செய்திகள் :

வங்கதேச ஒருநாள் தொடர்: ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!

post image

வங்கதேச ஒருநாள் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் வங்கதேசத்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான ஆப்கானிஸ்தான் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.

19 பேர் கொண்ட ஆப்கானிஸ்தான் அணியில் இடது கை சுழற்பந்து வீச்சாளரான 23 வயதான செடிகுல்லா அடலுக்கு அணியில் முதல்முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

எமெர்ஜிங் ஆசியா கோப்பையில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய செடிகுல்லா அடல் இதுவரை 6 சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

கடந்த மாதம் ஷார்ஜாவில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை 2-1 தோற்றதற்குப் பின்னர் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை அணி தேர்வாளர் அஹ்மத் ஷா சுலிமான்கில் செடிகுல்லா அடல் வங்கதேசத்தின் எதிர்கால வீரர் என்றும் தெரிவித்துள்ளார்.

செடிகுல்லா அடல் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறார். கடைசி மூன்று இன்னிங்ஸில் 52, 95*,83 ரன்கள் எடுத்துள்ளார்.

தொடக்க ஆட்டக்காரர் நவீத் ஜத்ரன் கணுக்கால் அறுவை சிகிச்சையில் இருந்து மீண்டு வந்துள்ளார். அதே நேரத்தில் சுழற்பந்து வீச்சாளர் முஜீப் உர் ரஹ்மான் வலது கையில் காயம் தசைபிடிப்பு காரணமாக அணியில் தேர்வாகவில்லை.

வருகிறநவம்பர் 6, 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் போட்டிகள் நடைபெற உள்ளன. ஆப்கானிஸ்தானுக்கு இந்தத் தொடர், அடுத்த ஆண்டு பிப்ரவரி - மார்ச்சில் பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபிக்கு உதவியாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தான் அணி

ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), ரஹ்மத் ஷா, ரஹ்மானுல்லா குர்பாஸ், இக்ராம் அலிகில், அப்துல் மாலிக், ரியாஸ் ஹசன், செடிகுல்லா அடல், தர்வீஷ் ரசூலி, அஸ்மத்துல்லா ஒமர்சாய், முகமது நபி, குல்பதின் நைப், ரஷீத் கான், நங்கியல் கரோட்டி, காஷான்ஃபார், நூர் அஹமத், பிலால் சமி, நவீத் ஜத்ரன், ஃபரித் அஹ்மத் மாலிக்

இலங்கை தொடர்: நியூசிலாந்து அணிக்கு புதிய கேப்டன்!

இலங்கை கிரிக்கெட் தொடருக்கான நியூசிலாந்து அணிக்கு புதிய கேப்டன் நியமிக்கப்பட்டுள்ளார்.இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட் மற்றும் ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணிக்கு மிட்சல் சான்ட்னர் தற்காலிக கேப்ட... மேலும் பார்க்க

டெஸ்ட் போட்டிகளில் வங்கதேச அணிக்காக 6000 ரன்களை கடந்த முதல் வீரர்!

வங்கதேச அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 6000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை முஷ்ஃபிகர் ரஹிம் படைத்துள்ளார்.வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டாக்காவில் நடை... மேலும் பார்க்க

முதல் டெஸ்ட்: வலுவான நிலையில் தென்னாப்பிரிக்கா!

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வலுவான நிலையில் உள்ளது.வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டாக்காவில் நடைபெற்று வருகிறது. இந்தப... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக ஓய்வு முடிவை திரும்ப பெறுகிறாரா டேவிட் வார்னர்?

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக ஓய்வு முடிவை திரும்ப பெறவும் தயாராக இருப்பதாக டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் அடுத... மேலும் பார்க்க

பிளேயிங் லெவனில் இடம்பெற கே.எல்.ராகுல், சர்ஃபராஸ் இடையே போட்டி: இந்திய அணி பயிற்சியாளர்

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டுக்கான பிளேயிங் லெவனில் இடம்பெற கே.எல்.ராகுல் மற்றும் சர்ஃபராஸ் கான் இடையே போட்டி நிலவுகிறது.இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரி... மேலும் பார்க்க

இந்த முறை மிஸ் ஆகாது; இந்தியாவுக்கு சவால் விடுகிறாரா பாட் கம்மின்ஸ்?

இந்தியாவின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து பார்டர் - கவாஸ்கர் தொடரைக் கைப்பற்றுவதே தங்களின் நோக்கம் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள... மேலும் பார்க்க