செய்திகள் :

Kerala: வீடு ஜப்தி... குழந்தையுடன் தவித்த பெண்ணுக்கு உதவிய லூலூ மால் தலைவர்!

post image

வீட்டுக் கடனை திரும்ப செலுத்த முடியாமல் தவித்த பெண்ணுக்கு, லூலு மால் தலைவர் யூசுப் அலிப் கடனை அடைத்து உதவி செய்துள்ளார்.

2019-ம் ஆண்டு கேரளாவைச் சேர்ந்த தம்பதி, கேரள அரசின் லைஃப் மிஷன் திட்டத்தின் கீழ், வீடு கட்டுவதற்காக தனியார் கடன் நிறுவனத்தில் ரூ.4 லட்சம் கடன் பெற்றுள்ளனர். இந்த கடன் மனைவி சந்தியாவின் பெயரில் எடுக்கப்பட்டுள்ளது.

லூலு மால் தலைவர் யூசுப் அலி

4.8 சென்ட் நிலத்தில் கட்டத் தொடங்கிய வீட்டு வேலை, கட்டுமான பொருள்களின் விலை உயர்வால் பாதியிலேயே தடைப்பட்டது. இந்த நிலையில், 2021-ம் ஆண்டு கணவன் - மனைவி இருவரும் பிரிந்துள்ளனர். இதனால், கடந்த மூன்று ஆண்டுகளாக, மனைவி கடனை கட்டவில்லை. இதனால் ரூ.4 லட்சம் கடன் தொகை ரூ.8 லட்சமாக உயர்ந்துள்ளது.

கடனை திரும்ப செலுத்தச் சொல்லி, கடன் நிறுவனம் அதிக முறை அறிவுறுத்தியும், இவர் கடனை திரும்ப செலுத்த முடியவில்லை. இதனால், திடீரென்று கடந்த வாரம், வங்கி நிறுவன அதிகாரிகள் சந்தியாவையும், அவரது குழந்தைகளையும் வெளியேற்றி வீட்டை ஜப்தி செய்துள்ளனர்.

இதை அறிந்த லூலு குழும தலைவர் யூசுப் கான் இந்த குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் கொடுத்துள்ளார். இந்த தொகையில் கடனை அடைத்துவிட்டு, மீதி உள்ள பணத்தை ஃபிக்ஸ்ட் டெபாசிட் செய்யவும் ஏற்பாடு செய்துள்ளார். யூசுப் கான் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் என்பது குறிப்பிடதக்கது.!

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Justice Angel Statue : நீதி தேவதையின் பூர்வீகம் தெரியுமா? - வரலாறும்... சிலையின் மாற்றங்களும்!

நீதி தேவதை சிலையை அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா என உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் காணமுடியும். குறிப்பாக நீதிமன்றங்கள், சட்ட அலுவலகங்கள், சட்டக் கல்வி நிறுவனங்களில் இடம்பெற்றிருக்கும். இந்தியாவில... மேலும் பார்க்க