செய்திகள் :

ED Raid: தனியார் நிறுவனத்திடம் லஞ்சம் வாங்கிய வழக்கு; வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

post image

அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறை சோதனையிட்டு வருகிறது.

2011ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையிலான அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம். தற்போது ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருக்கும் இவர், தஞ்சாவூர் மாவட்ட ஒரத்தநாடு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.

லஞ்சம் வாங்கியதாக வழக்கு பதிவு!

வீட்டு வசதி துறை அமைச்சராக வைத்திலிங்கம் இருந்தபோது, தனியார் நிறுவனத்திற்குக் குடியிருப்புகள் கட்ட அனுமதி வழங்க ரூ.27.90 கோடி லஞ்சம் பெற்றதாக இவர் மீது புகார் உள்ளது. இதையொட்டி வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகச் சமீபத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை இவர் மீது வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கின் அடிப்படையில்தான், தற்போது அமலாக்கத்துறை தனியே ஒரு வழக்குப் பதிவு செய்து சோதனையிட்டு வருகிறது. தற்போது வைத்திலிங்கத்திற்குச் சொந்தமான 10 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. தஞ்சாவூர் ஒரத்தநாட்டில் இருக்கும் அவரது வீட்டில் 11 பேர் கொண்ட அமலாக்கத்துறை குழு சோதனையிட்டு வருகிறது. மேலும், சென்னை தி.நகரில் உள்ளது அவரது மகன் அலுவலகம், அசோக் நகரில் உள்ள அவரது மகன் வீடு, சட்டமன்ற உறுப்பினர்களின் விடுதி உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெறுவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://bit.ly/47zomWY

மகாராஷ்டிரா: பாராமதியில் மீண்டும் பவார்கள் மோதல்; அஜித் பவாரை எதிர்த்துப் போட்டியிடும் சகோதரர் மகன்

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று (அக்டோபர் 22) தொடங்கியது. ஆனால், கட்சிகள் இன்னும் முழுமையாகத் தொகுதிப் பங்கீட்டை முடிக்காமல் இருக்கின்றன. மற்றொரு புறம் தங்களது கட்சிகளில... மேலும் பார்க்க

அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது நில அபகரிப்பு புகாரளித்த அறப்போர் இயக்கம்... மறுக்கும் தனியார் நிறுவனம்!

Noதிமுக அமைச்சர் ராஜகண்ணப்பன், தனது மகன்கள் மூலம் டெக்கான் ஃபன் ஐலேன்டு & ஹோட்டல் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்தின் பெயரில், சென்னை ஜி.எஸ்.டி சாலையில் ரூ.411 கோடி மதிப்புள்ள 4 ஏக்கர் 31,378 சதுர ... மேலும் பார்க்க

மதுரை: "ஆஸ்பத்திரிக்குக் கூட 5 கிமீ செல்ல வேண்டியுள்ளது" - பேருந்து வசதி கோரும் சித்தாலி கிராமம்

மதுரை மாவட்டம், கள்ளிக்குடி வட்டம், வில்லூர் பிட்-2 பகுதியைச் சேர்ந்த கிராமம் சித்தாலி. இந்த ஊரில் 300-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குப் பேருந்து வசதி இல்லாததால், ஊர் மக்கள் 1.25 கி.... மேலும் பார்க்க

இஸ்ரேல் அரசுக்கு எதிராகவே போராடும் Ultra Orthodox 'Haredim' யூதர்கள் - யார் இவர்கள்?!

ஹமாஸ் அமைப்பின் தலைவர் யாஹ்யா சின்வரை இஸ்ரேல்ராணுவப் படை கொன்றுவிட்டதாக அறிவித்தது. சரி, போரை நிறுத்துவதற்கான வலுவான காரணம் கிடைத்துவிட்டதாக அமெரிக்கா உட்பட உலக நாடுகள் பலவும் கருதின. ஆனால், போர் தொடர... மேலும் பார்க்க