செய்திகள் :

முதல்தரப் போட்டிகளில் அதிவேக இரட்டைச்சதம்: நியூஸி.வீரர் சாதனை!

post image

முதல்தரப் போட்டிகளில் அதிவேக இரட்டைச்சதம் அடித்து நியூசிலாந்து வீரர் சாட் போவ்ஸ் சாதனை படைத்துள்ளார்.

நியூசிலாந்தில் நடைபெற்ற முதல்தரப் போட்டியில் 103 பந்துகளில் இரட்டைச்சதம் விளாசி, தமிழகத்தைச் சேர்ந்த ஜெகதீசன், ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் ஆகியோரின் சாதனைகளை முறியடித்தார் சாட் போவ்ஸ்.

தென்னாப்பிரிக்காவில் பிறந்த நியூசிலாந்து வீரரான சாட் போவ்ஸ் காண்டர்பெரி அணிக்காக விளையாடிவருகிறார். அவர் ஒடாகா அணிக்கு எதிரான 50 ஓவர் போட்டியில் அதிவேகமாக இரட்டைச்சதம் விளாசி சாதனை படைத்துள்ளார்.

இலங்கை தொடர்: நியூசிலாந்து அணிக்கு புதிய கேப்டன்!

110 பந்துகளில் 205 ரன்கள் விளாசிய சாட் போவ்ஸ் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதற்கு முன்னதாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெகதீசன், ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் இருவரும் 114 பந்துகளில் இரட்டைச்சதம் விளாசியிருந்ததே சாதனையாக இருந்தது.

2021 ஆம் ஆண்டு மார்ஷ் கோப்பைக்கான போட்டியில் தெற்கு ஆஸ்திரேலியாவுக்காக விளையாடி டிராவிஸ் ஹெட் குயின்ஸ்லாந்துக்கு எதிராக 230 ரன்களும், 2022 ஆம் ஆண்டு விஜய் ஹசாரே கோப்பையில் அருணாசலப் பிரதேசத்துக்கு எதிரான போட்டியில் தமிழக வீரர் ஜெகதீசன் 227 ரன்களும் குவித்தனர்.

வங்கதேச ஒருநாள் தொடர்: ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!

இலங்கைக்கு எதிரான தொடருக்கு நியூசிலாந்து அணியில் இடம்பெறாத சாட் போவ்ஸ், 26 பந்துகளில் அரைசதத்தையும் 53 பந்துகளில் சதத்தையும் நிறைவு செய்தார்.

இதற்கு முன் 49 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்த நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லரில் சாதனையை அவரால் முறியடிக்க முடியவில்லை. தனது 100-வது முதல்தரப் போட்டியில் விளையாடிய சாட் போவ்ஸ் தன் இன்னிங்ஸில் 27 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் விளாசினார்.

டெஸ்ட் போட்டிகளில் வங்கதேச அணிக்காக 6000 ரன்களை கடந்த முதல் வீரர்!

காண்டர்பெரி அணி 50 ஓவர்கள் முடிவில், 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 343 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய ஒடாகா அணி 103 ரன்களுக்கு சுருண்டது. இதன்மூலம் காண்டர்பெரி அணி 240 ரன்கள் வித்தியாத்தில் வெற்றியைப் பதிவு செய்தது.

32 வயதான சாட் போவ்ஸ் தென்னாப்பிரிக்காவின் பெனோனியில் பிறந்தவர். சாட் போவ்ஸின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்னதாக 126 ரன்கள் எடுத்திருந்தார். இவர் நியூசிலாந்திற்காக சில ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 சர்வதேச போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

சமூகவலைதள விமர்சனங்களால் கவலையில்லை..! கே.எல்.ராகுலை நம்பும் கம்பீர்!

நியூசிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் கே.எல்.ராகுல் விளையாடுவார் என தலைமைப் பயிற்சியாளர் கம்பீர் கூறியுள்ளார். பெங்களூரில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் கே.எல்.ராகுல் முதல் இன்னிங... மேலும் பார்க்க

இலங்கை தொடர்: நியூசிலாந்து அணிக்கு புதிய கேப்டன்!

இலங்கை கிரிக்கெட் தொடருக்கான நியூசிலாந்து அணிக்கு புதிய கேப்டன் நியமிக்கப்பட்டுள்ளார்.இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட் மற்றும் ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணிக்கு மிட்சல் சான்ட்னர் தற்காலிக கேப்ட... மேலும் பார்க்க

வங்கதேச ஒருநாள் தொடர்: ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!

வங்கதேச ஒருநாள் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் வங்கதேசத்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான ஆப்கானிஸ்தான் செவ்வாய்க்கிழமை அறிவி... மேலும் பார்க்க

டெஸ்ட் போட்டிகளில் வங்கதேச அணிக்காக 6000 ரன்களை கடந்த முதல் வீரர்!

வங்கதேச அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 6000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை முஷ்ஃபிகர் ரஹிம் படைத்துள்ளார்.வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டாக்காவில் நடை... மேலும் பார்க்க

முதல் டெஸ்ட்: வலுவான நிலையில் தென்னாப்பிரிக்கா!

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வலுவான நிலையில் உள்ளது.வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டாக்காவில் நடைபெற்று வருகிறது. இந்தப... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக ஓய்வு முடிவை திரும்ப பெறுகிறாரா டேவிட் வார்னர்?

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக ஓய்வு முடிவை திரும்ப பெறவும் தயாராக இருப்பதாக டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் அடுத... மேலும் பார்க்க