செய்திகள் :

Organ Donor: இதயத்தை அகற்றத் தயாரான மருத்துவர்கள்; கண் விழித்த இளைஞர்... அமெரிக்காவில் அதிர்ச்சி!

post image

அமெரிக்காவின் கென்டக்கியில் வசிப்பவர் தாமஸ் டிஜே ஹூவர் (36). இவர் போதைப் பொருளை அதிகமாக உட்கொண்டதால் திடீரென மயங்கி விழுந்தார். உடனே குடும்ப உறுப்பினர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதனால், மூளைச்சாவு ஏற்பட்டுவிட்டதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

தாமஸ் டிஜே ஹூவர்

இதனால், மனமுடைந்த அவரின் குடும்ப உறுப்பினர்கள், அவரை காப்பாற்ற முடியாது என மருத்துவர்கள் கூறியதை நம்பி, அவரின் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். அதற்கான தேதியும் குறிக்கப்பட்டது. அன்று நடந்தவைகள் குறித்து பேசினார், தாமஸ் டிஜே ஹூவரின் சகோதரி டோனா ரோரர்.

``என் சகோதரன் இனி பிழைக்கமாட்டான் எனக் கூறிவிட்டார்கள். அதனால் உறுப்பு தானம் செய்ய முன்வந்தோம். என் சகோதரனிடமிருந்து உறுப்புகளை எடுக்க அவரை அறுவை சிக்கிச்சை அறைக்கு கொண்டு சென்றார்கள். அப்போதே சில செவிலியர்கள் அவரிடம் அசைவை பார்த்திருக்கிறார்கள். ஆனால், அதைப் பொருட்படுத்தாமல், அறுவை சிகிச்சைக்கு கொண்டுசென்றிருக்கிறார்கள்.

கிட்டதட்ட இதயத்தை எடுக்க நெஞ்சில் கத்தி வைத்தபோதுதான், என் சகோதரன் கண்களிலிருந்து கண்ணீர் வந்திருக்கிறது. உடனே உறுப்புகளை எடுக்க நியமிக்கப்பட்ட மருத்துவர் அறுவை சிகிச்சை செய்ய மறுத்துவிட்டார்.

தாமஸ் டிஜே ஹூவர்

அதன் பிறகு வேறு ஒரு மருத்துவரை நியமித்தார்கள். அவர் பரிசோதித்தபோதுதன் அவர் சுயநினைவுடன் இருப்பது தெரியவந்து. உடனே அவருக்கான சிகிச்சையை தொடங்கினார்கள். இந்த சம்பவம் அக்டோபர் 2021-ல் நடந்தது. அதைத் தொடர்ந்து, அந்த சம்பவத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் ராஜினாமா செய்துவிட்டார்கள். அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. தாமஸ் டிஜே ஹூவரை வீட்டிற்கு அழைத்துச் செல்லக் கூறப்பட்டபோது, அவர் நீண்ட காலம் உயிர்வாழமாட்டார் எனக் கூறினார்கள். ஆனால், அதைக் கடந்து, குணமடைந்து நன்றாக இருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக இன்றும் விசாரணை நடந்துவருகிறது" எனக் குறிப்பிட்டார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88

``நிறைய திருமணம் செய்து, திருமணத்தின் கடவுளாக வேண்டும்..'' - ஜப்பான் இளைஞரின் இலக்கு!

ஜப்பானின் ஹொக்கைடோவின் வடக்கு மாகாணத்தில் வசிப்பவர் ரியுதா வதனாபே. 36 வயதான இவர் கடந்த 10 ஆண்டுகளாக வேலைக்கு செல்லாமல் வாழ்ந்து வருகிறார். இவரின் பெரும் ஆசை... கனவு... திருமணத்தின் கடவுள் ஆக வேண்டும் ... மேலும் பார்க்க

``மான்களை வேட்டையாடவில்லை.. செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்கமுடியாது'' - சல்மான் கான் தந்தை விளக்கம்

பாலிவுட் நடிகர் சல்மான் கான் 1998ம் ஆண்டு ராஜஸ்தானுக்கு படப்பிடிப்புக்கு சென்றபோது அபூர்வ வகை மான்களை வேட்டையாடியதாக குற்றம்சாட்டப்பட்டது. சம்பவம் நடந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இது இன்னும் சல்ம... மேலும் பார்க்க

1951-ல் காணாமல் போன சிறுவன்... 70 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடித்த மருமகன்.. நெகிழ வைத்த சம்பவம்!

70 வருடங்களுக்கு முன்னர் காணாமல் போன மாமாவை, மருமகன் தேடி கண்டுபிடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்தவர் அர்மாண்டோ அல்பினோ. இவர் பிப்ரவரி 21,1951 அன்று மாலை கலிபோர்ன... மேலும் பார்க்க

15 ஆண்டுகளாக குறையாத கரன்ட் பில்; வெளிவந்த உண்மை... அதிர்ந்துபோன வீட்டு உரிமையாளர்! - என்ன நடந்தது?

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் கென் வில்சன் என்ற நபர் 15 ஆண்டுகளாக தனது பக்கத்து வீட்டுக்காரருக்கும் சேர்த்து மின்சார கட்டணம் செலுத்திக்கொண்டிருந்ததை சமீபத்தில் கண்டறிந்து அதிர்ச்சியடைந்துள்ளா... மேலும் பார்க்க

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்தஜாங்யாங்(Zhong Yang)குக்கு13 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ஒருமில்லியன்யுவான்(சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற... மேலும் பார்க்க