செய்திகள் :

BRICS: ``ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்த இந்தியா உதவும்'' -பிரதமர் மோடி பேச்சு... நன்றி கூறிய புதின்!

post image

ரஷ்ய - உக்ரைன் போர் தொடங்கி 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. தற்போது, இந்த போரை நிறுத்த, முடித்து வைப்பதற்கான முன்னெடுப்புகளும், பேச்சுவார்த்தைகளும் அதிகம் நடந்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில், பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் புதினும் பிரிக்ஸ் மாநாட்டில் சந்தித்து பேசியுள்ளனர்.

தற்போது இந்தியா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் உறுப்பினர்களாக உள்ள பிரிக்ஸ் கூட்டமைப்பின் 16-வது உச்சி மாநாடு ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, நேற்று பிரதமர் மோடி ரஷ்யா சென்றார்.

ரஷ்யா சென்ற மோடி

இதை தொடர்ந்து, பிரதமர் மோடி மற்றும் அதிபர் புதினும் சந்தித்துக்கொண்டு பேசினார்கள். நேற்று, பிரிக்ஸ் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, "ரஷ்யா - உக்ரைன் போர் குறித்த தகவல்களை நான் தொடர்ந்து தெரிந்துக்கொண்டு உள்ளேன். நான் முன்னரே கூறியது போல, நாங்கள் போரை அமைதி மூலம் தான் நிறுத்த முடியும் என்பதை நம்புகிறோம். அமைதியை நிலைநிறுத்த இந்தியா முழு ஆதரவு வழங்கும். ரஷ்ய - உக்ரைன் போரில் அமைதி காண இந்தியா முழு ஒத்துழைப்பையும் வழங்கும்.

கடந்த மூன்று மாதங்களில், நான் ரஷ்யாவிற்கு வருவது இது இரண்டாவது முறை ஆகும். இது இந்தியாவுக்கும் - ரஷ்யாவுக்கும் இடையே உள்ள நட்பையும், ஒருங்கிணைப்பையும் காட்டுகிறது. ஜூலை மாதம் மாஸ்கோவில் நடந்த ஆண்டு மாநாட்டில் அனைத்து துறைகளிலும் இரு நாடுகளின் ஒத்துழைப்பும் பலமாகி உள்ளது.

கடந்த 15 ஆண்டுகளில், பிரிக்ஸ் தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளது. இப்போது பல நாடுகள் பிரிக்ஸில் இணைய ஆர்வாம் காட்டுகின்றனர். நாளை நடக்கும் இந்த மாநாட்டின் தொடர்ச்சியில் கலந்துக்கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்" என்று பேசினார்.

நாளையும் கலந்துக்கொள்ள...

புதின் பேசுகையில், "கடந்த ஜூலை மாதம் மோடியுடனான சந்திப்பில், பல்வேறு விஷயங்களை குறித்து கலந்தாலோசித்தோம். மேலும் பல முறை தொலைபேசியில் இருவரும் பேசிக்கொண்டோம். என் அழைப்பை ஏற்று தற்போது கசானுக்கு மோடி வருகை தந்ததற்கு நன்றி.

இந்தியா - ரஷ்யா நாடுகளுக்கு இடையே சிறப்பு வாய்ந்த கூட்டமைப்பு இருக்கிறது. இந்த கூட்டமைப்பு இன்னும் தொடரும்" என்று கூறினார்.

மேலும், "மொழிபெயர்ப்பாளர்கள் இல்லாமலே, நான் பேசுவதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். அந்தளவுக்கு நமது உறவு பலமானது" என்று மோடி - புதின் நட்பு குறித்து புதின் நகைச்சுவையாக கூறியுள்ளார்.

இன்று தொடரும் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜிங் பிங்கிற்கு இடையே பேச்சுவார்த்தை நடக்கும் என்று இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி உறுதி செய்துள்ளார்.

2020-ம் ஆண்டு முதல் நடந்து வந்த லடாக் எல்லை பிரச்னை நேற்று முடிவுக்கு கொண்டு வந்ததையடுத்து நிகழப்போகும் இந்த சந்திப்பு, உலக அளவில் முக்கியமாக கவனிக்கப்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

Health: வைட்டமின், மினரல்ஸ், நார்ச்சத்து... வீணாகாமல் சாதம் வடிப்பது எப்படி? டயட்டீஷியன் விளக்கம்!

அரிசியின் மேல் பகுதியில்தான் நார்ச்சத்துடன் வைட்டமின் மற்றும் மினரல்ஸ் சத்துகள் நிறைய இருக்கின்றன என பல மருத்துவர்களும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அரிசியை எப்படி சமைத்தால், அந்த சத்துகள் நமக்... மேலும் பார்க்க

Doctor Vikatan: எடை குறைவான குழந்தை... பொட்டுக்கடலை மாவுக் கஞ்சி உடல் எடையை அதிகரிக்குமா?

Doctor Vikatan:என்னுடைய 10 வயது மகள் மிகவும் மெலிந்த உடல்வாகுடன் இருக்கிறாள். இந்த வயதுக் குழந்தைகளுக்கு பொட்டுக்கடலை மாவில் கஞ்சி தயாரித்துக் கொடுக்கலாமா.... அதனால் அவர்களது உடல் எடை அதிகரிக்குமா... ... மேலும் பார்க்க

``காமராஜர் தமிழ் பேரினத்தின் சொத்து!'' -கண்டனங்களுக்குப் பின் வருத்தம் தெரிவித்த திமுக ராஜீவ் காந்தி

திமுக இளைஞரணி அலுவலகத்தில் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சி சமீபத்தில் நடந்திருந்தது. அந்த நிகழ்ச்சியில் பேசிய திமுக இளைஞரணி தலைவர் ராஜீவ் காந்தி, "ராஜாஜி மூடிய பள்ளிகளைத் தான் காமராஜர் திறந்தார். அவர... மேலும் பார்க்க

``தீபாவளி பண்டிகை நேரத்தில் பாதிப்பை சந்தித்துள்ளோம்..'' - விவசாயிகள் வேதனை!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்தது. குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் பெய்த மழையால் வயல்களில் தேங்கிய மழை நீரால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள், நடவு செய்யப்பட்ட ப... மேலும் பார்க்க

TVK மாநாடு ஏற்பாடுகள் Updates | ராஜ கண்ணப்பன் அரசு நிலத்தை அபகரித்தாரா? | MODI | Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* "ஓவர் போதையிலிருந்ததால்..." - போலீசை மிரட்டிய நபர்கள்? #ViralVideo* சென்னை: தீபாவளி 18,000 காவலர்கள் பாதுகாப்பு? * "ஸ்டாலினே சுதந்திர தினத் தேதி தெரியாமல் திணறுகிறார்''... மேலும் பார்க்க

ரயில்வே வழங்கும் கம்பளி போர்வைகள் சரியாக சலவை செய்யப்படுகிறதா... RTI-ல் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

நாம் ரயிலில் பயணிக்கும்போது இந்திய ரயில்வேத் துறை சார்பாக தூங்குவதற்கான தலையணையும் போர்வையும் வழங்கப்படும். இதை உபயோகிப்பதில் பலருக்கும் எந்த சிக்கலும் இல்லை என்றாலும், சிலர் இவற்றை ஒதுக்கி விட்டு தங்... மேலும் பார்க்க