செய்திகள் :

தவெக மாநாடு: 234 வழக்குரைஞர்கள் நியமனம்!

post image

தவெக மாநாட்டிற்காக 234 தொகுதிகளுக்கும் பொறுப்பு வழக்குரைஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை நிலையச் செயலகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தவெக தலைமை நிலையச் செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

நமது தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க, வரும் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் நடைபெற உள்ள வெற்றிக் கொள்கைத் திருவிழாவிற்காகப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு, மாநாட்டுப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

இதையும் படிக்க: வயநாட்டில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரியங்கா

இந்நிலையில், நமது கட்சியின் சார்பில், தலைவர் அவர்களின் ஒப்புதலோடு, மாநாட்டில் பங்கேற்கும் கழகத் தோழர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் சட்ட ரீதியில் உதவிடும் வகையில் தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் மாநாட்டிற்கான தற்காலிகத் தொகுதிப் பொறுப்பு வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தத் தற்காலிகத் தொகுதிப் பொறுப்பு வழக்கறிஞர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சட்டமன்றத் தொகுதிகளிலும், அதனை ஒட்டியுள்ள சட்டமன்றத் தொகுதிகளிலும், மாநாட்டிற்கு வரும் தோழர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்கள் மற்றும் சட்டரீதியிலான உதவிகளை மேற்கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமையல் நிகழ்ச்சியில் இருந்து விலகிய நடிகை சீதா!

சமையல் எக்ஸ்பிரஸ் நிகழ்ச்சியில் இருந்து நடிகை சீதா விலகியுள்ளார்.தற்போது சமையல் தொடர்பான நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. மக்களிடையே பெரும் வரவேற்புப் பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச... மேலும் பார்க்க

மதுரை: 3 நாள்களுக்கு டாஸ்மாக் கடைகள் விடுமுறை!

மதுரை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.மருதுபாண்டியா்களின் 223-ஆவது நினைவு நாள் அரசு விழாவாக வருகிற 24-ஆம் தேதி திருப்பத்தூரில் மருதுபாண்டியா்களின் நினைவு ... மேலும் பார்க்க

ஜோசியராக மாறியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி: முதல்வர்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஜோசியராக மாறியிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னை, அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மறைந்த கும்மிடிப்பூண்டி கி.வேணு அவர்களி... மேலும் பார்க்க

கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவித்து பில்கேட்ஸ் ரூ. 420 கோடி நன்கொடை!

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இந்திய மதிப்பில் ரூ.420 கோடி நன்கொடையாக அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அரசியல் தலைவர்... மேலும் பார்க்க

பெங்களூரு விபத்து: கட்டட உரிமையாளரின் மகன் கைது!

பெங்களூரில் கட்டுமானப் பணியில் இருந்த 7 அடுக்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்து தொடர்பாக கட்டட உரிமையாளரின் மகன் மோகனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.பெங்களூரில் செவ்வாய்க்கிழமை பெய்த பலத்த மழ... மேலும் பார்க்க

தென்மாவட்டங்களுக்கு தீபாவளி சிறப்பு ரயில் அறிவிப்பு: இன்று முன்பதிவு தொடக்கம்

சென்னை: தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து கன்னியாகுமரி, செங்கோட்டை, மங்களூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இந்த ரயில்களுக்கான முன்பதிவு புதன்கிழமை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.இது குறித்த... மேலும் பார்க்க