செய்திகள் :

தென்னிந்தியாவில் குறையும் இளம் மக்கள் தொகை - அரசியல், பொருளாதார தாக்கம் என்ன?

post image

இளைஞர்களைவிட வயதானவர்களே அதிகம்...

அமராவதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஆந்திரப்பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, "இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட முடியாது என முன்பிருந்த சட்டத்தை நீக்கியிருக்கிறோம். இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே இனி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடியும் என்ற புதிய சட்டத்தைக் கொண்டுவருவோம். இந்தியாவின் மக்கள் தொகை வளர்ச்சி 1950-களில் 6.2 சதவீதமாக இருந்தது. தற்போது 2.1 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. ஆந்திராவில் இது 1.6 சதவீதமாகக் குறைந்திருக்கிறது.

சந்திரபாபு நாயுடு

ஆகவே ஒரு தம்பதி இரண்டு குழந்தைகளுக்குக் குறைவாகப் பெற்றுக்கொள்வது இளம் வயதினரின் எண்ணிக்கையை குறைக்கும். எனவே இரண்டு குழந்தைகளுக்குக் கூடுதலாக பெற்றுக்கொள்வதே மாநில மக்கள் தொகையைத் தக்கவைக்கும். மக்கள் தொகை அதிகமாக இருப்பதன் பலன் 2047வரைதான் நமக்குக் கிடைக்கும். 2047க்குப் பிறகு, ஆந்திர மாநிலத்தில் இளைஞர்களைவிட வயதானவர்களே அதிகம் இருப்பார்கள். ஜப்பான், சீனா, பல ஐரோப்பிய நாடுகளில் இது ஏற்கெனவே நடக்க ஆரம்பித்துவிட்டது. அதிக குழந்தைகளைப் பெறுவது உங்கள் பொறுப்பு. இதனை உங்களுக்காக நீங்கள் செய்யவில்லை. தேசத்தின் நலனுக்காக செய்கிறீர்கள்" என பேசினார்.

நாடாளுமன்றத் தொகுதிகள் குறையும் நிலை...

முதல்வர் ஸ்டாலின்

இதேபோல் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடத்தப்பட்ட திருமண விழாவில் பங்கேற்றுப் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், "இப்போது யாரும் 16 செல்வங்களை பெற்று வாழுங்கள் என்று வாழ்த்துவது கிடையாது. அளவோடு பெற்று வளமோடு வாழுங்கள் என்றுதான் சொல்கிறோம். ஆனால், இன்று நாடாளுமன்றத் தொகுதிகளெல்லாம் குறையும் நிலை வந்திருக்கும்போது, ஏன் அளவோடு பெற வேண்டும், நாமும் 16 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளலாமே என்று சொல்லும் நிலை வந்திருக்கிறது" என்றார். இதையடுத்து ஏற்கெனவே தென் மாநிலங்களில் மக்கள் தொகை குறைந்துவருவது குறித்த அச்சம் மேலும் அதிகரித்திருக்கிறது.

எஸ்பிஐ வெளியிட்ட ஆய்வறிக்கை...

இதுகுறித்து நம்மிடம் பேசிய விவரப்புள்ளிகள், "இந்தியாவில் கடைசியாக 2011-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. பிறகு கொரோனா பரவல் காரணமாக கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. எனவே 2011-ம் ஆண்டு கணக்கெடுப்புதான் இப்போது வரையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி வட இந்திய மக்களின் நடுத்தர வயதைவிட தென் இந்திய மக்களின் நடுத்தர வயது அதிகமாக இருக்கிறது. அதாவது கர்நாடகா 27.4%, ஆந்திரா 27.6%, தமிழ்நாடு 29.9%, கேரளாவில் 31.9% ஆக நடுத்தர இளைஞர்களின் எண்ணிக்கை இருக்கிறது.

மக்கள் தொகை

கடந்த செப்டம்பரில் எஸ்பிஐ வெளியிட்ட ஆய்வறிக்கையில், '2024-ம் ஆண்டு இந்தியாவின் மக்கள் தொகை 138 முதல் 142 கோடிக்குள் இருக்கும். தென்மாநிலங்களின் மக்கள் தொகை அதிகரிப்பு 15லிருந்து 12 சதவீதமாக குறையும். அதேநேரத்தில் வட மாநிலங்களின் பங்களிப்பு 27ல் இருந்து 29 சதவீதமாக அதிகரிக்கும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வரி பகிர்வு, மக்கள் தொகைக்கு ஏற்ப நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்படும் போது சிக்கல் போன்றவை தென் மாநிலங்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. எனவேதான் இரண்டு மாநில முதல்வர்களும் மக்கள் தொகை குறித்து கவலை தெரிவித்திருக்கிறார்கள்" என்றனர்.

அரசியல், பொருளாதாரத்தில் தாக்கம் வருமா?

தென்னிந்தியாவில் குறையும் இளம் மக்கள் தொகையால் அரசியல், பொருளாதாரத்தில் ஏற்பட போகும் தாக்கம் என்ன? என்கிற கேள்விக்கு பதிலளித்த மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன்,

"ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு சொன்ன காரணம் வேறு, தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் சொல்லிய காரணம் வேறு.

சந்திரபாபு நாயுடு கருத்து

இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் பொருளாதாரம் உயரும். பொருள்களின் விற்பனை அதிகரிக்கும். வயதானவர்களின் எண்ணிக்கை அதிகமானால் அவர்களை பார்த்துக்கொள்வது சிரமம் என்பதுதான் சந்திரபாபு நாயுடுவின் கருத்து.

ஸ்டாலின் கருத்து

ஆனால் மக்கள் தொகையின் அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகள் சீரமைக்கப்பட்டால் தமிழகத்துக்கு சிக்கல் ஏற்படும் என்கிற கவலையில்தான் முதல்வர் ஸ்டாலின் பேசியிருக்கிறார். அதாவது தொகுதி சீரமைப்பின் காரணமாக உத்திரபிரதேசத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை 80-ல் இருந்து 120 ஆகவும், தமிழகத்தில் 39 தொகுதிகள் 35 ஆக குறையலாம்.

குபேந்திரன்

தொகுதி மறுசீரமைப்பு

அதாவது 1975-ம் ஆண்டில் இருந்துதான் மக்கள் தொகை கட்டுப்பாட்டுத் திட்டங்களும் தீவிரமாக செயல்படுத்தப்பட்டன. அப்போது தொகுதி மறுசீரமைப்பை அடுத்த 25 ஆண்டுகளுக்கு மேற்கொள்ளக்கூடாது என சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் நோக்கம் மக்கள் தொகை கட்டுப்பாட்டை சரியாக பின்பற்றிய மாநிலம் இதனால் பாதிக்கப்படக்கூடாது என்பதுதான். 2001-ம் ஆண்டு 25 ஆண்டு காலம் நிறைவடைந்தது. அப்போது மேலும் 25 ஆண்டுகளுக்கு தொகுதிகள் மறுசீரமைப்பை தள்ளிவைத்தார்கள். 2026-க்குள் இந்தியாவின் அனைத்துப் பகுதியிலும் மக்கள் தொகை நிலைபெற்றுவிடும் என்பதால்தான் இந்த முடிவு அப்போது எடுக்கப்பட்டது. இந்தசூழலிதான் மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதிகளை சீரமைக்க பா.ஜ.க தீவிரம் காட்டி வருகிறது. இதனால்தான் முதல்வர் ஸ்டாலின் தற்போது கவலை தெரிவித்துள்ளார்.

குழந்தைகளை வளர்க்க போராடுவது யார்?

ஆனால் இந்த காரணத்துக்காக இரண்டு குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள் என சொல்வது சரியாக இருக்காது. ஏனெனில் இன்று ஒரு குழந்தைக்கு கல்வி கொடுப்பதற்கே மக்கள் மிகவும் கடினமான சூழலை சந்திக்க வேண்டிய நிலை இருக்கிறது.

அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்குத்தான் புத்தகம், உணவு, உடை போன்றவற்றை அரசு கொடுக்கிறது. ஆனால் நடுத்தர, மேல் நடுத்த குடும்பங்களில் இரண்டு குழந்தைகளை படிக்க வைப்பது என்பது மிகவும் கடினம். எனவே அந்ததந்த குடும்பங்களுக்குத்தான் எத்தனை குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது தெரியும். எது குடும்பத்துக்கு நெருக்கடி கொடுக்கும் என்பதை பெற்றோர்கள்தான் முடிவு செய்ய முடியும். அரசியல் கட்சி தலைவர்கள் முடிவு செய்துவிட முடியாது.

தென்னிந்திய மாநிலங்கள்

ஒருவேளை இரண்டு குழந்தைகளும் படித்து சரியான வேலைக்கு செல்லவில்லையென்றால் அந்த குடும்பம் மேலும் மோசமான நிலைக்கு சென்றுவிடும். ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கொடுக்க முடியாத நிலையில் அரசு இருக்கிறது. எனவே இந்த முடிவை தலைவர்கள் எடுக்க முடியாது.

ஆனால் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்துவிடாமல் இருக்க அரசியல் கட்சிகள் போராடலாம். அதற்கு மக்களையும் அழைக்கலாம். ஆனால் மக்கள் குழந்தைகளை பெற்ற பிறகு, அதை வளர்க்க போராடுவது யார்?. அதேநேரத்தில் இந்தியாவில் மக்கள் தொகை அதிகரிப்பு பெரிய பிரச்னையாக இருக்கிறது. எனவே மக்கள் தொகை அதிகமுள்ள மாநிலங்கள் மக்கள் தொகைக் கட்டுப்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மேலும் தென் மாநிலங்களில் இருந்து கிடைக்கும் வரி வட மாநிலங்களுக்கு அதிகம் செல்வதாக அரசியல் கட்சிகள் கருதுகின்றன. இந்த பிரச்னையை தீர்க்க பிரத்தியேக திட்டங்களை வகுக்க வேண்டும். இவ்வளவு சதவீதம்தான் வட மாநிலங்களுக்கு என்பதை உறுதி செய்ய வேண்டும். அதைவிடுத்து இரண்டு குழந்தைகளைப் பெறச் சொல்வது சரியான கருத்தாக இருக்காது" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/crf99e88

EPS அணிக்கு IT... OPS அணிக்கு ED - Raid பின்னணி என்ன? | MK STALIN | MODI | Priyanka |Imperfect Show

* ED Raid: தனியார் நிறுவனத்திடம் லஞ்சம் வாங்கிய வழக்கு; வைத்தியலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை* எடப்பாடியின் நெருங்கிய நண்பர் வீட்டில் ஐடி சோதனை!* மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கு மரி... மேலும் பார்க்க

திமுக கூட்டணி பலத்தை வலுவிழக்கச் செய்யும் முனைப்பில் எடப்பாடி - சாத்தியம்தானா?

விமர்சிக்கும் எடப்பாடி!திமுகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் தொடர்ந்து மனக்கசப்பு ஏற்படுவது அதிகரித்துக்கொண்டே போகிறது. திமுக கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை என்று அவர்களே சொன்னாலும் அவை அனைத... மேலும் பார்க்க

சென்னை: ``பக்கத்து கடை அட்ரஸை வச்சுதான் `ஆதார் கார்டு' வாங்கிருக்கோம்'' - வீடற்றவர்களின் நிலை!

இந்திய அரசியலமைப்பின் பிரிவு 21-ன் படி மக்களுக்குக் கௌரவமாக வாழ்வதற்கான அடிப்படை உரிமை இருக்கிறது.அவர்களுக்கு உறைவிடம் அளிக்க வேண்டியது அரசின் கடமை.பெரிய காம்பவுண்ட் சுவரை ஒட்டி மற்ற மூன்று பக்கமும் த... மேலும் பார்க்க

Health: வைட்டமின், மினரல்ஸ், நார்ச்சத்து... வீணாகாமல் சாதம் வடிப்பது எப்படி? டயட்டீஷியன் விளக்கம்!

அரிசியின் மேல் பகுதியில்தான் நார்ச்சத்துடன் வைட்டமின் மற்றும் மினரல்ஸ் சத்துகள் நிறைய இருக்கின்றன என பல மருத்துவர்களும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அரிசியை எப்படி சமைத்தால், அந்த சத்துகள் நமக்... மேலும் பார்க்க

BRICS: ``ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்த இந்தியா உதவும்'' -பிரதமர் மோடி பேச்சு... நன்றி கூறிய புதின்!

ரஷ்ய - உக்ரைன் போர் தொடங்கி 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. தற்போது, இந்த போரை நிறுத்த, முடித்து வைப்பதற்கான முன்னெடுப்புகளும், பேச்சுவார்த்தைகளும் அதிகம் நடந்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில், பிரதமர்... மேலும் பார்க்க

Doctor Vikatan: எடை குறைவான குழந்தை... பொட்டுக்கடலை மாவுக் கஞ்சி உடல் எடையை அதிகரிக்குமா?

Doctor Vikatan:என்னுடைய 10 வயது மகள் மிகவும் மெலிந்த உடல்வாகுடன் இருக்கிறாள். இந்த வயதுக் குழந்தைகளுக்கு பொட்டுக்கடலை மாவில் கஞ்சி தயாரித்துக் கொடுக்கலாமா.... அதனால் அவர்களது உடல் எடை அதிகரிக்குமா... ... மேலும் பார்க்க