செய்திகள் :

வேலைவாய்ப்பில் இந்தியர்களை வரவேற்கும் ஜெர்மனி... எந்தெந்த துறைகளில் வாய்ப்பு?

post image

ஜெர்மனியில் ஏற்பட்டுள்ள தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க இந்தியர்களுக்கு விசா வழங்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

தற்போது ஆண்டுக்கு 20,000 பேருக்கு திறன்சார் தொழிலாளர்களுக்கான விசா வழங்கப்படுகிறது. இது 90,000 ஆக உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவுக்கான ஜெர்மானிய தூதர் பிலிப் அக்கர்மேன் (Philipp Ackermann), "ஜெர்மனியில் தொழிலாளர்களுக்கான தட்டுப்பாடு நிலவும் நிலையில், இந்த விசாக்கள் தகவல் தொழில்நுட்பம், நர்சிங், மற்றும் பராமரிப்பு போன்ற துறைகளில் உள்ள இடைவெளிகளை நிரப்ப உதவும்" என்று லிவ் மின்ட் தளத்துக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

ஜெர்மனியில் தொழிலாளர் பற்றாக்குறை

ஜெர்மனி பொருளாதார நிறுவனம் கூறுவதன்படி, நாடுமுழுவதும் 5,70,000 காலி பணியிடங்கள் உள்ளன.

இதற்கு முன் இந்தியாவிலிருந்து ஜெர்மனிக்கு சட்டப்பூர்வமாக இடம்பெயர்ந்தவர்களிடம் நேர்மறையான அனுபவங்கள் இருப்பதனால் இந்த தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய இந்தியா சரியான தேர்வாக இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார் பிலிப் அக்கர்மேன்.

Philipp Ackermann

"இந்த ஸ்டேட்டர்ஜிக் கூட்டணியில் திறன் சார் தொழிலாளர்களின் இடப்பெயர்வு முக்கியமானது. IT பொறியாளர்கள் முதல் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் வரை பல துறைகளில் எங்களுக்கு தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர்." என்று பேசியுள்ளார் பிலிப்.

இந்தியாவும் ஜெர்மனியும் இந்த வாரம் தொழிலாளர் இயக்கம் மற்றும் திறன் அங்கீகாரம் தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளன என்பதை தூதரக அலுவலகம் உறுதி செய்திருக்கிறது.

ஜி20 திறன்-அடிப்படையிலான இடப்பெயர்வு பாதை கட்டமைப்பின் (G20 Skills-based Migration Pathways framework) கீழ் கையெழுத்தாகும் முதல் ஒப்பந்தம் இதுவாகும். இந்த இடம்பெயர்வு பாதை கட்டமைப்பு டெல்லியில் 2023ம் ஆண்டு நடத்த ஜி20 உச்சிமாநாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தியர்களுக்கான வாய்ப்புகள்

ஜெர்மனியின் புதிய இடப்பெயர்வு கொள்கைகள், தொழில் வல்லுநர்கள் வேலைக்குச் செல்வதை எளிதாக்குவது மட்டுமல்லாமல் அதிக சம்பளமும் கிடைக்கும் என கூறப்படுகிறது. தற்போது ஜெர்மனியில் பணியாற்றும் இந்திய தொழில்வல்லுநர்களுக்கான சராசரி மாத ஊதியம் 5,400 யூரோக்கள். இந்திய மதிப்பில் 4,92,000 ரூபாய்.

இந்திய தொழில் வல்லுநர்கள்

ஜெர்மனியில் கல்வி சார்ந்த தொழிலாளர்கள் மட்டுமல்லாமல் கல்வி சாரா தொழிலாளர்களுக்கான தேவையும் தற்போது அதிகரித்திருக்கிறது. குறிப்பாக நர்சிங் போன்ற வேலைகள். இவற்றுக்கு ஜெர்மன் மொழித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம்.

புதிய இடப்பெயர்வு கொள்கைகள், ஜெர்மனிக்கு வரும் தொழில் வல்லுநர்கள் அவர்களது குடும்பத்தினரையும் அழைத்து வர அனுமதிக்கிறது. இதனால் இந்தியர்களுக்கும் சிறந்த தேர்வாக ஜெர்மனி விளங்கும் என்கின்றனர்.

ஜெர்மனி மட்டுமல்லாமல் பல பெரிய நாடுகள் தொழிலாளர் பற்றாக்குறையால் தவித்து வருகின்றன. அவற்றில் ஒன்றான ஜப்பானும் இந்தியாவில் இருந்து தொழிலாளர்களை அழைத்துவர திட்டமிடுவதாகக் கூறப்படுகிறது. ஆனால் ஜெர்மனிக்கு அவசரமான தொழிலாளர் தேவை இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜெர்மன் அரசின் முயற்சிகள்

பிப்ரவரி 2024 நிலவரப்படி, ஜெர்மனியில் சுமார் 137,000 திறமையான இந்தியர்கள் முக்கிய பதவிகளில் பணிபுரிகின்றனர். 2015-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை வெறும் 23,000 தான். இதில் குறிப்பிடத்தக்க உயர்வை கவனிக்கலாம்.

ஜெர்மன் அரசாங்கத்தின் புதிய இடப்பெயர்வு கொள்கை இந்தியர்கள் ஜெர்மனிக்கு குடியேறுவதை எளிமையாக்க பல நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

Germany - India

சுகாதாரம் (மருத்துவம்), தகவல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் ஆகிய துறைகளுக்கு திறமையான தொழிலாளர்கள் தேவை இருக்கிறது. அதே வேளையில் இந்திய தொழிலாளர்களை ஒருங்கிணைக்க ஜெர்மன் மொழியை கற்றுக்கொடுப்பதிலும் கவனம் செலுத்துகிறது ஜெர்மனி அரசாங்கம்.

ஜெர்மனியில் உயர்கல்வி படிக்க இந்தியர்களை அழைப்பது, தொழில்நுட்ப தொழில் பயிற்சி அளித்தல், ஜெர்மன் மொழியைப் பரப்புதல், விசாவுக்காக காத்திருக்கும் நேரத்தைக் குறைத்தல் என 30 நடவடிக்கைகளை ஜெர்மனி திட்டமிட்டுள்ளது. இந்தியர்களுக்கு வேலை கொடுக்கும் முக்கிய சந்தையாக ஜெர்மனி மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

Konkan Railway: Diploma, Degree படித்தவர்களுக்கு உதவித்தொகையுடன் ஒரு வருட அப்ரண்டிஸ் பயிற்சி!

Diploma, Degree படித்தவர்களுக்கு இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் Konkan Railway-ல் உதவித்தொகையுடன் ஒரு வருட அப்ரண்டிஸ் பயிற்சி வழங்கப்படுகிறது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணபிக்கலாம்.இது குறி... மேலும் பார்க்க

Career: 10, +2 படித்தவர்களுக்கு சென்னை நியாயவிலைக் கடைகளில் Packer, Salesman பணிகள்; முழு விவரங்கள்!

சென்னை மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் கட்டுப்பாட்டிலுள்ள நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனையாளர்கள் (Salesman) மற்றும் கட்டுநர்கள் (Packer) பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்வதற்கு அறிவிப்பு வெளியாகியுள... மேலும் பார்க்க

Pink Auto: ஆட்டோ வாங்க ரூ. 1 லட்சம் மானியம்; பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்

'பிங்க் ஆட்டோ' திட்டத்திற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பைச் சமூக நலத்துறை வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பெண்களின் பாதுகாப்பிற்காக ஜி.பி.எஸ் பொருத்திய ஆட்டோக்கள் வழக்கப்படும்.என்ன வேலை? ஆட... மேலும் பார்க்க

Career: சென்னை மருத்துவர்களுக்கு ரிசர்வ் வங்கி கல்லூரியில் ஆலோசகர் பணி; எப்படி விண்ணப்பிக்கலாம்?

சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கி பணியாளர்கள் கல்லூரியில் பணி.என்ன வேலை?ஒப்பந்த அடிப்படையில் மருத்துவ கன்சல்டன்ட்.மொத்த காலி பணியிடங்கள்: 2கல்வித் தகுதி: அலோபதி மருத்துவத்தில் எம்.பி.... மேலும் பார்க்க

Career: பொறியியல் படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை; எங்கே விண்ணப்பிக்கலாம்?

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) பொறியாளர் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது.என்ன வேலை?மத்திய அரசில் சிவில், எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், சிக்னல், தொலைத்தொடர்பு, ஸ்டோர் கேடர் உள்ளி... மேலும் பார்க்க

Job Updates : ITI, டிப்ளமோ, இளங்கலை படித்தவர்ளுக்கு தேசிய உர லிமிடெட்டில் காத்திருக்கிறது வேலை!

தேசிய உர லிமிடெட்டில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. என்ன வேலை?உற்பத்தி, மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் உள்ளிட்ட துறைகளில் இளநிலை இன்ஜினீயர் அசிஸ்டன்ட், ஸ்டோர் அசிஸ்டன்ட், நர்ஸ், பார்மாஸிஸ்ட், லேப் ... மேலும் பார்க்க