செய்திகள் :

Kanguva: `ஒவ்வொரு காட்சியையும் 100 முறைக்கு மேல் பார்த்தேன்!' - மதன் கார்க்கியின் கங்குவா விமர்சனம்!

post image

நன்றி: விகடன்இணையதளம்.

அடுத்த மாதம் பிரமாண்டமான முறையில் வெளியாகவிருக்கிறது `கங்குவா'.

சூர்யாவுடன் திஷா பதானி, பாபி தியோல் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இதுதான் திஷா பதானி மற்றும் பாபி தியோலின் தமிழ் டெபுட்! அதிகப்படியான பொருள்செலவில் பிரமாண்டமான முறையில் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது கங்குவா. இத்திரைப்படத்தின் திரைக்கதையாசிரியர்களில் ஒருவரான எழுத்தாளர் மற்றும் பாடலாசிரியர் மதன் கார்க்கி இத்திரைப்படம் குறித்தான விமர்சனத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

மதன் கார்க்கி

மதன் கார்க்கி, "கங்குவா திரைப்படத்தின் முழுபதிப்பை இன்று பார்த்தேன். டப்பிங் சமயத்தில் ஒவ்வொரு காட்சியையும் 100 முறைக்கு மேல் பார்த்தேன். ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் அதன் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. காட்சிகளின் பிரமாண்டம், கலையின் நுணுக்கம், கதையின் ஆழம், இசையின் கம்பீரம் என அனைத்தும் சூர்யா சாரின் பவர்ஹவுஸ் பெர்பாமென்ஸுடன் இணைந்திருக்கிறது.

இதுபோன்ற அற்புதமான அனுபவத்தை கொடுக்கும் திரைப்படத்தை எடுத்த சிவா சாருக்கும், கனவுகளை நனவாக்கிய ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்துக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்." எனப் பதிவிட்டிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Kanguva Vs Francis : ரெண்டு பேருக்கும் இருக்கிற வித்தியாசம் இது தான்! -Director Siva | Suriya | DSP

விகடன் குழுவினருக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில், கங்குவா பற்றிய விவரங்களை முதன்முறையாகப் பகிர்ந்துள்ளார் இயக்குநர் சிவா. அவர் சூர்யாவுடன் இணைந்து பணியாற்றுவது, தயாரிப்புக்கு முந்தைய பணிகள் மற்றும் ப... மேலும் பார்க்க

Suriya: `சில்லுனு ஒரு காதல்' ; சூர்யாவும் ஜோதிகாவும் மீண்டும் திரையில்? - சூர்யாவின் பதில்!

பிரமாண்டமான முறையில் வெளியாகிறது `கங்குவா'.சூர்யாவின் கரியரில் மிக முக்கியமான திரைப்படமாக கருதப்படும் இத்திரைப்படத்தின் மூலம் தமிழில் பாபி தியோலும் திஷா பதானியும் அறிமுகமாகிறார்கள். கங்குவா திரைப்படத்... மேலும் பார்க்க

Suriya: ``20 வருடங்களுக்கு முன்னால் ரஜினி சார் சொன்ன அந்த விஷயம்!'' - சூர்யா பேட்டி!

அடுத்த மாதம் 14- ம் தேதி திரைக்கு வருகிறது கங்குவா.சூர்யா, பாபி தியோல், திஷா பதானி ஆகியோர் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியிருக்கிறது இத்திரைப்படம். படத்தின் ப்ரோமோஷன் பணிகளை ஒரு மாதத்திற்கு முன்பாகவே ப... மேலும் பார்க்க

Amaran: "அந்த தருணத்துல சிவகார்த்திகேயனா பாக்கல; முகுந்த் வரதராஜனா பாத்தோம்.." - நடிகர் ஶ்ரீ குமார்

தீபாவளி வெளியீடாக `அமரன்' திரைக்கு வருகிறது.இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயனின் அதாவது முகுந்த் வரதராஜனின் `கேட்' குழுவில் பல மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் நடித்திருக்கிறார்கள். தமிழிலிருந்து நமக்கு மி... மேலும் பார்க்க