செய்திகள் :

வைத்திலிங்கம்: 5 கார்கள், 10 அதிகாரிகள், தொடரும் ED ரெய்டு; கோஷமிடும் ஆதரவாளர்கள் - தஞ்சை நிலவரம்

post image
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தற்போது ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். இவர் ஓ.பன்னீர்செல்வம் அணியான அ.தி.மு.க உரிமை மீட்புக் குழுவில் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி வகிக்கிறார்.

இந்நிலையில் வைத்திலிங்கம் 2011- 2016 வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தபோது, சென்னை பெருங்களத்துாரில், ஸ்ரீராம் பிராப்பர்டீஸ் அண்டு இன்ப்ராஸ்ட்ரக்சர் என்ற நிறுவனம், 57.94 ஏக்கரில், 1,453 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ஐ.டி நிறுவனம் கட்டுவதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பத்திருந்தது. அனுமதி கொடுப்பதற்காக வைத்திலிங்கம் அந்த நிறுவனத்திடமிருந்து ரூ. 27.90 கோடி லஞ்சம் பெற்றதாக அறப்போர் இயக்கத்தினர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் புகார் அளித்திருந்தனர்.

வைத்திலிங்கம்

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் கடந்த செப்.19ம் தேதி வைத்திலிங்கம் மற்றும் அவரது மூத்த மகன் பிரபு உள்ளிட்ட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் 2011 - 2016ல் அமைச்சராக இருந்த சமயத்தில் தன் பெயரிலும் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் வாங்கிய அசையும், அசையா சொத்துக்கள், வங்கி இருப்பு, வாகனங்கள் வாங்கியவை உள்ளிட்ட அனைத்தையும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் ஆய்வு செய்ததில் வைத்திலிங்கம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன்படி, 2011ல், ரூ. 32.47 கோடியாக இருந்த சொத்து மதிப்பு, தற்போது, 1,057.85 சதவிகிதம் உயர்ந்துள்ளது. அத்துடன், லஞ்சப்பணம், பாரத் கோல் கெமிக்கல் லிமிடெட் என்ற நிறுவனம் மூலம் வைத்திலிங்கத்தின் மகன்கள் பிரபு மற்றும் சண்முகபிரபு ஆகியோர் இயக்குனர்களாக இருக்கும் முத்தம்மாள் எஸ்டேட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பெயரில் 2016 ஜனவரி, 28 முதல் பிப்., 4ம் தேதி வரை கடனாக வழங்கப்பட்டது போல கணக்கு காட்டப்பட்டிருப்பதையும் கண்டு பிடித்தனர்.

வைத்திலிங்கம் வீடு

இந்நிலையில், வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்தல், முறைகேடான பண பரிவர்த்தனை புகார் அடிப்படையில், அமலாக்கத்துறையின் இன்று காலை 7:30 மணியிலிருந்து வைத்திலிங்கத்திற்கு சொந்தமான தெலுங்கன்குடிகாட்டில் உள்ள அவரது வீட்டில் சோதனை செய்து வருகின்றனர். 5 கார்களில், வந்த 10க்கும் மேற்பட்ட அமலாக்கதுறையினர் சோதனையில் ஈடுப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் மத்திய பாதுகாப்பு படை பிரிவு போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஒரத்தநாட்டில் பரபரப்பு ஏற்பட்டது. இதையறிந்த வைத்திலிங்கத்தின் ஆதரவாளர்கள் அவர் வீட்டின் முன்பு குவிந்தனர்.

அப்போது அமலாக்கத்துறையினரிடம், ``எதுக்காக, யார் சொல்லி ரெய்டு நடத்துறீங்க" என கோஷமிட்டனர். இதைத்தொடர்ந்து வெளியே வந்த வைத்திலிங்கம் `எல்லோரும் அமைதியாக இருங்க, தொந்தரவு செய்யாதீங்க!' அமலாக்கத்துறையினர் அவர்கள் வேலையை செய்யட்டும் என ஆதரவாளர்களை அமைதிப்படுத்தினார்.

வைத்திலிங்கம் வீட்டில் ED அதிகாரிகள்

இந்நிலையில் ஹோட்டலிருந்து காலை உணவு வர வைத்து சாப்பிட்ட அமலாக்கத்துறையினர் மதிய உணவிற்கும் ஆர்டர் கொடுத்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சோதனை நீண்ட நேரம் நீடிக்கும் என்பது தெரியவந்துள்ளது. இதேபோல் தஞ்சாவூரில் உள்ள வைத்திலிங்கம் மூத்த மகன் பிரபு வீட்டிலும் சோதனை நடைபெற்று வருவதால் வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

இர்ஃபான்: பாலினம் அறிதல் டு தொப்புள்கொடி அறுப்பு - `கானல் நீர்’ நடவடிக்கை - திருத்துமா அரசு?

யூடியூபர் இர்ஃபான் சர்ச்சைக்குரிய வீடியோக்களை தனது யூ-டியூப் சேனலில் வெளியிடுவதும், பின்னர் சட்டரீதியிலான குற்றச்சாட்டுகள் எழ அதை நீக்குவதும், இதை தமிழக அரசு கண்டிப்பதுபோல கண்டித்து பெரிய அளவில் நடவடி... மேலும் பார்க்க

மகா., சட்டமன்ற தேர்தல்: இறங்கிவந்து காங்கிரஸ்.. தொகுதி பங்கீட்டை போராடி முடித்த எதிர்க்கட்சி கூட்டணி

மகாராஷ்டிராவில் வரும் நவம்பர் 20-ம் தேதி நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்காக ஆளும் மகாயுதி கூட்டணி மற்றும் காங்கிரஸ் கட்சியை உள்ளடக்கிய எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடி கூட்டணிகள் தொகுதி பங்கீடு தொடர்பாக... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: பாராமதியில் மீண்டும் பவார்கள் மோதல்; அஜித் பவாரை எதிர்த்துப் போட்டியிடும் சகோதரர் மகன்

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று (அக்டோபர் 22) தொடங்கியது. ஆனால், கட்சிகள் இன்னும் முழுமையாகத் தொகுதிப் பங்கீட்டை முடிக்காமல் இருக்கின்றன. மற்றொரு புறம் தங்களது கட்சிகளில... மேலும் பார்க்க

அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது நில அபகரிப்பு புகாரளித்த அறப்போர் இயக்கம்... மறுக்கும் தனியார் நிறுவனம்!

Noதிமுக அமைச்சர் ராஜகண்ணப்பன், தனது மகன்கள் மூலம் டெக்கான் ஃபன் ஐலேன்டு & ஹோட்டல் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்தின் பெயரில், சென்னை ஜி.எஸ்.டி சாலையில் ரூ.411 கோடி மதிப்புள்ள 4 ஏக்கர் 31,378 சதுர ... மேலும் பார்க்க

ED Raid: தனியார் நிறுவனத்திடம் லஞ்சம் வாங்கிய வழக்கு; வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறை சோதனையிட்டு வருகிறது.2011ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையிலான அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்பு... மேலும் பார்க்க

மதுரை: "ஆஸ்பத்திரிக்குக் கூட 5 கிமீ செல்ல வேண்டியுள்ளது" - பேருந்து வசதி கோரும் சித்தாலி கிராமம்

மதுரை மாவட்டம், கள்ளிக்குடி வட்டம், வில்லூர் பிட்-2 பகுதியைச் சேர்ந்த கிராமம் சித்தாலி. இந்த ஊரில் 300-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குப் பேருந்து வசதி இல்லாததால், ஊர் மக்கள் 1.25 கி.... மேலும் பார்க்க