செய்திகள் :

மகாராஷ்டிர பேரவைத் தேர்தல்: முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது சிவசேனை!

post image

மகாராஷ்டிர பேரவைத் தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை சிவசேனை வெளியிட்டுள்ளது.

மகாராஷ்டிர பேரவைத் தேர்தலுக்கான 45 வேட்பாளர் பெயர் பட்டியலை சிவசேனை கட்சி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்தலில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தாணேயில் உள்ள கோப்ரி-பஞ்ச்பகாதி தொகுதியில் போட்டியிடுகிறார்.

முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்தின் வீடு, எம்எல்ஏ விடுதியில் அமலாகத்துறை சோதனை!

2022 ஆம் ஆண்டு அப்போதைய மகராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராகவும், தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவாகவும் உள்ள அனைத்து எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

சிவசேனையின் கூட்டணிக் கட்சியான பாஜக ஞாயிற்றுக்கிழமை 99 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருந்தது.

288 பேரவைத் தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிரத்தில் வருகிற நவம்பர் 20 ஆம் தேதி ஒரேகட்டமாக பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23 நடைபெறவுள்ளது.

ஜார்க்கண்ட் பேரவைத் தேர்தல்: முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது ஜேஎம்எம்!

ஒடிசாவில் 288 மீட்புக் குழுக்கள்: மக்களை வெளியேற்றும் பணி தீவிரம்!

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதன்கிழமை காலை 'டானா' புயலாக வலுப்பெற்றதால், ஒடிசா கடலோரப் பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கு வங்... மேலும் பார்க்க

தொடரும் துயரம்.. தில்லி ஐஐடி மாணவர் தற்கொலை

புது தில்லி: தில்லி ஐஐடியில் படித்து வந்த 21 வயது மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.தற்கொலை செய்துகொண்ட மாணவரின் தற்கொலைக் கடிதம் எதுவும் அவரது அறையிலிருந்து கைப்பற்றப்படவில்லை என்று காவல்துற... மேலும் பார்க்க

50 காசுக்காக ரூ.15 ஆயிரத்து 50 காசு இழப்பீடு! அஞ்சல் துறைக்கு தண்டம்!

உரிய கட்டணத்தைவிட அதிக கட்டணமாக 50 காசு வசூலித்த அஞ்சல் துறைக்கு ரூ.15 ஆயிரத்து 50 காசு இழப்பீடாக வழங்க மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி கெருக... மேலும் பார்க்க

உ.பி. இடைத்தேர்தல்: அனைத்து தொகுதிகளையும் சமாஜவாதிக்கு விட்டுக் கொடுக்கும் காங்கிரஸ்?

உத்தரப் பிரதேச சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அனைத்து தொகுதிகளையும் சமாஜவாதி கட்சிக்கு காங்கிரஸ் விட்டுக் கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.உத்தரப் பிரதேசத்தில் காலியாகவுள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகள... மேலும் பார்க்க

வங்கக் கடலில் உருவானது டானா புயல்!

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதன்கிழமை காலை புயலாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும், கடந்த 6 மணிநேரமாக மணிக்கு 18 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வ... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட் பேரவைத் தேர்தல்: முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது ஜேஎம்எம்!

ஜார்க்கண்ட் பேரவைத் தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) வெளியிட்டுள்ளது.ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பில் வெளியிட்டப்பட்டுள்ள முதல் வேட்பாளர் பட்டியலில் 35 ... மேலும் பார்க்க