செய்திகள் :

Seema Sajdeh: `என் கூட தங்குறீங்களா 7000 டாலர் தர்றேன்' வில்லங்க மெசேஜ் - அதிர்ந்த நடிகை

post image
நெட்ஃப்ளிக்ஸின் பிரபல ரியாலிட்டி ஷோவான "Fabulous Lives of Bollywood Wives"-ன் மூன்றாவது சீசன் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

இதில் கலந்துகொண்ட ஃபேஷன் டிசைனர் சீமா சஜ்தே பாலிவுட் வட்டாரங்களில் ஹாட் டாபிக்காக இருக்கிறார். சொகைல் கானின் முன்னால் மனைவியான இவர் தற்போது அவரைப் பிரிந்துவிட்டார். இந்நிலையில் இப்போது சொகைல் கானுடனான திருமணத்துக்கு முன், சீமாவுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த தொழிலதிபர் விக்ரம் அஹுஜாவுடன் தற்போது டேட் செய்து வருகிறார்.

"Fabulous Lives of Bollywood Wives

Fabulous  Lives of Bollywood Wives-க்கான புரோமோஷன் பணிகளில் பிசியாக இருக்கிறார். சீமாவுடன், மஹீப் கபூர், பாவனா பாண்டே மற்றும் நீலம் கோத்தாரி ஆகியோரும் நேர்காணல்களில் கலந்துகொள்கின்றனர்.

அப்படி Fabulous  Lives of Bollywood Wives நடிகைகள் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் 'உங்களுக்கு வந்த விசித்திரமான மெசேஜ் என்ன?" என்ற கேள்வி சீமா சஜ்தேவிடம் கேட்கப்பட்டது. அந்த கேள்விக்கு அவர் அளித்த பதில் பரபரப்பாக பேசப்படுகிறது.

சீமாவுக்கு மெசேஜ் அனுப்பிய ஒருவர் (யார் என்று தெரியாதவர்), சீமாவைத் தன்னுடன் வைத்திருக்க விரும்புவதாகவும் அதற்காக மாதாமாதம் ஒரு பெரும் தொகையைக் கொடுப்பதாகவும் கூறியிருக்கிறார். "அந்த ஆள் எனக்கு ஒரு மாத பட்ஜெட் கொடுத்தார்." எனக் கூறியதும் சக நடிகைகள் அதிர்ச்சியடைந்தனர்.

SMS (Representational Image)

"அவர் பார்க்க 100 வயது ஆள் போல இருந்தார். இது விசித்தரமாக இருந்தது. அவர் என்னிடம் வந்து, 'நான் உங்கள் உடன் இருந்தால் மகிழ்ச்சியாக இருப்பேன். ஆனால், மாதத்துக்கு 7000 முதல் 8000 டாலர்தான் பட்ஜெட்டாக இருக்கும்.' என்றார். அவரது முகத்தைப் பார்த்ததும் எனக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துவிட்டது" என்று பேசினார் சீமா.

அப்போது குறுக்கிட்ட மஹீப் கபூர், "அந்த ஆள் அந்த தொகையை ஒரு நாளுக்கு என்று குறிப்பிட்டாரா அல்லது ஒரு மாதத்துக்கு என்றா?" எனக் கேட்க, சீமா, "மஹீப் நான் அவருடன் பேசவே இல்லை" என்றார்.

Aamir Khan: ``அமீர் கானுக்கு ரூ.2,000 கோடி; எங்களுக்கு ரூ.1 கோடி'' - நிஜ `தங்கல்' நாயகி சொல்வதென்ன?

உலக அளவில் அதிக வசூலைக் குவித்த இந்திய திரைப்படம் `தங்கல்'. அமீர் கான் தயாரிப்பு மற்றும் நடிப்பில், நிதேஷ் திவாரி இயக்கத்தில் 2016-ல் வெளிவந்த இந்தத் திரைப்படம் உலக அளவில் சுமார் ரூ. 2,000 கோடி வசூல் ... மேலும் பார்க்க

Aamir Khan: கிஷோர் குமாரின் சுயசரிதை படத்தில் நடிக்கிறாரா ஆமீர் கான்?

பாலிவுட் நடிகர் ஆமீர் கான் தற்போது சிதாரே ஜமீன் பர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை முடித்துவிட்டு, அடுத்து 6 படங்கள் அவரது பரிசீலனையில் இருக்கின்றன. அதில் பாடகர் கிஷோர் குமாரின் வாழ்க்கை வரலாற்... மேலும் பார்க்க

"உங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்ய விருப்பம்" - திகார் சிறையிலிருந்து கரண் ஜோகருக்கு சுகேஷ் கடிதம்

பாலிவுட் தயாரிப்பாளரும், இயக்குநருமான கரண் ஜோகர் தனது படத் தயாரிப்பு நிறுவனமான தர்மா புரொடக்ஷன் நிறுவனத்தை விரிவுபடுத்தும் நோக்கில் வெளியிலிருந்து முதலீடு பெற முயற்சி செய்து கொண்டிருந்தார். அவரது நிறு... மேலும் பார்க்க

Salman Khan: "சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்தது தவறு" - மன்னிப்பு கேட்டு மீண்டும் மெசேஜ்

பாலிவுட் நடிகர் சல்மான் கான் ஏற்கனவே டெல்லியைச் சேர்ந்த மாஃபியா கும்பல் தலைவன் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினரால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருகிறார். லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினர் சல்மான் கானை கொ... மேலும் பார்க்க

``100 கிலோவை தாண்டிய எடை.. மனஅழுத்தம் அதிகமானது'' - பிரசவ கால அனுபவம் பகிர்ந்த சமீரா ரெட்டி

நடிகை சமீரா ரெட்டி தமிழ், தெலுங்கு உள்பட ஏராளமான மொழிப்படங்களில் நடித்துள்ளார். அவர் தொழிலதிபர் அக்‌ஷய் வார்தே என்பவரை 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட பிறகு சொந்த வாழ்க்கையில் கடுமையான போராட்டங்களை... மேலும் பார்க்க

ரூ.250 கோடியில் கட்டப்பட்டுள்ள 6 மாடி பங்களா; விரைவில் குடியேறும் ரன்பீர் கபூர்-ஆலிபா பட் தம்பதி!

ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் தம்பதி மும்பை பாந்த்ராவில் ரூ.250 கோடியில் 6 மாடி கொண்ட ஆடம்பர அடுக்குமாடி பங்களா கட்டி வந்தனர். இக்கட்டடத்தின் கட்டுமானப் பணியை கபூர் தம்பதி அடிக்கடி சென்று பார்த்து வ... மேலும் பார்க்க