செய்திகள் :

இஸ்ரேல் மீது டிரோன் தாக்குதல் நடத்திய இராக்!

post image

இஸ்ரேல் எல்லைகளில் நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலுக்கு இராக்கைச் சேர்ந்த ஷியா ஆயுதக் குழு பொறுப்பேற்றுள்ளது.

இது தொடர்பாக ஷியா ஆயுதக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேலின் எலியாட் பகுதியில் இரு டிரோன்கள் மூலம் எங்கள் போராளிகள் தாக்குதல் நடத்தினர். இதேபோன்று மீண்டும் இரு டிரோன்கள் மூலம் வடக்கு இஸ்ரேலில் உள்ள கோலன் பகுதியை இலக்காக வைத்து அனுப்பப்பட்டது. மேலும் ஒரு டிரோன் இஸ்ரேலின் ஸின்ஹுவா பகுதியில் தாக்கியது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலஸ்தீன் மற்றும் லெபனானில் உள்ள எங்கள் மக்களுடனான ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில், எதிரிகளின் நிலைகள் மீது தாக்குதலை வேகப்படுத்துவதைக் காட்டுவதற்காக இந்தத் தாக்குதலை நடத்தியதாகவும் இராக் குறிப்பிட்டுள்ளது.

இலக்குகளில் நேரிட்ட சேதம் மற்றும் உயிரிழப்புகள் குறித்து எந்தத் தகவலையும் இராக் தெரிவிக்கவில்லை.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன ஆதரவு பெற்ற ஹமாஸ் படையினருக்கும் இடையிலான போர் கடந்த ஆண்டு அக். 7ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து இரு தரப்பினரும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் இஸ்ரேல், காஸா எல்லையில் ஊடுருவி பெரும் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. லெபனானிலும் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுக்கள் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், பாலஸ்தீனத்துக்கான ஆதரவைக் காட்டும் வகையில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ஆதரவு பெற்ற நாடுகளின் மீது இராக் அவ்வபோது தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

பாபா சித்திக் வழக்கு: மேலும் ஒருவர் கைது; இதுவரை 11 பேர்!

பாபா சித்திக் கொலை வழக்கில் மேலும் ஒருவரை மும்பை குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இன்று (அக். 23) கைது செய்தனர். இதனால், இந்த வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ள... மேலும் பார்க்க

மணிப்பூர் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 7660 தற்காலிக வீடுகள்!

மணிப்பூர் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காலிக வீடுகள் கட்டத் தரப்படும் என்று முதல்வர் பிரேன் சிங் தெரிவித்தார்.மணிப்பூரில் நிலவி வரும் இன வன்முறை வெடித்ததில் இருந்து, பொதுமக்கள் பள்ளிகள், கல்... மேலும் பார்க்க

பட்டப்பகலில் சந்தையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி!

பஞ்சாபில் விவசாயிகளின் ஏஜென்ட் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.பஞ்சாபின் அமிர்தசரஸில் குர்தீப் சிங் என்பவர் விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் இடையில் ஏஜென்டுபோ... மேலும் பார்க்க

பெங்களூரு: 100 வீடுகளைச் சூழ்ந்த கனமழை வெள்ளம்

பெங்களூருவில் பெய்த கனமழையால் சுமார் 100 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.பெங்களூருவின் தெற்கு பகுதிகளில் புதன்கிழமை (அக். 23) மாலை 4 மணியளவில் பலத்த மழை பெய்தது. இதன் விளைவாக, எலச்செனஹள்ளியில் உள்ள ராமகிருஷ... மேலும் பார்க்க

மனநலம் பாதித்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் மனநலம் பாதிக்கப்பட்ட 40 வயதான பெண் ஒருவர், திங்கள்கிழமை (அக். 21) நள்ளிரவில் சால... மேலும் பார்க்க

வாக்களிப்பது எப்படி? தொகுதிவாரியாக விழிப்புணர்வு வாகனங்கள்!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) குறித்தும் சரிபார்ப்பு இயந்திரம் (விவிபேட்) குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. தில்லியி... மேலும் பார்க்க