செய்திகள் :

மகாராஷ்டிரா தேர்தல்: ராஜ்தாக்கரே மகன் போட்டி... வேட்பாளர் பட்டியல் வெளியீட்டில் கட்சிகள் தீவிரம்!

post image

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் பட்டியலை அறிவிப்பதில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. ஏற்கனவே பா.ஜ.க 99 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துவிட்ட நிலையில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா மற்றும் ராஜ்தாக்கரேயின் நவநிர்மாண் சேனா கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியலை அறிவித்து இருக்கின்றன. ஏக்நாத் ஷிண்டே சிவசேனா சார்பாக போட்டியிடும் 45 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளார். மும்பையில் உள்ள மாகிம் தொகுதிக்கு சதா சர்வான்கர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தற்போது எம்.எல்.ஏ.க்களாக இருக்கும் பெரும்பாலானோருக்கு மீண்டும் ஷிண்டே வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்.

ஆனால் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரேயின் ஒர்லி தொகுதிக்கு ஏக்நாத் ஷிண்டே இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. அதோடு தங்களது கட்சியை ஆதரிக்கும் 3 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களுக்கும் ஏக்நாத் ஷிண்டே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்திருக்கிறார். தானே கோப்ரி தொகுதியில் முதல்வர் ஷிண்டே மீண்டும் போட்டியிடுகிறார்.

மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவும் தனது வேட்பாளர் பட்டியலை அறிவித்து இருக்கிறது. 45 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை ராஜ் தாக்கரே வெளியிட்டுள்ளார். இதில் மாகிம் தொகுதியில் ராஜ்தாக்கரே மகன் அமித் தாக்கரே வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 2009-ம் ஆண்டு தேர்தலில் இத்தொகுதியில் நவநிர்மாண் சேனா வெற்றி பெற்றது. அதன் பிறகு வெற்றி பெறாவிட்டாலும் தொடர்ந்து இரண்டாவது இடம் வந்து கொண்டிருக்கிறது. ஆதித்ய தாக்கரேயின் ஒர்லி தொகுதிக்கு சந்தீப் தேஷ்பாண்டேயை வேட்பாளராக அறிவித்து இருக்கிறார். மும்பையில் ராஜ்தாக்கரே கட்சியும், முதல்வர் ஷிண்டேயின் சிவசேனாவும் 3 தொகுதியில் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது. ராஜ்தாக்கரே கட்சி போட்டியிடும் 3 தொகுதியில் ஏக்நாத் ஷிண்டே வேட்பாளரை நிறுத்தமாட்டார்.

ராஜ்தாக்கரே

அதேசமயம் மற்ற தொகுதியில் ஏக்நாத் ஷிண்டே கட்சிக்கு ராஜ்தாக்கரே ஆதரவு கொடுப்பார். மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா 150 தொகுதியில் தனித்து போட்டியிட திட்டமிட்டுள்ளது. மும்பையில் 17 தொகுதியிக்கு ராஜ்தாக்கரே வேட்பாளர்களை அறிவித்து இருக்கிறார். நாளை மிகவும் ராசியான நாள் என்பதால் முக்கியமான வேட்பாளர்கள் நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய இருக்கின்றனர். முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, ஆதித்ய தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல் உட்பட சிலர் வேட்பு மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர். இன்னும் அதிகமான கட்சிகள் வேட்பாளர் பட்டியலை முழுமையாக அறிவிக்கவில்லை. இதனால் வரும் திங்கள் கிழமையும் நல்ல நாள் என்பதால் அன்றும் அதிகமானோர் வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல்: தொகுதி பங்கீட்டில் முந்தும் எதிர்க்கட்சிகள்; சிக்கலில் 28 தொகுதிகள்

மகாராஷ்டிராவில் நவம்பர் 20-ம் தேதி நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஆளும் மஹாயுதி கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் மகாவிகாஸ் அகாடி கூட்டணி தொடர்ந்து பேச்சுவார... மேலும் பார்க்க