவர்ச்சி பாடல்..! தமன்னா பகிர்ந்த படப்பிடிப்பு விடியோ!

நடிகை தமன்னாவின் பாடல் விடியோ ஒன்று 500 மில்லியன் (50 கோடி) பார்வைகளைக் கடந்தது குறித்து பதிவிட்டுள்ளார். தமிழின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ், விஜய் சேதுபதி என பலரு... மேலும் பார்க்க

ராஜா சாப் டீசர்!

நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகும் ராஜா சாப் படத்தின் பெயர் டீசர் வெளியாகியுள்ளது. பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றவர் நடிகர் பிரபாஸ். கே.ஜி.எஃப் புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார்... மேலும் பார்க்க

நான் நடிகர் அஜித்தின் பெரிய ரசிகன்: துல்கர் சல்மான்

நடிகர் துல்கர் சல்மான் நடிகர் அஜித்குமார் குறித்து பேசியுள்ளார். துல்கர் சல்மான் நடித்துள்ள லக்கி பாஸ்கர் திரைப்படம் தீபாவளி வெளியீடாக அக். 31 ஆம் தேதி வெளியாகிறது. இதற்கான, புரமோஷன் பணிகள் தீவிரமாக ந... மேலும் பார்க்க

இராவணனாக நடிக்கிறேன்: யஷ்

நடிகர் யஷ் தன் அடுத்தடுத்த படங்கள் குறித்து பேசியுள்ளார்.கேஜிஎஃப், கேஜிஎஃப் - 2 திரைப்படங்கள் நடித்து இந்திய சினிமாவில் மிகப் பெரிய நடிகரானார் யஷ். தற்போது, மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில்... மேலும் பார்க்க