பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ( 11-ம் நாள்) தினத்திற்கான முதல் இரண்டு புரோமோக்கள் வெளியாகி இருந்த நிலையில், மூன்றாவது புரோமோவும் வெளியாகிவிட்டது.
இரண்டாவது ப்ரோமோவில் தர்ஷா குப்தா, "என்னை அனைவரும் சேர்ந்து காயப்படுத்திட்டே இருக்காங்க. இப்படி எல்லாம் நடக்கும் போது நான் ஏன் இப்படி இருக்க வேண்டும் என தோன்றுகிறது. ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் இப்படி தான் செய்கிறார்கள். விளையாட்டுக்கு செய்ததாக இருந்தாலும், நான் ஒரு ஷோவில் (cwc)வில் அவ்வளவு நாள்கள் இருந்துவிட்டு வந்துருகிறேன், இப்போது இப்படி நீங்கள் பேசினால், வெளியே இருக்கும் மக்கள் என்னை பற்றி என்ன நினைப்பாங்க" என அவர் சமையலை கிண்டல் செய்தது தொடர்பாக அழுதுக்கொண்டு பேசிருந்தார்.
தற்போது வெளியாகி உள்ள மூன்றாவது ப்ரோமோவில் தர்ஷாவிற்கு விஜே விஷால் அட்வைஸ் செய்வது போன்று வீடியோ வெளியாகி இருக்கிறது. "பசங்க உன்னை உரிமையா கலாய்க்கிறார்கள் என்றால் நீ அவங்களோட கேங்குல ஒருத்தவுங்களா இருக்கிறதாலதான். உண்மையை சொல்லு நாங்க எல்லாரும் உன்ன கலாய்க்கும்போது நீயும் சிரிச்சுட்டு தானே இருந்த. பிறகு அங்க பாத்ரூமில் வைத்து நீ அழும்போது உன்னிடம் யார் கேட்டார் என்று கேட்க, அதற்கு தர்ஷா தர்ஷிகாதான் கேட்டா என்று சொல்கிறார்.
பிறகு அங்க பாத்ரூமில் வைத்து நீ அழும்போது உன்னிடம் யார் கேட்டார் என்று கேட்க, அதற்கு தர்ஷா தர்ஷிகாதான் கேட்டா என்று சொல்கிறார். அதற்கு விஷால் இங்க நடக்கிறதை எல்லாம் பார்த்தா பொண்ணுங்க எல்லாரும் சேர்ந்து கேம் விளையாடறாங்க.
நீ இங்க இருந்து அங்க போனா கூட நீ இனி தனி ஆளாகத்தான் இருக்கணும். இதை மனசுல வச்சி விளையாடு என்று அட்வைஸ் செய்திருக்கிறார். இந்த ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த ப்ரோமோ இங்கே!