செய்திகள் :

Bomb Threat: விமான நிறுவனங்களுக்குத் தலைவலி தரும் வெடிகுண்டு மிரட்டல்கள்; அலைக்கழிக்கப்படும் பயணிகள்

post image

கடந்த சில வாரங்களாக ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் அன்றாடம் தவறாமல் இடம்பெறும் ஒரு செய்தி... விமானங்களுக்கு விடுக்கப்படும் வெடிகுண்டு மிரட்டல்கள். இவற்றின் திடீர் அதிகரிப்பால் அண்மைக் காலமாக ஏராளமான விமானங்கள் திருப்பி விடப்படுவதும், சில ரத்து செய்யப்பட்டு பயணிகள் பெரும் இன்னலுக்கு ஆளாவதும் தொடர் கதையாகி வருகின்றன.

ஒரு வாரத்தில் மட்டும் இந்திய விமான நிறுவனங்களுக்கு 90 வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன. அதற்கும் மேல் கடந்த ஜூன் மாதம் ஒரே நாளில் மின்னஞ்சல் வழியாக வந்த 41 மிரட்டல்களால் பல விமானங்கள் தாமதமாகின.

இந்திய விமான நிலையங்களுக்கு இப்படியான வெடிகுண்டு மிரட்டல்கள் புதிதல்ல. கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 2017 வரை மொத்தம் 120 மிரட்டல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அதில், நாட்டின் பெரிய விமான நிலையங்களான மும்பை மற்றும் டெல்லி விமான நிலையங்களுக்கு வந்த மிரட்டல்கள் பாதிக்கும் அதிகம். எனினும் கடந்த சில ஆண்டுகளை ஒப்பிடும்போது இந்த ஆண்டு வந்து கொண்டிருக்கும் மிரட்டல்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது என்கின்றனர் அதிகாரிகள்.

இந்த மிரட்டல்களை நிபுணர்கள் 5 வகையாகப் பிரிக்கின்றனர். உண்மையிலேயே தீய நோக்கத்துடன் வரும் மிரட்டல், கவன ஈர்ப்புக்காக விடுக்கப்படுபவை, பிராங்க் அல்லது விமானச் சேவையைத் தடுக்கும் நோக்கம் கொண்டவை, மனநல பிரச்சினை. இது போன்ற மிரட்டல்கள், இந்தியா போன்ற அதிவேகமாக வளரும் விமானச் சேவை சந்தையைக் கொண்ட நாட்டில் கடும் சிக்கலை ஏற்படுத்துகின்றன.

விமானம்

கடந்த ஓராண்டில் மட்டும் 15 கோடி இந்தியர்கள் உள்நாட்டு விமான பயணம் மேற்கொண்டதாக இந்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 33 சர்வதேச விமான நிலையங்கள் உட்பட 150-க்கும் மேற்பட்ட விமான நிலையங்களில் தினமும் 3,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் இந்தியாவுக்கு வந்து செல்கின்றன.

கடந்த அக். 14 அன்று இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் சுமார் 4,84,263 பயணிகள் விமானப் பயணங்களை மேற்கொண்டிருக்கின்றனர். இப்படியான ஒரு சூழலில்தான் இந்த வெடிகுண்டு புரளிகளும் முன்னெப்போதும் இல்லாத வகையில் உச்சம் தொட்டுள்ளன.

வானில் பறந்துகொண்டிருக்கும் ஒரு விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும்போது அதில் இருக்கும் பயணிகள் எதிர்கொள்ளும் சிரமங்கள் என்ன?

விமானம் உடனடியாக அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு விமான நிலையத்தில் தரையிறக்கப்படும். அந்த விமானம் தரையிறங்கியதும், அதில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகள் அனைத்தும் முழுமையான பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். கண்டிப்பாக இதற்குப் பல மணி நேரம் ஆகும்.

இன்னொருபுறம் விமானத்திலிருந்த விமானிகள் உள்ளிட்ட அதே குழு மீண்டும் அதே விமானத்துக்கு அனுப்பப்பட மாட்டார்கள். அதற்குப் பதில் வேறொரு குழு ஏற்பாடு செய்யப்பட வேண்டும். இதற்கும் சில மணி நேரங்கள் ஆகும். சில நேரம் இந்த தாமதம் விமானம் ரத்து செய்யப்படவும் வழிவகுக்கும்.

விமானம்

யாரோ சிலர் தங்கள் பொழுதுபோக்குக்காக விடுக்கப்படும் இது போன்ற போலி வெடிகுண்டு மிரட்டல்கள் ஆயிரக்கணக்கான மக்களின் நேரத்தையும், விமான நிறுவனங்களின் பணத்தையும் வீணாக்குகின்றன.

வரும் மிரட்டல்களில் 99.9 சதவீத மிரட்டல்கள் போலியானவைதான் என்றாலும், அந்த 0.1 சதவீத மிரட்டல் உண்மையாக இருந்துவிடக் கூடாது என்பதற்காகவே இத்தனை கெடுபிடிகள். கடந்த வாரம் வந்து 90 மிரட்டல்களில் 70% மிரட்டல்கள் ஆடம் லான்ஸா (@adamlanza1111) என்ற எக்ஸ் கணக்கிலிருந்து வந்துள்ளன.

இந்த ஆடம் லான்ஸா யார் என்று பார்த்தால், இவர் கடந்த 2012ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஒரு சிறார் பள்ளியில் 20-க்கும் மேற்பட்ட பிஞ்சுக் குழந்தைகளை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்று தானும் சுட்டு தற்கொலை செய்துகொண்டவர். அவரது பெயரில் ஒரு போலிக் கணக்கு தொடங்கி மிரட்டல் விடுப்பதன் மூலம் மிரட்டல் விடுக்கும் அந்த நபர் என்ன சொல்ல வருகிறார் என்று புரியவில்லை.

கடந்த அக்.15-ஆம் தேதி மும்பையிலிருந்து 211 பயணிகளுடன் சிகாகோ புறப்பட்ட போயிங் விமானம் ஒன்று திருப்பிடவிடப்பட்டது. இது போல இன்னும் சில விமானங்கள் வேறு விமான நிலையத்துக்கு விடப்பட்டதால் சமூக வலைத்தளங்களில் விமான நிறுவனங்களின் பக்கங்களில் பயணிகள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கடந்த ஞாயிறு (அக்.20) அன்று விஸ்தாரா, ஏர் இந்தியா, இண்டிகோ நிறுவனங்களுக்குச் சொந்தமான 24 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன.

இந்திய விமான நிறுவனங்களைக் குறிவைத்து, உள்நாட்டு மற்றும் சர்வதேச செயல்பாடுகளைப் பாதிக்கும் இவ்வகை சீர்குலைக்கும் செயல்கள் ஆழ்ந்த கவலை அளிப்பதாகவும், இத்தகைய குறும்புத்தனமான மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளைக் கண்டிப்பதாகவும் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பல விமானங்களுக்கு ஏற்கெனவே வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வரும் நிலையில், காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னுன் விடுத்துள்ள மிரட்டல் ஒன்று கூடுதல் கவனம் பெற்றுள்ளது. சீக்கியர் படுகொலையின் 40-வது நினைவு தினத்தை முன்னிட்டு ‘நவம்பர் 1-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை ஏர் இந்தியா விமானத்தில் யாரும் பறக்க வேண்டாம்’ என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளது பீதியை மேலும் கிளப்பியுள்ளது.

விமானம்

ஆனால், சமீபத்தில் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல்களுக்கும் காலிஸ்தானுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது சந்தேகமே. ஏனெனில், பன்னூனின் மிரட்டல் என்பது வருடாந்திர ஒன்றுதான். சீக்கியர் படுகொலை நினைவு தினம் கடந்த ஆண்டு அனுசரிக்கப்பட்டபோது, ஏர் இந்தியா விமானத்தில் யாரும் பறக்க வேண்டாம் என அவர் மிரட்டல் விடுத்திருந்தது இங்கே நினைவுகூரத்தக்கது.

எந்தவொரு அடையாளமும் இல்லாமல் போலி சமூக ஊடக கணக்குகளிலிருந்து விடுக்கப்படும் இந்த மிரட்டல்களால், அதை விடுத்தவரின் நோக்கம் என்னவென்று அறிந்து கொள்வதே அதிகாரிகளுக்கு பெரும் தலைவலியைத் தருகிறது. காரணம், மிரட்டல் விடுத்தவர் யார்? அவரது நோக்கம் என்ன? உண்மையிலேயே அவருக்கு இருப்பது தீய நோக்கமா? அல்லது பொழுதுபோக்குக்காக இப்படிச் செய்தாரா? அவர் தனிநபரா? அல்லது குழுவா? என இதனைப் பல்வேறு கோணங்களில் விசாரிக்க வேண்டும்.

கடந்த வாரம் 3 சர்வதேச விமானங்கள் உட்பட 4 நான்கு விமானங்களுக்கு மிரட்டல் விடுத்ததாக 17 வயது சிறுவனை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் அவரது நோக்கம் என்ன என்பதை போலீஸாரால் தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியவில்லை. மேலும் சில மிரட்டல்கள் இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இது போன்ற மிரட்டல் விடுப்பவர்கள் விமான பயணங்களை மேற்கொள்ள வாழ்நாள் தடையும், ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கவும் மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இந்த மிரட்டல்கள் உண்மையானவையோ அல்லது தனிநபரின் குறும்புத்தனமோ எதுவாக இருப்பினும், பாதிக்கப்படுவதோ என்னவோ பயணிகள் ஆகிய பொதுமக்கள்தான்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

தரைப்பாலத்தில் தேங்கும் தண்ணீர்; அச்சத்துடனே பயணிக்கும் மக்கள் - கண்டுகொள்வார்களா அதிகாரிகள்?

திண்டுக்கல் மாவட்டம், பழைய கரூர் சாலையில் மக்கள் அதிகம் பயணிக்கும் பிரதான தரைப்பாலம் ஒன்று உள்ளது. ரயில்வே கேட் அடிக்கடி போடுவதால் மக்கள் சிரமமின்றி பயணம் செய்ய இந்த தரைப்பாலம் கட்டப்பட்டது. ஆனால் இந்... மேலும் பார்க்க

திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையத்தின் அவல நிலை! - சீரமைப்பார்களா அதிகாரிகள்?

திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையம் தற்போது குப்பைகள் கொட்டும் இடமாக மாறி, கழிவுநீர் உள்ளே செல்லும் அவல நிலை உருவாகி உள்ளது. மேலும், இரவு நேரங்களில் குற்றச் சம்பவங்கள் நடக்கும் சமூக விரோதிகளின் கூடாரம... மேலும் பார்க்க

வயநாடு: முதன் முறையாகத் தேர்தலில் களமிறங்கும் பிரியங்கா காந்தி; வேட்புமனு தாக்கலுடன் இன்று பேரணி!

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் வயநாடு மற்றும் ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டு, இரண்டிலும் வெற்றி பெற்றார் ராகுல் காந்தி. விதிமுறைகளின் ஏதாவது ஒரு தொகுதிய... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: சரிந்துவிழும் நிலையில் மின்கம்பம்... அச்சத்தில் மக்கள்.. நடவடிக்கை எடுக்குமா அரசு?

திருப்பத்தூரில் கடந்த ஆண்டு நெடுஞ்சாலையின்நடுவே வரிசையாக மின் விளக்கு கம்பங்கள் அமைக்கப்பட்டது. இதில், பேருந்து நிலையத்தின் முன் அமைக்கப்பட்ட மின் விளக்கு கம்பங்களில் ஒன்றுதற்போது சேதமடைந்தது, பொதுமக்... மேலும் பார்க்க

BSNL: இனி நோ `கனெக்டிங் இந்தியா', ஒன்லி `கனெக்டிங் பாரத்'; காவி மயமாக்கப்பட்ட பி.எஸ்.என்.எல் லோகோ!

மத்திய அரசின் பொது ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதியின் (Prasar Bharati), தூர்தர்ஷன் இந்தி செய்தி சேனலின் லோகோ நிறம், கடந்த ஏப்ரலில் காவி நிறத்துக்கு மாற்றப்பட்டது. அந்த சமயத்தில் இதற்கு அரசியல் எதிர... மேலும் பார்க்க

PMK: ``தீபாவளிக்காக தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்குவது தனியார்மயமே'' - அன்புமணி

தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 31-ம் தேதி வரவிருக்கிறது. லட்சக் கணக்கான மக்கள் சென்னையிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பவுள்ளனர். இதற்கான அரசு போக்குவரத்து முன்பதிவுகள் இரண்டு மாதங்களுக்கு முன்பே தொடங்... மேலும் பார்க்க