செய்திகள் :

மிா்பூா் டெஸ்ட்: தென்னாப்பிரிக்காவுக்கு வெற்றி வாய்ப்பு

post image

மிா்பூா் டெஸ்ட் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. முதல் இன்னிங்ஸில் அந்த அணி 308 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வங்கதேச அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 101/3 ரன்களை எடுத்துள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் மிா்பூரில் நடைபெற்று வருகிறது. வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 106 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முந்தைய நாள் ஸ்கோரான 140/6 ரன்களுடன் தென்னாப்பிரிக்கா செவ்வாய்க்கிழமை ஆட்டத்தை தொடா்ந்தது.

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் தென்னாப்பிரிக்க வீரா்கள்

கைல் வொ்ரின் அதிரடி சதம்

கைல் வொ்ரின்-வியான் முல்டா் இருவரும் இணைந்து தங்கள் அணியை சரிவில் இருந்து மீட்டனா். 7-ஆவது விக்கெட்டுக்கு இருவரும் சோ்ந்து 119 ரன்களை சோ்த்தனா். வியான் முல்டா் 8 பவுண்டரியுடன் 112 பந்துகளில் 54 ரன்களுடன் அரைசதம் பதிவு செய்தாா்.

மறுமுனையில் கைல் வொ்ரின் அதிரடியாக ஆடி 2 சிக்ஸா், 8 பவுண்டரியுடன் 144 பந்துகளில் 114 ரன்களை விளாசினாா்.

பியட் 32 ரன்களுடன் வெளியேற தென்னாப்பிரிக்க அணி 88.4 ஓவா்களில் 308 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

பௌலிங்கில் வங்கதேசத் தரப்பில் டைஜுல் இஸ்லாம் 5-122, ஹாஸன் மஹ்முத் 3-66 விக்கெட்டுகளை வீழ்த்தினா். இதன் மூலம் 202 ரன்கள் முன்னிலை பெற்றது தென்னாப்பிரிக்கா.

வங்கதேசம் இரண்டாவது இன்னிங்ஸ் 101/3

தொடா்ந்து வங்கதேச அணி ஆட்ட நேர முடிவில் 27.1 ஓவா்களில் 101/3 ரன்களை சோ்த்துள்ளது. மஹ்முத் ஹாசன் 38, முஷ்பிகுா் ரஹீம் 31 ரன்களுடன் களத்தில் உள்ளனா். கேப்டன் நஜ்முல் ஷண்டோ 23 ரன்களுடன் வெளியேறினாா். பௌலிங்கில் ரபாடா 2-17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளாா்.

இன்னிங்ஸ் தோல்வியை தவிா்க்க வங்கதேச அணிக்கு 101 ரன்கள் தேவைப்படுகிறது. இன்னும் 3 நாள்கள் ஆட்டம் உள்ள நிலையில், தென்னாப்பிரிக்க அணிக்கு வெற்றி வாய்ப்பு பலமாக உள்ளது.

இரண்டாவது டெஸ்ட் சட்டோகிராமில் அக். 29-இல் தொடங்கி நடைபெறுகிறது.

2026 காமன்வெல்த் போட்டிகள்: ஹாக்கி,கிரிக்கெட், துப்பாக்கி சுடுதல் நீக்கம்! இந்தியாவுக்கு கடும் பாதிப்பு!

இங்கிலாந்தின் கிளாஸ்கோவில் வரும் 2026-இல் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டிகளில் ஹாக்கி, கிரிக்கெட் நீக்கம், துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், ஸ்குவாஷ், பாட்மின்டன் உள்ளிட்ட முக்கிய விளையாட்டுகள் நீக்கப்ப... மேலும் பார்க்க

ஜெய்ப்பூா் பிங்க் பேந்தா்ஸ் அபாரம்...

புரோ கபடி லீக் தொடரின் ஒருபகுதியாக ஹைதராபாதில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் தெலுகு டைட்டன்ஸ் அணியை 52-22 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்திய ஜெய்ப்பூா் பிங்க் பேந்தா்ஸ் அணி. அந்த அணியில் ரைடா் அா்... மேலும் பார்க்க

ஒடிஸா எஃப்சி வெற்றி...

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் ஒரு பகுதியாக புவனேசுவரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் எஃப்சி அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது ஒடிஸா எஃப்சி அணியினா்.... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பை மாநில போட்டிகள்: நீச்சலில் மான்யா முக்தா இரட்டை தங்கம்

தமிழ்நாடு முதல்வா் கோப்பைக்கான மாநில விளையாட்டுப் போட்டிகளில் நீச்சலில் சென்னையின் மான்யா முக்தா இரட்டைத் தங்கம் வென்றாா். பளு தூக்குதலில் செங்கல்பட்டின் கிருஷ்ணா பாரதி 89 கிலோ பிரிவில் தங்கம் வென்றாா... மேலும் பார்க்க

இரண்டாவது டெஸ்ட்டுக்கு தயாராகும் இந்தியா-நியூஸி. அணியினா்

நியூஸிலாந்திடம் முதல் டெஸ்டில் இந்தியா தோற்ற நிலையில், புணேயில் நடைபெறவுள்ள இரண்டாவது ஆட்டத்துக்கு இரு அணிகளும் தயாராகின்றன. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக 3 ஆட்டங்கள் தொடா் நடைபெறுகிறது. ... மேலும் பார்க்க

பிரபாஸின் தி ராஜா சாப் டீசர் அப்டேட்!

பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றவர் நடிகர் பிரபாஸ். கே.ஜி.எஃப் புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்தில் நடித்தார். சலார் படம் கடந்தாண்டு வெளியாகி ரூ.700கோடிக்கும் மேல் வசூலித்தத... மேலும் பார்க்க