செய்திகள் :

Doctor Vikatan: எடை குறைவான குழந்தை... பொட்டுக்கடலை மாவுக் கஞ்சி உடல் எடையை அதிகரிக்குமா?

post image

Doctor Vikatan: என்னுடைய 10 வயது மகள் மிகவும் மெலிந்த உடல்வாகுடன் இருக்கிறாள். இந்த வயதுக்  குழந்தைகளுக்கு பொட்டுக்கடலை மாவில் கஞ்சி தயாரித்துக் கொடுக்கலாமா.... அதனால் அவர்களது உடல் எடை அதிகரிக்குமா... வேறு என்னவெல்லாம் கொடுத்தால் உடல் தேறும்?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்

ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்

பத்து வயதுக் குழந்தைகளுக்கு கஞ்சி உணவுகள் கொடுக்க வேண்டும் என அவசியமில்லை. திட உணவுகளாகவே கொடுக்கலாம்.  ஒருவேளை உங்கள் குழந்தை திட உணவு சாப்பிட அடம் பிடிப்பதால் இப்படிக் கேட்கிறீர்களா என்று தெரியவில்லை.

பொட்டுக்கடலை ஆரோக்கியமான உணவு என்பதில் சந்தேகமில்லை. புரதச்சத்து, மக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட் என எல்லா சத்துகளும் பொட்டுக்கடலையில் உண்டு. எனவே, குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் தேர்வுக்கு பொட்டுக்கடலை நல்ல சாய்ஸ். முற்பகல் வேளையிலோ, மாலை வேளையிலோ அவர்களுக்கு சிறிது பொட்டுக்கடலையை சாப்பிடக் கொடுக்கலாம்.  பொட்டுக்கடலை சட்னியாகச் செய்து கொடுக்கலாம். பொட்டுக்கடலையை மாவாக்கி வைத்துக்கொண்டு, சப்பாத்தி மாவு உள்ளிட்ட வேறு மாவு வகைகளுடன் சேர்த்தும் செய்து கொடுக்கலாம். ஆனால், புரதத் தேவைக்கு அதை மட்டுமே நம்பியிருக்க வேண்டாம்.

உங்கள் குழந்தை உடல் எடை குறைவாக இருப்பதாகச் சொல்லியிருக்கிறீர்கள். எனவே, முதல் வேலையாக உங்கள் குழந்தைக்கு கலோரிகளும் புரதமும் சற்று அதிகமுள்ள உணவுகளாகக் கொடுக்க வேண்டியிருக்கும். அந்தக் குழந்தைக்கு போதுமான அளவு புரதச்சத்து போய்ச் சேர்கிறதா என்று பாருங்கள்.

புரதச்சத்து

சராசரி எடையில் உள்ள இந்த வயதுக் குழந்தைகளுக்கு 35 முதல் 45 கிராம் புரதச்சத்து கொடுக்கலாம். உங்கள் குழந்தை எடை குறைவாக இருப்பதாகச் சொல்லியிருப்பதால் அந்தப் புரத அளவை 50 கிராம் வரை கூட அதிகரிக்கலாம், தவறில்லை.  சைவ உணவுக்காரர்கள் என்றால் இந்தப் புரதத் தேவையை பால் மற்றும் பால் பொருள்கள், சோயா உணவுகள், நட்ஸ், பச்சைப் பட்டாணி போன்றவற்றின் மூலம் பெறலாம். அதுவே அசைவம் சாப்பிடுவோர் என்றால் தினம் ஒன்றிரண்டு முட்டை, சிக்கன், மீன் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

ஒருவேளை உணவுகளின் மூலம் போதிய புரதச்சத்து கிடைக்கவில்லை என்று தெரிந்தால் மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து ஆலோசகர்களின் வழிகாட்டுதலோடு புரோட்டீன் சப்ளிமென்ட்டுகள் எடுத்துக்கொள்ளலாம். பவுடர் வடிவில் கிடைக்கும் அவற்றை பாலில் கலந்து உங்கள் குழந்தைக்குக் கொடுக்கலாம். நீங்களாக எதையும் முயற்சி செய்யாமல், சரியான நிபுணரின் பரிந்துரையோடு செய்வதுதான் சரியானது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Health: வைட்டமின், மினரல்ஸ், நார்ச்சத்து... வீணாகாமல் சாதம் வடிப்பது எப்படி? டயட்டீஷியன் விளக்கம்!

அரிசியின் மேல் பகுதியில்தான் நார்ச்சத்துடன் வைட்டமின் மற்றும் மினரல்ஸ் சத்துகள் நிறைய இருக்கின்றன என பல மருத்துவர்களும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அரிசியை எப்படி சமைத்தால், அந்த சத்துகள் நமக்... மேலும் பார்க்க

BRICS: ``ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்த இந்தியா உதவும்'' -பிரதமர் மோடி பேச்சு... நன்றி கூறிய புதின்!

ரஷ்ய - உக்ரைன் போர் தொடங்கி 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. தற்போது, இந்த போரை நிறுத்த, முடித்து வைப்பதற்கான முன்னெடுப்புகளும், பேச்சுவார்த்தைகளும் அதிகம் நடந்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில், பிரதமர்... மேலும் பார்க்க

``காமராஜர் தமிழ் பேரினத்தின் சொத்து!'' -கண்டனங்களுக்குப் பின் வருத்தம் தெரிவித்த திமுக ராஜீவ் காந்தி

திமுக இளைஞரணி அலுவலகத்தில் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சி சமீபத்தில் நடந்திருந்தது. அந்த நிகழ்ச்சியில் பேசிய திமுக இளைஞரணி தலைவர் ராஜீவ் காந்தி, "ராஜாஜி மூடிய பள்ளிகளைத் தான் காமராஜர் திறந்தார். அவர... மேலும் பார்க்க

``தீபாவளி பண்டிகை நேரத்தில் பாதிப்பை சந்தித்துள்ளோம்..'' - விவசாயிகள் வேதனை!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்தது. குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் பெய்த மழையால் வயல்களில் தேங்கிய மழை நீரால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள், நடவு செய்யப்பட்ட ப... மேலும் பார்க்க

TVK மாநாடு ஏற்பாடுகள் Updates | ராஜ கண்ணப்பன் அரசு நிலத்தை அபகரித்தாரா? | MODI | Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* "ஓவர் போதையிலிருந்ததால்..." - போலீசை மிரட்டிய நபர்கள்? #ViralVideo* சென்னை: தீபாவளி 18,000 காவலர்கள் பாதுகாப்பு? * "ஸ்டாலினே சுதந்திர தினத் தேதி தெரியாமல் திணறுகிறார்''... மேலும் பார்க்க

ரயில்வே வழங்கும் கம்பளி போர்வைகள் சரியாக சலவை செய்யப்படுகிறதா... RTI-ல் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

நாம் ரயிலில் பயணிக்கும்போது இந்திய ரயில்வேத் துறை சார்பாக தூங்குவதற்கான தலையணையும் போர்வையும் வழங்கப்படும். இதை உபயோகிப்பதில் பலருக்கும் எந்த சிக்கலும் இல்லை என்றாலும், சிலர் இவற்றை ஒதுக்கி விட்டு தங்... மேலும் பார்க்க