செய்திகள் :

BB Tamil 8 Day 11: `அழுகை; அழுகை; அழுகையோ அழுகை' - தர்ஷாவின் புலம்பல்; அன்ஷிதா நடித்த காதல் காட்சி

post image
மன உளைச்சல் நேரும் சமயங்களில், பொதுவாக ஆண்களின் வெளிப்பாடு கோபமாக இருக்கும் என்றால், பெண்களின் எக்ஸ்பிரஷன் கண்ணீர் வழியாகத்தான் வெளிப்படும். எத்தனையோ நூற்றாண்டுகளாக அடக்கி வைக்கப்பட்டிருந்த பெண்களின் உணர்வுகள் அழுகையின் மூலமாகத்தான் வெளியாகும் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆணோ, பெண்ணோ உண்மையான கண்ணீருக்குத்தான் மதிப்பு அதிகம். போலியான கண்ணீர் எரிச்சலையே ஏற்படுத்தும். அந்த வகையில் பிக் பாஸ் வீட்டில் சில பெண்கள் எதற்கெடுத்தாலும் கண்ணைக் கசக்குவது சலிப்பை ஏற்படுத்துகிறது. போலி ஆயுதங்கள் உடல்நலத்திற்கு மட்டுமல்ல, சமூகத்திற்கும் தீங்கானது. 

பிக்பாஸ் வீடு

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 11

சிறுமழை பெய்து கொண்டிருக்க, ‘சங்கத்தமிழன்’ என்கிற படத்திலிருந்து ‘கமலா கலாசா’ என்கிற பாடலை அலற விட்டார் பிக் பாஸ். அர்னவ்விடம் முன்பு கோபப்பட்ட அருண், இப்போது மனம் மாறி ‘மன்னிச்சுடு மச்சி’ என்று வேண்டிக் கொண்டார். பெரும்பாலும் ஜென் மோடில் இருக்கிற அர்னவ், ‘இட்ஸ் ஓகே’ என்று ஏற்றுக் கொண்டார். 

இன்னொரு பக்கம், முத்துவிடம் முன்பு ஹிஸ்டீரிக்கலாக கத்திய அன்ஷிதா (எனக்குப் பேச இஷ்டம் இல்லா!) இப்போது அவரிடம் “பெண்களின் பாதுகாவலனாகப் பேசிய முத்துவா இப்படி மாறிச்சுன்னு ஆச்சரியமா இருந்ததுடா.. நீ பதிலுக்கு கோபப்பட்டிருந்தா கூட பரவாயில்லடா.. ஒரு மாதிரி தெனாவெட்டா பார்த்தியா.. அதான் சுர்ருன்னு ஏறிடுச்சு” என்கிற மாதிரி விளக்கம் தந்து கொண்டிருக்க “அண்ணன்.. எப்பவுமே மத்தவங்களை பேச விட்டு வேடிக்கை பார்ப்பேன். நான் என்ன கலர் மாறினேன்? அதே கலர்லதானே இருக்கேன்” என்பது போல் முத்துவும் கூலாக பதில் சொல்லிக் கொண்டிருந்தார். 

சவுந்தர்யா

‘வாட்டர் இன்சார்ஜ்’ ஆன சவுந்தர்யாவை ஏற்றி விடுவதன் மூலம் பெண்கள் அணியில் கலகம் ஏற்படுத்த முத்து முயற்சிக்கிறாரா என்று தெரியவில்லை. “ஊருக்கெல்லாம் தண்ணி தர்ற அதிகாரம் உன் கிட்டதான் இருக்கு. அந்த பவரை வெச்சு என்ன பண்ணப் போறே?” என்று முத்து கேட்க “ஆமால்ல’ என்கிற மாதிரி யோசித்தார் சவுண்டு. “நீ என்ன பண்றே.. மத்தவங்க... ” என்று வில்லங்கமாக ஆரம்பித்து ரஞ்சித் ஒரு pause  விட “வாய்ல..?” என்று ஜெர்க் ஆனார் சவுந்தர்யா. “இல்லம்மா… மம்மு ஊட்ற மாதிரி மத்தவங்க வாய்ல தண்ணி ஊட்டி விடுங்க” என்று ரஞ்சித் முடித்தவுடன்தான் நமக்கும் ‘ஹப்பாடா’ என்றிருந்தது. சைலண்ட்டாக இருந்த ரஞ்சித்தின் கலாய்ப்புகள் இப்போதுதான் வெளியாக ஆரம்பித்திருக்கின்றன. மனிதர் இன்னமும் சில வாரங்கள் தாங்குவார் போல. 

சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய போட்டியாளர்கள்


“பிக் பாஸ் வந்து டாஸ்க் தர்ற வரைக்கும் வெயிட் பண்ண வேணாம்.. அவங்க அவங்களுக்கு இருக்கற டேலண்ட்டை வெளிப்படுத்தற மாதிரி ஏதாவது பண்ணலாம்” என்று ஐடியா கொடுத்தார் சத்யா. (இப்படித்தான் முன்ன ரவி ஆரம்பிச்ச டாஸ்க் வில்லங்கமா ஆச்சு!). “ஏய்.. ஆமாம்ப்பா.. ஏதாச்சும் பண்ணலாம்” என்று நடிப்புத் தாகத்துடன் இதை ஆமோதித்தார் ஜாக்குலின். அவர்களாகவே ஏற்பாடு செய்து கொண்டாலும் உண்மையிலேயே இந்த டாஸ்க் நன்றாக இருந்தது. 

‘மகாராஜா’ திரைப்படத்தின் ஒரு காட்சியை சாச்சனாவும் விஷாலும் உணர்ச்சிகரமாக நடித்துக் காண்பித்தார்கள். நடிப்பின் கூடவே விஜய்சேதுபதியின் குரலையும் விஷால் மமிக்ரி செய்தது சிறப்பு. அதைப் போலவே ‘காதல் பிரேக்அப்’ செய்வது மாதிரியான காட்சியில் அன்ஷிதாவும் விஷாலும் சிறப்பாக நடித்தார்கள். 

பிக்பாஸ் வீடு

‘என்னை விட்டுப் போயிடாத. நீதான் எனக்கு வேணும்” என்று அன்ஷிதா உருகி உருகி வசனம் பேச, கோபத்துடன் விலகுவது போல் நடித்த விஷால், இறுதியில் ‘எனக்கு அப்பான்னாதான் பயம். மத்தபடி ஐ லவ்யூங்க” என்று ஜெய் மோடிற்கு மாறி காமெடி செய்தது சுவாரசியம். அன்ஷிதா காதலில் உருகி வசனம் பேசிக் கொண்டிருக்கும் போது பிக் பாஸ் எடிட்டிங் டீம் அர்னவ்வின் க்ளோசப்பை அடிக்கடி காண்பித்தது குறும்பு. விஷாலுக்குள் ஒரு நல்ல நடிகன் இருக்கிறான் என்பதை இந்த டாஸ்க் நிரூபித்தது. 

அடுத்ததாக, ‘அப்பா -மகள்’ சென்டிமென்ட் காட்சியை ரஞ்சித்தும் ஜாக்குலினும் சிறப்பாக நடித்துக் காண்பித்தார்கள். இதன் பின்னணியில் ஜெஃப்ரி பாடிய பாடலும் அருமையாக இருந்தது. போட்டியாளர்களில் பெரும்பாலும் ஃபுரொபஷனல் நடிகர்கள் என்பதால் இயல்பாக தங்களின் திறமையை வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் ‘டாஸ்க்’ என்கிற பெயரில் தந்தால்தான் சொதப்பி விடுகிறார்கள். ‘டிவி டாஸ்க்’ அப்படித்தான் சுமாராக இருந்தது. 

ஆரம்பித்தது, ‘நாமினேஷன் ஃப்ரீ டாஸ்க்’


இந்த வார ‘நாமினேஷன் ஃப்ரீ பாஸிற்கான’ டாஸ்க்கை ஆரம்பித்தார் பிக் பாஸ். இது தனிநபர்களுக்கான போட்டியாக அல்லாமல் அணிகளுக்கு இடையேயான போட்டியாக இருக்கும். வெற்றி பெறும் அணியில் இருந்து ஒருவருக்கு நாமினேஷனில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் சக்தி கிடைக்கும். அறிவு, திறமை, டீம் வொர்க் ஆகியவற்றின் அடிப்படையில் மூன்று சுற்றுகளாக இந்த டாஸ்க் நடக்கும். 

முதல் டாஸ்க், க்விஸ் போட்டி. ‘தமிழ் மாதங்களில் ஆறாவது மாதம் எது?” என்கிற முதல் கேள்விக்கு மற்றவர்கள் திகைத்து அமர்ந்திருக்க, பாய்ந்து சென்ற முத்துக்குமரன் ‘புரட்டாசி’ என்கிற சரியான பதிலைச் சொல்லி ஆண்கள் அணியின் கைத்தட்டலைப் பெற்றார் முத்து. ‘மைசூர் பாகில்’ மைசூர் இருக்கும் என்கிற மாதிரி, குங்குமம் தயாரிப்பதற்கான மூலப்பொருள் ‘குங்குமப்பூ’ என்று சொல்லி பல்பு வாங்கினார் அருண். ‘பிக்பாஸ் 4வது சீசனின் வின்னர் ராஜூ’ என்று சொல்லி  சொதப்பினார் அர்னவ். 

பிக்பாஸ் வீடு

‘தமிழகத்தின் முதல் தலைநகரம், மதுரை’ என்கிற பதிலை முத்து சொன்னதும் ‘அதானே. கரெக்ட்டு’ என்று தோன்றியது. ஆனால் ‘கடலூர்’ என்கிற பதிலைச் சொல்லி பாயிண்ட் பெற்றார் ஆனந்தி. ஏதோவொரு கேள்விக்கு இரண்டு அணிகளில் இருந்தும் ஆட்கள் பாய்ந்து பஸ்ஸரை அடிக்க முயன்றதில் அது உடைந்து சிதறியது. (அப்ரண்டிஸ்களா! ஆர்வக்கோளாறுல சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களேடா! - பிக் பாஸ் மைண்ட் வாய்ஸ்!) 

அறிவு சார்ந்த போட்டி என்பதால் இதில் பெண்கள் அணிதான் வெற்றி பெறுவார்கள் என்பது முன்பே எதிர்பார்த்ததுதான். ஆனால் அப்படியும் சொல்லி விட முடியாது. பெண்கள் அணியில் இருந்த தீபக்தான் பெரும்பாலான கேள்விகளுக்கு சரியான பதில்களை பாய்ந்து பாய்ந்து சொல்லி பாயிண்ட் சேர்த்தார். இந்த முதல் சுற்றில் ஆண்கள் அணி 20 மதிப்பெண்களும் பெண்கள் அணி நாற்பது மதிப்பெண்களும் பெற்றிருந்தது. 

தர்ஷாவின அழுகை  - முதல் இன்னிங்ஸ்


அடுத்ததாக திறமை சார்ந்த போட்டி. ‘கப்புக்கு கோட்டையா, கனவுக் கோட்டையா?’ என்கிற தலைப்பில் ஒரு விளையாட்டு. ஒருவர் கோப்பைகளை அடுக்க வேண்டும், எதிர் அணியில் இருந்து மூன்று நபர்கள் பந்துகளை வீசி அதை கலைக்க முயல்வார்கள். அடுக்குபவரின் அணியில் இருந்து மூன்று நபர்கள் பந்துகளைத் தடுக்கும் பாதுகாவலர்களாக இருப்பார்கள். 

‘அங்கயும் சேர்த்துக்க மாட்றாங்க.. இங்கயும் சேர்த்துக்க மாட்றாங்க’ என்று தொடர்ந்து புலம்பும் தர்ஷா, ‘நான் இந்த டாஸ்க்ல ஆடட்டுமா?” என்று முகத்தை பரிதாபமாக வைத்துக் கொண்டு கேட்க, ‘நீ மட்டும் ஸ்கோர் பண்ண நெனக்கறியா?” என்று முன்பு அர்னவ்வை திட்டிய அருண், இப்போதோ  மனம் இரங்கி உடனே ‘நீ போறதா இருந்தா போ’ என்கிற மாதிரி க்ரீன் சிக்னல் கொடுத்தார். இப்போது அதை மறுப்பது அர்னவ்வின் டர்ன். “ஏற்கெனவே நாம ஸ்கோர் கம்மியா இருக்கோம். பார்த்துக்க.. தோத்தோம்னா.. வெச்சு செய்வேன்’ என்று வார்னிங் தந்ததும் ஆண்கள் அணி பம்மி, தர்ஷாவை அனுப்பும் முடிவை வாபஸ் வாங்கியது. 

பிக்பாஸ் வீடு

இது போதாதா? ‘’உங்களைக் கட்டிக்கிட்டு நான் என்ன சொகத்தைக் கண்டேன்’ என்று பொழுது பூராவும் மூக்கைச் சிந்தும் மனைவி மாதிரி, உடனே அழுகையைத் துவங்கி விட்டார் தர்ஷா. “எல்லாத்துக்கும் அழுதா எப்படிம்மா?” என்று சலித்துக் கொண்ட சத்யா “உன்னோட ஃபேன்ஸ்லாம் பார்த்தா என்ன நெனப்பாங்க?” என்று சமாதானப்படுத்த முயல “என்னை அவங்க புரிஞ்சிப்பாங்க” என்று அவர் மேலும் கண்ணைக் கசக்க, ‘தர்ஷாவை அவங்க ஃபேன்ஸ் கூடவே சேர்த்து வெச்சிடுங்க.. பிக் பாஸ்.. வெளில அனுப்பிடுங்க’ என்று நாமும் கூட சேர்ந்து கதறத் தோன்றியது. 

ஆண்கள் அணி முதலில் ஆடியது. கைகளை அரண் போல் வைத்துக் கொண்டு பாதுகாப்பாக கோப்பைகளை அடுக்க ஆரம்பித்தார் முத்து. ரஞ்சித், சத்யா, அருண் ஆகிய மூவரும் பாதுகாவலர்களாக நிற்க, தீபக், ஜாக்குலின், சுனிதா ஆகிய மூவரும் பந்துகளை ஆவேசமாக எறிந்து முத்துவின் ஆட்டத்தைக் கலைக்க முயன்றதில் ஒரு முறை வெற்றி கிடைத்தது. என்றாலும் 14 கோப்பைகளை திறமையாக அடுக்கி விட்டார் முத்து. கோப்பைகளை வெறுமனே அடுக்காமல், அதில் போடப்பட்டிருக்கும் எண்களின் வரிசையில் அடுக்க வேண்டும் என்பது கூடுதலான சவால். 

புத்திசாலித்தனமாக ஆடினாலும் தோற்ற பெண்கள் அணி

அடுத்து பெண்கள் அணி. இவர்கள் பல டெக்னிக்குகளை பின்பற்றினார்கள். டேபிளுக்கு அடியில் அமர்ந்து கோப்பைகளை பிரித்துக் கொண்டது தர்ஷிகாவின் ஸ்மார்ட்ன்ஸ். தனது ஸ்கர்ட்டை விரித்து எறியப்படும் பந்துகளை தடுத்தது பவித்ராவின் புத்திசாலித்தனம். ஆனால் ஆண்கள் அணியோ ‘இப்படில்லாம் டிரஸ்ஸை வெச்சு தடுக்கக்கூடாது. ஃபேர் கேம் இல்ல” என்று ஆட்சேபித்தது. இந்த வாக்குவாதத்தின் இடையில் ஆவேசமாக கத்திய ஜாக்குலினை ‘மென்ட்டல்’ என்று சொல்லி விட்ட சத்யா, உடனடியாக தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டார். 


முத்துவை விடவும் தர்ஷிகா அடுக்கிய கோப்பைகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. எனில் பெண்கள் அணி வெற்றியா? இல்லை. ‘பிசிக்ஸ் எக்ஸாமிற்கு தமிழ் லிட்ரேச்சர் படிச்சிட்டுப் போன கதையாக’ கோப்பைகளை எண்களின் வரிசையில் அடுக்குவதில் தர்ஷிகா சொதப்பி விட்டார். ‘சரியாப் பாருங்க பாஸூ’ என்று முத்து எச்சரிக்கை செய்ய, சத்யா சோதித்ததில் வெறும் பத்து கோப்பைகள் மட்டுமே சரியாக இருந்தன. எனவே ஆண்கள் அணி வெற்றி. முதல் சுற்றில் பெண்களும் இரண்டாம் சுற்றில் ஆண்களும் வெற்றி பெற்றிருப்பதால் சமநிலையில் இருக்கிறார்கள். மூன்றாவது சுற்றுதான் வெற்றியைத் தீர்மானிக்கும். 

பிக்பாஸ் வீடு

‘டாஸ்க்கில் ஆடிய களைப்பில் இருப்பதால், ஆட்டத்தில் கலந்து கொள்ளாத பெண்களை சமைக்கச் சொல்லுங்கள்” என்று ஆண்கள் அணியிடம் சுனிதாவும் ஜாக்குலினும் கேட்டுக் கொண்டார்கள். (இந்த விஷயத்தில் மட்டும் ஒற்றுமை வந்து விடுகிறது). இந்த வேண்டுகோளை விஷாலும் சத்யாவும் கருணையுடன் பரிசிலீத்தாலும் ‘டாஸ்க்குன்னா என்னா ஆவேசமா ஆடறாங்க. ஆனா வேலைன்னு வந்துட்டா மட்டும் டயர்ட் ஆகிடுதாம்மா” என்று காண்டானார் முத்து. 

தர்ஷாவின அழுகை  - இரண்டாவது  இன்னிங்ஸ்


தர்ஷாவின் இரண்டாவது இன்னிங்ஸ் அழுகைக்கான விஷயங்கள் நடந்தன. அதற்கான விதையைப் போட்டவர் விஷால். தர்ஷா சமைக்கும் போது வெங்காயத்தின் வாசனை போவதற்காக இஞ்சியைப் போட ‘என்னம்மா.. இது உலகத்துலயே இல்லாத நடைமுறையா இருக்கு? அப்ப இஞ்சி வாசனை போவதற்கு எதைப் போடுவே?” என்று கலாய்க்க ஆரம்பித்த விஷால், தொடர்ந்து கிண்டலில் ஈடுபட்டதால் ‘வெறுப்பேத்தாதடா’ என்று சலித்துக் கொண்ட தர்ஷா, அந்தத் திரவத்தில் மஞ்சள் தூள், கலர் வருவதற்காக மிளகாய்த் தூள் என்று கைக்கு வந்ததையெல்லாம் அள்ளிப் போட “அய்யய்யோ.. நேத்து சாப்பிட்ட செவப்பு கலரே இன்னமும் வயித்தைக் கலக்குது. இன்னிக்கு வேற கலரா?” என்று ஆண்கள் டீம் அலறியது. 

பிக்பாஸ் வீடு

தர்ஷா உருவாக்கி வைத்திருந்த திரவத்தை பட்டி, டிங்கரிங் பார்த்து ரிப்போ் செய்தார் அன்ஷிதா. ‘கொஞ்சம் கரம் மசாலா போடுங்க’ என்று அவர் பங்குக்கு கூடுதலாகப் போட்டு ‘வெள்ளம் வத்தட்டும். காத்திருப்போம்’ என்று மழை நிலவர அப்பேட் மாதிரி சொன்னார். (இங்கு வெள்ளம் என்பதை மலையாளத்தில் புரிந்து கொள்ள வேண்டும்!). “அப்படின்னா இஞ்சி வாசனை போறதுக்கு இன்னொரு இஞ்சி போடுவாங்களா.. இஞ்சி மசாலாவா ஆயிடுமே?” என்று வெளியில் முத்து பங்கமாக கிண்டலடிக்க, வெடித்து சிரித்தது ஆண்கள் அணி. 

தர்ஷா  அடித்த அந்தர் பல்டி


ஆண்களின் அலப்பறை அதிகமானதால், கண்ணீர் விடத் துவங்கிய தர்ஷா “என்னால இந்த டீம்ல இருக்க முடியலைடா. எது செஞ்சாலும் குத்தம் சொல்றாங்க. நான் செஞ்ச சாப்பாட்டை சாப்பிட்டு வாந்தி, பேதி, குளிர் சுரம், காலரா, கேன்சர், பிரையின் டியூமர் போன்ற வியாதிகள் வருவதாகச் சொல்றாங்க. நான் என்னதான் பண்றது?” என்று தாரை தாரையாக கண்ணீர் விட்டார் தர்ஷா. அவருடைய முக்கியமான கவலை என்னவென்றால் “நான் ஒரு சமையல் ஷோல கலந்துக்கிட்டவ. இவங்க என் சமையலை இப்படிக் குறை சொன்னா, என் ரசிகர்கள் என்னப் பத்தி என்ன நெனப்பாங்க?”என்பதுதான். (அதெல்லாம் ரசிகர்கள் புரிஞ்சுப்பாங்க!).

ஒரு பெண் அழ ஆரம்பி்த்தால் வேறு வழியே இல்லை. ஆண்கள் அணி பணிந்துதான் ஆக வேண்டும். “சரி.. மன்னிச்சிடும்மா..” என்று ஆண்கள் அணி சமாதானப்படுத்தியது. ‘நீங்க நல்லாத்தான் பார்த்துக்கறீங்க. ஆனா அவ சென்சிட்டிவ். அப்படித்தான் எமோஷனல் ஆயிடுவா. நீ அழாதடா செல்லம். பேசாம இந்த டீமிற்கே வந்துடு’ என்று தர்ஷாவை பெண்கள் அணி செல்லம் கொஞ்சியது. ‘யம்மா.. சாமி. எனக்கு சாப்பாடே வேணாம்’ என்று அலறி ஓடினார் விஷால்.

தர்ஷா

“நான் உக்காந்து விளக்கம் தரேன் பத்தியா.. அதான் தப்பு. இங்க யாரையும் செல்லம் கொஞ்சிட்டிருக்க முடியாது. இங்க  எல்லோருமே விளையாடத்தான் வந்திருக்காங்க. யாரும் சொகுசா இருக்கறதுக்கு வரலை. கோவம் வந்தா காட்டத்தான் செய்வேன். புரியட்டும். உன் சென்சிட்டிவிற்கு நான் ஆள் கிடையாது. ரெண்டு இடத்துலயும் சேர்த்துக்க மாட்றாங்கன்னா.. நீ வெளில போ” என்று பிறகு கறாராக ஆண்களிடம் விஷால் பேசிக் கொண்டிருந்தது சரியான பாயிண்ட். பெண்களின் மீது உண்மையான கரிசனத்தைக் காட்டுவது வேறு. போலியான அழுகைக்கு பலியாவது வேறு. 

“ஏண்டா. நீ சாப்பிடலை?” என்று பின்னர் வந்து விசாரித்த தர்ஷாவிடம் “நாம..இங்க எவ்வளவு ஜாலியா இருக்கோம்.. ஒரு காலேஜ் ஃபீல் கொண்டு வரலை.. நாங்க கலாய்ப்போம்ன்னு உனக்குத் தெரியும்தானே.. மத்த சமயங்கள்ல நீ சிரிக்கலை.. அப்ப இதையும் ஜாலியா எடுத்துக்க வேண்டியதுதானே?” என்று விஷால் விளக்கம் தர “ஆமாம்டா.. கரெக்ட்டுதான்” என்று ஒப்புக் கொண்ட தர்ஷா, பிறகு அடித்த அந்தர் பல்டி வேற லெவல் ரகம்.

‘ஆண்கள் கிண்டலடிப்பதால்தான் அழுகிறேன்’ என்று பெண்களிடம் புலம்பி அனுதாபத்தைச் சம்பாதி்த்த தர்ஷா, இப்போதோ “அவங்க என்னை சென்சிட்டிவ்-ன்னு சொல்றாங்கடா.. அதைக் கேட்டவுடன்தான் பயங்கர அழுகை வந்தது” என்று சொல்வதின் மூலம் ‘உலக நடிப்புடா சாமி’ என்று நம்மை வியக்க வைத்தார். 

‘நாமினேஷன் ஃப்ரீ பாஸ்’ டாஸ்க்கின் மூன்றாவது சுற்றில் வெற்றி பெறப்போவது எந்த அணி என்பதை விடவும், அந்த பாஸை கைப்பற்றுவதற்காக நடக்கப் போகும் கலவரத்தை நினைத்தால்தான், தர்ஷா தயார் செய்த மஞ்சள் திரவத்தைச் சாப்பிட்டது போல், இப்போதே வயிற்றைக் கலக்குகிறது.

BB Tamil 8 Promo: `நீ செஞ்சிருக்கக் கூடாது' வில்லங்க பட்டம்; கலங்கி அழும் அன்ஷிதா

12-வது நாளான இன்றைய எபிசோடில் பல எதிர்பார்ப்புகளுக்கு பதில்கள் கிடைக்கும்.வீக்கெண்டுக்கு எபிசோடுக்கு முன்பாகவே... அதாவது விஜய் சேதுபதியின் எபிசோட் ஒளிபரப்பாகுவதற்கு முந்தைய நாள் அந்த வாரத்தில் நடந்த ட... மேலும் பார்க்க

Siragadikka aasai & Kayal: மீனாவால் தூக்கமின்றி தவிக்கும் விஜயா| கயல் திருமணத்தை நிறுத்திய தீபிகா

சிறகடிக்க ஆசை சீரியலில் நேற்றைய எபிசோடில் (அக்டோபர் 17) ரோகிணி போட்ட பிளானில் விஜயாமண் அள்ளி போட்டுவிட்டார். போதாக்குறைக்கு மனோஜின் கடையில் ரவுடிகள் புகுந்து பொருள்களை அள்ளிச் சென்றுவிட்டனர்.ரோகிணி மு... மேலும் பார்க்க

Bigg Boss Season 8: அழுத தர்ஷா; அட்வைஸ் செய்யும் விஜே விஷால் - வைரலாகும் ப்ரோமோ..

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ( 11-ம் நாள்) தினத்திற்கான முதல் இரண்டு புரோமோக்கள் வெளியாகி இருந்த நிலையில், மூன்றாவது புரோமோவும் வெளியாகிவிட்டது.இரண்டாவது ப்ரோமோவில் தர்ஷா குப்தா, "என்னை அனைவரும் சேர... மேலும் பார்க்க

Siragadikka aasai: பாலில் மயக்க மருந்து; ரோகிணியின் திட்டம் கைக்கூடுமா?

குடும்பமாக அனைவரும் சாப்பிடும் போது மீனா அண்ணாமலையை நல்லா சாப்பிடுங்க மாமா என்கிறார். உடனே அவருக்கு தன் அம்மா நியாபகம் வந்துவிடுகிறது. முத்துவும் தன் பாட்டி உணவு பரிமாறும் விதத்தை சொல்லி நெகிழ்கிறார்.... மேலும் பார்க்க

தவறான தகவல்; நான் விஜய் கட்சியில உறுப்பினராகல;ஆனால்... - தாடி பாலாஜி

சமீபமாக நடிகர் விஜய்யையும் அவரது கட்சியையும் விமர்சிப்பவர்களைக் கொஞ்சம் கடுமையான தொனியில் பதிலடி கொடுத்து வருகிறார் நடிகர் தாடி பாலாஜி.தமிழக வெற்றிக் கழகம் குறித்து பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தமி... மேலும் பார்க்க