செய்திகள் :

Meta: இதற்கெல்லாமா வேலையை விட்டு அனுப்புவாங்க..? - மெட்டா நிறுவன ஊழியர்கள் பணி நீக்கம்!

post image

நன்றி: விகடன்இணையதளம்.

உலகின் முன்னணி நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளாக தங்களது ஊழியர்களை தொடர்ச்சியாக பணிநீக்கம் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள துவங்கிவிட்டன. செலவுகளை குறைக்கவே ஆள் குறைப்ப்பு செய்யப்படுகிறது எனக் காரணம் கூறப்படுகிறது. இந்த நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் மெட்டா நிறுவனம் உணவு கார்ட்களை தவறாக பயன்படுத்தியதாக 24 ஊழியர்களை பணி நீக்கம் செய்திருக்கிறது. இது தொடர்பாக வெளியான செய்தியில், மெட்டா நிறுவனம் தன் ஊழியர்களுக்கு உணவு அட்டை வழங்குகிறது.

meta

அதன்படி, காலை உணவுக்கு 20 டாலர், மதியம், இரவு உணவிற்கு என 50 டாலர், தினப்படி என 75 டாலர் வழங்குகிறது. ஊழியர்கள் இந்தப் பணம் எதற்காக கொடுக்கப்பட்டதோ அதற்கு பயன்படுத்தாமல், நிறுவனத்தின் கொள்கை, வரையறைக்கு எதிராக அன்றாட உபயோகப் பொருள்கள் வாங்க பயன்படுத்துவதாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக நிறுவனம் நடத்திய விசாரணைக்குப் பிறகு, எச்சரிக்கைக்குப் பிறகும் தொடர்ந்து இந்த செயலை செய்து, முறைகேட்டில் ஈடுபட்ட 24 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சிலர், அந்த உணவு அட்டையை சரியாக பயன்படுத்துகிறார்கள். பல ஊழியர்கள் இந்தப் பணத்தை இன்னும் பெரிய கொள்முதல்களுக்காகச் சேகரித்தும் வருகின்றனர். இன்னும் சிலர், உணவை பார்சல் செய்து வீட்டுக்கு எடுத்துச் செல்கிறார்கள். இவைகளையும் கவனித்து எச்சரிக்கப்பட்டிருக்கிறது. இந்த பணிநீக்கம் ஊழியர்களின் தவறான நடத்தை, நிறுவனத்தின் கொள்கைகளுக்கு இணங்காதது பற்றிய கவலைகளை எழுப்புகிறது.

card

இது தொடர்பாக அங்கு பணிபுரிந்த முன்னாள் ஊழியர், ``சில நேரம் அலுவலகத்திற்குச் சென்று சாப்பிடாத நாள்களில், கார்டைத் தூக்கி எறிவது பணத்தை வீணடிப்பதாக உணர்ந்தேன். அதனால், அந்தப் பணத்தை பற்பசை, சோப் போன்ற தினசரி உபயோகப் பொருள்களை வாங்குவதற்குப் பயன்படுத்தியிருக்கிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார். மெட்டா நிறுவனத்தில் 2022-ம் ஆண்டு 11,000 பேரும் கடந்த ஆண்டு 10,000 பேரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்த ஆண்டும் பணிநீக்கம் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியிருப்பது குறிப்பிடதக்கது.

இந்தப் பணிநீக்கம் குறித்து சமூக வலைதளங்களில் இதற்கெல்லாமா பணிநீக்கம்.. என பலரும் விமர்சித்து வருகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

Samsung: ``தொழிற்சங்கம் அமைக்கலாம்.. ஆனா சாம்சங் பெயரில் கூடாது'' - நீதிமன்றத்தில் வாதிட்ட சாம்சங்!

தொழிற்சங்கம் அங்கீகாரம், சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சாம்சங் ஆலை தொழிலாளர்கள் கடந்த மாதம் 9-ம் தேதி தொடங்கி, இந்த மாதம் 15-ம் தேதி வரை போராட்டம் நடத்தினர... மேலும் பார்க்க