செய்திகள் :

சூர்யாவுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர், ருக்மணி வசந்த்?

post image

சூர்யாவின் 45-வது படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா கங்குவா திரைப்படத்தை முடித்தபிறகு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். இது, அவரது 44-வது படமாக உருவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, சூர்யா யார் படத்தில் நடிப்பார் என எதிர்பார்ப்பு எழுந்தது.

இயக்குநர் வெற்றிமாறனுடன் வாடிவாசல் படத்தில் இணைகிறாரா இல்லை சுதா கொங்காராவுடனான பேச்சுவார்த்தை துவங்குமா என எதிர்பார்க்கப்பட்டது.

இதையும் படிக்க: சூர்யாவை சந்தித்த அஜித்..! இயக்குநர் சிவா குறித்து அஜித் கூறியதென்ன?

ஆனால், முற்றிலும் எதிர்பாராத வகையில் யாவின் 45-வது படத்தை நடிகர் ஆர். ஜே. பாலாஜி இயக்கவுள்ளதாவும் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதாகவும் அறிவிப்பு வெளியானது. இப்படத்தை டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதத்தில் துவங்கவுள்ளது. இந்த நிலையில், இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் மற்றும் ருக்மணி வசந்த் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சப்த சாகரதாச்சே எல்லோ (கன்னடம்) படத்தின் மூலம் பெரிதாகக் கவனம் பெற்ற ருக்மணி வசந்த், தமிழில் விஜய் சேதுபதியுடன் ஏஸ் என்கிற படத்திலும் சிவகார்த்திகேயனுடன் எஸ்கே - 23 படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இராவணனாக நடிக்கிறேன்: யஷ்

நடிகர் யஷ் தன் அடுத்தடுத்த படங்கள் குறித்து பேசியுள்ளார்.கேஜிஎஃப், கேஜிஎஃப் - 2 திரைப்படங்கள் நடித்து இந்திய சினிமாவில் மிகப் பெரிய நடிகரானார் யஷ். தற்போது, மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில்... மேலும் பார்க்க

49-வது வயதில் மீண்டும் சிக்ஸ்பேக் வைத்திருக்கிறேன்: சூர்யா

நடிகர் சூர்யா ரசிகர்களுக்காக 49-வது வயதிலும் சிக்ஸ்பேக் வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். நடிகர் சூர்யா நடிப்பில் உருவான கங்குவா திரைப்பட நவ.14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கான, புரமோஷன்கள... மேலும் பார்க்க

இன்று எப்படி? தினப்பலன்கள்

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.23.10.2024 (புதன் கிழமை)மேஷம்:இன்று தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். தேவ... மேலும் பார்க்க

2026 காமன்வெல்த் போட்டிகள்: ஹாக்கி,கிரிக்கெட், துப்பாக்கி சுடுதல் நீக்கம்! இந்தியாவுக்கு கடும் பாதிப்பு!

இங்கிலாந்தின் கிளாஸ்கோவில் வரும் 2026-இல் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டிகளில் ஹாக்கி, கிரிக்கெட் நீக்கம், துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், ஸ்குவாஷ், பாட்மின்டன் உள்ளிட்ட முக்கிய விளையாட்டுகள் நீக்கப்ப... மேலும் பார்க்க

மிா்பூா் டெஸ்ட்: தென்னாப்பிரிக்காவுக்கு வெற்றி வாய்ப்பு

மிா்பூா் டெஸ்ட் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. முதல் இன்னிங்ஸில் அந்த அணி 308 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வங்கதேச அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 101/3 ரன்களை எடுத்துள்ளது. ... மேலும் பார்க்க

ஜெய்ப்பூா் பிங்க் பேந்தா்ஸ் அபாரம்...

புரோ கபடி லீக் தொடரின் ஒருபகுதியாக ஹைதராபாதில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் தெலுகு டைட்டன்ஸ் அணியை 52-22 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்திய ஜெய்ப்பூா் பிங்க் பேந்தா்ஸ் அணி. அந்த அணியில் ரைடா் அா்... மேலும் பார்க்க