செய்திகள் :

தரைப்பாலத்தில் தேங்கும் தண்ணீர்; அச்சத்துடனே பயணிக்கும் மக்கள் - கண்டுகொள்வார்களா அதிகாரிகள்?

post image

திண்டுக்கல் மாவட்டம், பழைய கரூர் சாலையில் மக்கள் அதிகம் பயணிக்கும் பிரதான தரைப்பாலம் ஒன்று உள்ளது. ரயில்வே கேட் அடிக்கடி போடுவதால் மக்கள் சிரமமின்றி பயணம் செய்ய இந்த தரைப்பாலம் கட்டப்பட்டது. ஆனால் இந்த பாலம்தான் தற்போது அதிக சிரமத்தை ஏற்படுத்துவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இது குறித்து அப்பகுதி மக்களிடம் விசாரித்தபோது, "கடந்த ஆறு வருடங்களாக இந்த பாலம் கட்டப்பட்டு வந்தது. ஆனால் கட்டி முடித்ததிலிருந்து பாலத்தில் தண்ணீர் கசிந்து கொண்டு தேங்கியபடியே இருக்கின்றது. மேலும் தரைப்பாலத்தில் உயரம் குறைவாக இருப்பதால் பேருந்துகள் பாலத்தின் வழியாக செல்வது சிரமமாக உள்ளது. அதுவும் மழைக்காலங்களில் தண்ணீர் அதிக அளவு கசிந்து தேங்கி நிற்கிறது. அதனால் சாலையும் அதிகமாக பாசனம் பிடித்துவிட்டது. குண்டும் குழியுமாக மிகவும் பழுதடைந்து விட்டது" என்கிறார்கள்.

மழைக்காலங்களில் அந்த குழிகளும் நிரம்பி விடுவதால் அதிக மக்கள் அங்கே தவறி விழுவதும் உண்டு. அதிலும் குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்வோர் அதிக சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் இது தரைப்பாலமா அல்லது ட்ரைனேஜா என்று மக்கள் புலம்பித் தீர்க்கின்றனர்.

இப்படி எந்நேரமும் தண்ணீர் அங்கு தேங்கி நிற்பதால், பாசி படர்ந்து காணப்படுகிறது. சில நேரங்களில் வாகனங்களில் செல்வோர் வழுக்கி விழுந்து, காயமடையும் சம்பவங்களும் நடக்கின்றன.

இந்த தரைப்பாலத்தை பயன்படுத்துவது ஆபத்தானது என்ற போதிலும், மாற்றுப் பாதையில் செல்ல வெகு நேரம் தேவைப்படுவதால், இதுதான் மக்களுக்கு ஏதுவானதாக இருக்கும். பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டு ஓராண்டுகூட ஆகாத நிலையில், அடிக்கடி தண்ணீர் கசிந்து தேங்கி நிற்பதால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

அதனால் பல சமயம் இந்த தரைப்பால போக்குவரத்து முடக்கப்படுவதும் உண்டு. இருந்தபோதிலும், காலை நேரத்தில் பணிக்கு செல்பவர்கள், பள்ளிக்கு செல்பவர்கள், இதை தான் அதிகமாக பயன்படுத்துகின்றனர்.

மக்களின் சிரமத்தை குறைக்க கட்டப்பட்ட தரைப்பாலமே, தற்போது மக்களுக்கு அதிக சிரமத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. எனவே அரசானது உரிய நடவடிக்கையை மேற்கொண்டு இந்த தரைப்பாலத்தை சரி செய்ய வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையத்தின் அவல நிலை! - சீரமைப்பார்களா அதிகாரிகள்?

திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையம் தற்போது குப்பைகள் கொட்டும் இடமாக மாறி, கழிவுநீர் உள்ளே செல்லும் அவல நிலை உருவாகி உள்ளது. மேலும், இரவு நேரங்களில் குற்றச் சம்பவங்கள் நடக்கும் சமூக விரோதிகளின் கூடாரம... மேலும் பார்க்க

Bomb Threat: விமான நிறுவனங்களுக்குத் தலைவலி தரும் வெடிகுண்டு மிரட்டல்கள்; அலைக்கழிக்கப்படும் பயணிகள்

கடந்த சில வாரங்களாக ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் அன்றாடம் தவறாமல் இடம்பெறும் ஒரு செய்தி... விமானங்களுக்கு விடுக்கப்படும் வெடிகுண்டு மிரட்டல்கள். இவற்றின் திடீர் அதிகரிப்பால் அண்மைக் காலமாக ஏராள... மேலும் பார்க்க

வயநாடு: முதன் முறையாகத் தேர்தலில் களமிறங்கும் பிரியங்கா காந்தி; வேட்புமனு தாக்கலுடன் இன்று பேரணி!

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் வயநாடு மற்றும் ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டு, இரண்டிலும் வெற்றி பெற்றார் ராகுல் காந்தி. விதிமுறைகளின் ஏதாவது ஒரு தொகுதிய... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: சரிந்துவிழும் நிலையில் மின்கம்பம்... அச்சத்தில் மக்கள்.. நடவடிக்கை எடுக்குமா அரசு?

திருப்பத்தூரில் கடந்த ஆண்டு நெடுஞ்சாலையின்நடுவே வரிசையாக மின் விளக்கு கம்பங்கள் அமைக்கப்பட்டது. இதில், பேருந்து நிலையத்தின் முன் அமைக்கப்பட்ட மின் விளக்கு கம்பங்களில் ஒன்றுதற்போது சேதமடைந்தது, பொதுமக்... மேலும் பார்க்க

BSNL: இனி நோ `கனெக்டிங் இந்தியா', ஒன்லி `கனெக்டிங் பாரத்'; காவி மயமாக்கப்பட்ட பி.எஸ்.என்.எல் லோகோ!

மத்திய அரசின் பொது ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதியின் (Prasar Bharati), தூர்தர்ஷன் இந்தி செய்தி சேனலின் லோகோ நிறம், கடந்த ஏப்ரலில் காவி நிறத்துக்கு மாற்றப்பட்டது. அந்த சமயத்தில் இதற்கு அரசியல் எதிர... மேலும் பார்க்க

PMK: ``தீபாவளிக்காக தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்குவது தனியார்மயமே'' - அன்புமணி

தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 31-ம் தேதி வரவிருக்கிறது. லட்சக் கணக்கான மக்கள் சென்னையிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பவுள்ளனர். இதற்கான அரசு போக்குவரத்து முன்பதிவுகள் இரண்டு மாதங்களுக்கு முன்பே தொடங்... மேலும் பார்க்க