செய்திகள் :

இராவணனாக நடிக்கிறேன்: யஷ்

post image

நடிகர் யஷ் தன் அடுத்தடுத்த படங்கள் குறித்து பேசியுள்ளார்.

கேஜிஎஃப், கேஜிஎஃப் - 2 திரைப்படங்கள் நடித்து இந்திய சினிமாவில் மிகப் பெரிய நடிகரானார் யஷ். தற்போது, மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் டாக்ஸிக் (Toxic) எனப் பெயரிட்டுள்ள படத்தில் நடித்து வருகிறார்.

கேவிஎன் புரோடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்ட் பட்ஜெட்டில் உருவாகிறது. நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடிப்பதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: 49-வது வயதில் மீண்டும் சிக்ஸ்பேக் வைத்திருக்கிறேன்: சூர்யா

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய நடிகர் யஷ், “ கேஜிஎஃப் - 3 படம் எப்போது வரும் என பலரும் என்னிடம் கேட்டு வருகின்றனர். ராக்கி பாயாக என்னை ஏற்றுக்கொண்டதால் யாரும் மறக்கவில்லை. கேஜிஎஃப் - 3 பேச்சுவார்த்தையில் இருக்கிறோம். சரியான நேரம் வரும்போது அது நிகழும். டாக்ஸிக் படத்தைத் தொடர்ந்து ராமாயணா படத்தில் ராவணனாக நடிக்கிறேன்.

அதில், இணை தயாரிப்பாளராகவும் இணைந்துள்ளேன். ராவணன் கதாபாத்திரம் குறித்த நிறைய விஷயங்களை அறிந்துகொண்டேன். இதுசார்ந்த விஎஃப்எக்ஸ் பேச்சுவார்த்தைகளிலும் இருந்திருக்கிறேன். இது, சர்வதேச திரைப்படமாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.

ராஜா சாப் டீசர்!

நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகும் ராஜா சாப் படத்தின் பெயர் டீசர் வெளியாகியுள்ளது. பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றவர் நடிகர் பிரபாஸ். கே.ஜி.எஃப் புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார்... மேலும் பார்க்க

நான் நடிகர் அஜித்தின் பெரிய ரசிகன்: துல்கர் சல்மான்

நடிகர் துல்கர் சல்மான் நடிகர் அஜித்குமார் குறித்து பேசியுள்ளார். துல்கர் சல்மான் நடித்துள்ள லக்கி பாஸ்கர் திரைப்படம் தீபாவளி வெளியீடாக அக். 31 ஆம் தேதி வெளியாகிறது. இதற்கான, புரமோஷன் பணிகள் தீவிரமாக ந... மேலும் பார்க்க

49-வது வயதில் மீண்டும் சிக்ஸ்பேக் வைத்திருக்கிறேன்: சூர்யா

நடிகர் சூர்யா ரசிகர்களுக்காக 49-வது வயதிலும் சிக்ஸ்பேக் வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். நடிகர் சூர்யா நடிப்பில் உருவான கங்குவா திரைப்பட நவ.14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கான, புரமோஷன்கள... மேலும் பார்க்க

சூர்யாவுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர், ருக்மணி வசந்த்?

சூர்யாவின் 45-வது படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் சூர்யா கங்குவா திரைப்படத்தை முடித்தபிறகு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். இது, அவரது 44-வது படமாக ... மேலும் பார்க்க

இன்று எப்படி? தினப்பலன்கள்

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.23.10.2024 (புதன் கிழமை)மேஷம்:இன்று தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். தேவ... மேலும் பார்க்க

2026 காமன்வெல்த் போட்டிகள்: ஹாக்கி,கிரிக்கெட், துப்பாக்கி சுடுதல் நீக்கம்! இந்தியாவுக்கு கடும் பாதிப்பு!

இங்கிலாந்தின் கிளாஸ்கோவில் வரும் 2026-இல் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டிகளில் ஹாக்கி, கிரிக்கெட் நீக்கம், துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், ஸ்குவாஷ், பாட்மின்டன் உள்ளிட்ட முக்கிய விளையாட்டுகள் நீக்கப்ப... மேலும் பார்க்க