செய்திகள் :

வயநாட்டில் ராகுல், பிரியங்கா பேரணி!

post image

கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியின் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவை தாக்கல் செய்ய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பேரணியாக செல்கிறார்.

ஆயிரக்கணக்கான தொண்டர்களுக்கு மத்தியில், பிரியங்கா காந்தியுடன், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் வயநாட்டின் முன்னாள் எம்பியுமான ராகுல் காந்தியும் பேரணியில் கலந்து கொண்டுள்ளார்.

வயநாடு மக்களவைத் தொகுதிக்கு நவம்பா் 13-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற உள்ளது. இதில் பிரியங்கா காந்தி முதல் முறையாக களம் காண்கிறாா்.

இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு பேரணியாகச் சென்று இன்னும் சற்றுநேரத்தில் பிரியங்கா காந்தி வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளார்.

வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்வில், காங்கிரஸ் தலைவர் மல்லிகாா்ஜுன காா்கே, பிரியங்காவின் தாயாரும் காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சோனியா காந்தி, சகோதரா் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதையும் படிக்க : உச்சகட்ட பாதுகாப்பில் தமிழகம்! 8 மாவட்டங்களில் உளவுத் துறை கண்காணிப்பு!

மக்களவைத் தொகுதியில் உத்தர பிரதேசத்தின் ரே பரேலி, கேரளத்தில் வயநாடு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்ட ராகுல் காந்தி வெற்றி பெற்றாா்.

ரே பரேலி தொகுதியைத் தக்கவைத்த அவா், வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தாா். அதைத் தொடா்ந்து, அத் தொகுதிக்கு இடைத்தோ்தல் நடைபெறுகிறது.

காமன்வெல்த் போட்டிகளை நடத்தாமல் இருப்பதே நல்லது! ப.சிதம்பரம்

பல்வேறு விளையாட்டுகள் இல்லாத காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்தாமல் இருப்பதே நல்லது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.ஆஸ்திரேலியாவில் நடைபெறுவதாக இருந்த காம... மேலும் பார்க்க

வயநாட்டில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரியங்கா

வயநாடு: கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸ் கூட்டணி சாா்பில் போட்டியிடும் பிரியங்கா வதேரா (52), இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.வயநாடு மக்களவைத் தொகுதியில் வேட்புமனு ... மேலும் பார்க்க

வயநாடு மக்களுக்குச் சேவையாற்ற வாய்ப்பு தாருங்கள்: பிரியங்கா காந்தி

வயநாடு தொகுதியில் இன்று பிரியங்கா வேட்புமனு தாக்கல் செய்யவுள்ள நிலையில், அங்கு நடைபெற்றுவரும் பிரசாரக் கூட்டத்தில் பிரியங்கா காந்தி உரையாற்றி வருகிறார். கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியின் இடைத்த... மேலும் பார்க்க

திரிஷ்யம் பட பாணியில் பெண் கொலை! உடலை புதைத்த ராணுவ வீரர் கைது!

திரிஷ்யம் பட பாணியில் பெண்ணை கொலை செய்து சிமென்ட் தளத்தின்கீழ் புதைத்த ராணுவ வீரரை காவல்துறையினர் கைது செய்தனர். ராணுவவீரர்ராணுவ வீரரான அஜய் வான்கடே(33) மற்றும் ஜியோட்ஸ்னா ஆக்ரே (32) இருவரும் திருமண த... மேலும் பார்க்க

ரௌடி சோட்டா ராஜனின் தண்டனை நிறுத்திவைப்பு! ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்றம்!

மும்பையில் கடந்த 2001-ஆம் ஆண்டு விடுதி உரிமையாளரைக் கொலை செய்த வழக்கில் பிரபல ரௌடி சோட்டா ராஜனுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை மும்பை உயர்நீதிமன்றம் நிறுத்திவைத்தது.மேலும், ஒரு லட்சம் ரூபாய் பிணை உத... மேலும் பார்க்க

அச்சுறுத்தும் டானா: 2013 பைலின் புயல் நினைவில் ஒடிசா மக்கள்! அவ்வளவு மோசமானதா?

வங்கக் கடலில் உருவாகியிருக்கும் டானா புயலானது ஒடிசா அருகே கரையை கடக்கும் என முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், 2013ஆம் ஆண்டு ஒடிசாவை புரட்டிப்போட்ட பைலின் புயலின் நினைவில் மக்க... மேலும் பார்க்க