செய்திகள் :

வயநாடு: முதன் முறையாகத் தேர்தலில் களமிறங்கும் பிரியங்கா காந்தி; வேட்புமனு தாக்கலுடன் இன்று பேரணி!

post image

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் வயநாடு மற்றும் ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டு, இரண்டிலும் வெற்றி பெற்றார் ராகுல் காந்தி. விதிமுறைகளின் ஏதாவது ஒரு தொகுதியில் எம்.பி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதால், வயநாடு தொகுதி எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார்.

இதனைத் தொடர்ந்து வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேர்தல் நவம்பர் 13-ம் தேதி நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைமை‌ அறிவித்தது.

காங்கிரஸ், கேரளாவின் இடது ஜனநாயக முன்னணி மற்றும் பா.ஜ.க‌‌., என வயநாடு தொகுதியில் மும்முனை போட்டி நிலவுகிறது.

ராகுல் காந்தி - பிரியங்கா காந்தி - வயநாடு

பா.ஜ.க., தரப்பில் நவ்யா ஹரிதாஸ், இடது ஜனநாயக முன்னணி சார்பில் சத்யன் போட்டியிடுகிறார். அரசியல் பாரம்பரியம் கொண்ட நேரு குடும்ப வாரிசான பிரியங்கா காந்தி முதல் முறையாகத் தேர்தல் அரசியலில் போட்டியிடுவது அக்கட்சியினரிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில், இன்று (அக்டோபர் 23) வேட்புமனு தாக்கல் செய்கிறார் பிரியங்கா காந்தி. வேட்புமனு தாக்கலை முன்னிட்டு வயநாட்டில் இன்று நடைபெற உள்ள பிரமாண்ட பேரணியில் பிரியங்கா காந்தியுடன் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலரும் பங்கேற்க உள்ளனர். அடுத்த 10 நாட்களுக்கு வயநாட்டில் தங்கி தீவிர பிரசாரத்தில் ஈடுபட‌ உள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://bit.ly/47zomWY

திருப்பத்தூர்: சரிந்துவிழும் நிலையில் மின்கம்பம்... அச்சத்தில் மக்கள்.. நடவடிக்கை எடுக்குமா அரசு?

திருப்பத்தூரில் கடந்த ஆண்டு நெடுஞ்சாலையின்நடுவே வரிசையாக மின் விளக்கு கம்பங்கள் அமைக்கப்பட்டது. இதில், பேருந்து நிலையத்தின் முன் அமைக்கப்பட்ட மின் விளக்கு கம்பங்களில் ஒன்றுதற்போது சேதமடைந்தது, பொதுமக்... மேலும் பார்க்க

BSNL: இனி நோ `கனெக்டிங் இந்தியா', ஒன்லி `கனெக்டிங் பாரத்'; காவி மயமாக்கப்பட்ட பி.எஸ்.என்.எல் லோகோ!

மத்திய அரசின் பொது ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதியின் (Prasar Bharati), தூர்தர்ஷன் இந்தி செய்தி சேனலின் லோகோ நிறம், கடந்த ஏப்ரலில் காவி நிறத்துக்கு மாற்றப்பட்டது. அந்த சமயத்தில் இதற்கு அரசியல் எதிர... மேலும் பார்க்க

PMK: ``தீபாவளிக்காக தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்குவது தனியார்மயமே'' - அன்புமணி

தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 31-ம் தேதி வரவிருக்கிறது. லட்சக் கணக்கான மக்கள் சென்னையிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பவுள்ளனர். இதற்கான அரசு போக்குவரத்து முன்பதிவுகள் இரண்டு மாதங்களுக்கு முன்பே தொடங்... மேலும் பார்க்க

ஆம்பூர் மூதாட்டி பெயரில் ரூ.2.39 கோடிக்கு GST மோசடி; கேரளாவில் பரிவர்த்தனை - நடந்தது என்ன?!

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் கிருஷ்ணாபுரம், காமராஜர் 3-வது தெருவில் வசிக்கிறார் மூதாட்டி ராணி பாபு. அதே பகுதியிலுள்ள தோல் தொழிற்சாலை ஒன்றில் தூய்மைப் பணியாளராக வேலைச் செய்து வரும் ராணி பாபு பெயரில்... மேலும் பார்க்க

`எல்.முருகனின் விஷமத்தைவிட அவர் கருத்து ஆபத்தானது’ - ஆதரவு தெரிவித்த சீமானை விசிக தாக்கும் பின்னணி?

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஒருபக்கம் விமர்சிக்க, மறு பக்கம் முருகனுக்கு எதிராக கடும் எதிர்வினையாற்றினார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பா... மேலும் பார்க்க

அட்டைப்படம்

அட்டைப்படம் - விகடன் ப்ளஸ் மேலும் பார்க்க