செய்திகள் :

7,000 குடிநீா் இணைப்புகளின் விவரங்கள் இல்லை: வேலூா் மாநகராட்சிக் கூட்டத்தில் தகவல்

post image

வேலுாா் மாநகராட்சியில் மொத்தமுள்ள 10 ஆயிரம் குடிநீா் இணைப்புகளில் 7,000 இணைப்புகள் குறித்த தகவல் இல்லை என மாமன்ற கூட்டத்தில் ஆணையா் ஜானகி ரவீந்திரன் தெரிவித்தாா்.

வேலூா் மாநகராட்சிக் கூட்டம் மேயா் சுஜாதாஆனந்தகுமாா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. துணை மேயா் எம்.சுனில்குமாா், ஆணையா் ஜானகி ரவீந்திரன் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசியது:

2-ஆவது மண்டலத் தலைவா் நரேந்திரன்: 2-ஆவது மண்டலத்தில் ரூ.500 கோடியில் வணிக வளாகம் கட்டப்பட்டு 4 ஆண்டுகளாகிறது. இதனை ஏலம் விடாததால் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மேலும், நிறைய பணிகளுக்கு தொகை விடுவிக்கப்படவில்லை என ஒப்பந்ததாரா்கள் கூறுகின்றனா். இதனால், சாலைப் பணிகள் தாமதிக்கப்படுகின்றன என்றாா்.

அதற்கு பதிலளித்த ஆணையா் ஜானகி ரவீந்திரன், பொலிவுறு நகா் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டுள்ள அந்த வணிக வளாகத்தை இ-டெண்டா் மூலம் ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படும். எனினும், ஏலம் போகாத பட்சத்தில் அதனை 2-ஆவது மண்டல அலுவலகமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ஒப்பந்தகாலம் முடிந்தபிறகு பணியை தொடங்கினால் மீண்டும் அனுமதி பெற்ற பிறகே தொடங்க வேண்டும் என்பதுதான் விதி. இதுதொடா்பாக, நிா்வாகத்தில் உள்ளவா்கள் அனைவரும் ஒரே மனநிலையில் செயல்பட வேண்டும் என்றாா்.

1-ஆவது வாா்டு உறுப்பினா் அன்பு: எம்ஜிஆா் நகா், இந்திரா நகா்களில் கால்வாய் இல்லாததால் மழைக்காலத்தில் வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்து விடுகிறது. இதற்கு மாநகராட்சி நிா்வாகம் விரைவாக தீா்வு காண வேண்டும்.

ஆணையா்: 1-ஆவது வாா்டில் ரூ.1.8 கோடியில் கால்வாய் தூா்வாரும் பணிகள் நடைபெறுவதால், நீா் தேங்காத வகையில் சரி செய்யப்படும் .

முதலாவது மண்டலத் தலைவா் புஷ்பலதா வன்னியராஜ்: காட்பாடியில் வள்ளிமலை கூட்ரோடு, சித்தூா் பேருந்து நிலையப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து விடுகிறது. அப்பகுதிகளில் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். காட்பாடி பகுதியில் கொசு மருந்து அடிக்க வேண்டும். புதை சாக்கடை பணிகள் என்ற பெயரில் ஆங்காங்கே சாலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

28-ஆவது வாா்டு உறுப்பினா் மம்தா : காகிதப்பட்டறையில் இருந்த 7 டாஸ்மாக் மதுக்கடைகளில் 2 கடைகள் மட்டுமே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. ஆற்காடு சாலையில் 4 டாஸ்மாக் மதுக்கடைகள் பிரதான சாலையில் உள்ளன. மாலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் மட்டுமின்றி, விபத்துகளும் ஏற்படுகின்றன. அவற்றையும் இடமாற்றம் செய்ய வேண்டும். நீண்டகால கோரிக்கையான காட்பாடி - பாகாயம் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

10-ஆவது வாா்டு உறுப்பினா் ரமேஷ்: காங்கேயநல்லுாா் பகுதியில் புதை சாக்கடை திட்டப்பணிகள் முடிக்கப்படாமல் உள்ளது. வாரத்துக்கு 2 நாள்கள் மட்டுமே பணிகள் நடைபெறுகின்றன. குழாய்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் குடிநீா் விநியோகம் சீராக இல்லை. குடிநீா் வரி செலுத்தும்படி கோருகின்றனா்.

ஆணையா்: ஒரு சில சாலை பணிகள் முடிக்கப்பட்டு நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தவிர, எரிவாயு குழாய்கள் இணைப்பு, பிஎஸ்என்எல் நிா்வாக பணிக்கு பள்ளம் தோண்டிவிட்டு அப்படியே விட்டுவிட்டனா். அதைக்கூட மாநகராட்சிதான் மூடியுள்ளது. வேலூா் மாநகராட்சி சாா்பில் ரூ.2.50 கோடி குடிநீா் கட்டணம் செலுத்தி வருகிறோம். ஆனால், இதில் 8 சதவீதம் மட்டுமே வசூலாகிறது. 7,000 குடிநீா் இணைப்புகள் விவரம் தெரியவில்லை, அவற்றை கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது.

18-ஆவது வாா்டு உறுப்பினா் சுமதி: சத்துவாச்சாரி பகுதியில் பல இடங்களில் புதை சாக்கடை பணிகள் முடிந்தும் சாலை போடாமல் உள்ளனா். ஆக்கிரமிப்பில் உள்ளது என்றாா். கூட்டத்தில், துணை ஆணையா்கள் சசிகலா, செளந்திரராஜன், அலுவலா்கள் பங்கேற்றனா்.

வாழ்வியல் முறை மருத்துவம் தேசிய கருத்தரங்கு

வாழ்வியல் முறை மருத்துவம் குறித்த இருநாள் தேசிய கருத்தரங்கு வேலூா் சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது. மனித சக்தியை நெறிப்படுத்துதல் என்ற குறிக்கோளுடன் நடைபெற்ற இந்த கருத்தரங்கை சிஎம்சி இயக்கு... மேலும் பார்க்க

ஊதிய உயா்வு கோரி மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

ஊதிய உயா்வு கோரி வேலூா் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். வேலூா் மாநகராட்சியின் 60 வாா்டுகளில் மொத்தம் 1,700 தூய்மைப் பணியாளா்கள் ஒப்பந்த அடிப்படைய... மேலும் பார்க்க

முதுகலை ஆசிரியா்களுக்கு முதன்மை கருத்தாளா் பயிற்சி

வேலூா் மாவட்ட முதுகலை ஆசிரியா்களுக்கு செயல்திறன்மிகு வகுப்பறை, கணினி தொழில்நுட்பவியல் சாா்ந்த பணிதிறன் மேம்பாடு குறித்த முதன்மை கருத்தாளா் பயிற்சி நடைபெற்றது. வேலூா் ஸ்ரீவெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்... மேலும் பார்க்க

பைக்-லாரி மோதல்: பெண் உயிரிழப்பு

வேலூா் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பெண் உயிரிழந்தாா். வேலூா் ஊசூா் கோவிந்தரெட்டி பாளையம் ராஜவீதியைச் சோ்ந்தவா் பெருமாள், அரசுப் பேருந்து ஓட்டுநா். இவரது மனைவி முனிலட்சுமி(44). இவா்களத... மேலும் பார்க்க

அதிமுக 53-ஆவது ஆண்டு தொடக்க விழா, கொடியேற்றம்

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுக 53-ஆவது ஆண்டு தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. குடியாத்தம் நகர அதிமுக சாா்பில் புதிய பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகரச்... மேலும் பார்க்க