செய்திகள் :

OTP மூலம் நடைபெறும் மோசடிகளில் இருந்து தப்பிப்பது எப்படி?!

post image

அனைத்துத் துறைகளிலும் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில், அதே தொழில்நுட்பம் மூலமாக நடைபெறும் மோசடிகளும் அதிகரித்து வருகிறது.

முக்கியமாக நமது பணப் பரிமாற்றத்துக்கும், வங்கி கணக்கின் தகவல்களை நாம் மட்டுமே பாதுகாப்பாகப் பயன்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்டது, OTP(One Time Password). தனிநபருக்கு sms மூலமாகவோ, மெயில் மூலமாகவோ அனுப்பப்படும் இந்த OTP ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால் இதன் மூலம் நடைபெறும் மோசடிகளின் எண்ணிக்கை தற்போது பெருகி வருகிறது.

OTP மோசடிகள் அரங்கேறும் வழிகள்:-

1. சட்டப்படியான நிறுவனத்தில் இருந்து வரும் மின்னஞ்சல், அழைப்புகள் போல் பேசி உரிய நிறுவனத்தின் நுகர்வோர்களின் தகவல்களை அறிந்துக் கொள்வது

2 . 'உங்கள் வங்கிக் கணக்கில் பிரச்னை உள்ளது, அதை உடனே சரி செய்வதற்கு OTP தேவைப்படுகிறது' என்று போலி அழைப்புகள் வழியாக மோசடி செய்தல்.

3. OTP -ஐ பகிர்ந்துக் கொள்ள வலியுறுத்துதல் வாயிலாக மோசடிகள் அரங்கேற்றுதல்.

angaadi

OTP மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு:-

1 . மோசடி அழைப்புகள் மற்றும் மெயில்களில் எச்சரிக்கையாக இருங்கள்.

2 . மெயிலுக்கு பதில் அனுப்புவதற்கு முன்பாகவும், லிங்க்குகளுக்குள் செல்வதற்கு முன்பாகவும் அவற்றை அனுப்பியவரின் தகவல்களை இருமுறை சரிபார்த்தப்பின் செயல்படுங்கள்.

3 . எக்காரணத்திற்காகவும் OTP- ஐ பகிராதீர்கள். சட்டப்படியான நிறுவனங்கள் யாவும் ஒருபோதும் OTP- ஐ பகிரச்சொல்லிக் கேட்க மாட்டார்கள்.

4 . உங்கள் வங்கி கணக்கிற்கு ஒரு கடினமான கடவுச்சொல்லை வைத்துக்கொள்ளுங்கள். மேலும் இரண்டு-படி சரிபார்ப்பு வசதியையும் அமைத்துக் கொள்ளுங்கள்.

5 . ஏதேனும் நிறுவனத்தின் பெயரில் மோசடி அழைப்பைத் தாங்கள் பெற்றால் அந்த குறிப்பிட்ட நிறுவனத்திடம் புகார் கொடுங்கள்.

இந்த வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலமாக OTP மோசடிகளில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

Gold Purity-ஐ இப்படித்தான் Check பண்ணனுமா? | The Chennai Silks MD T.K.Chandiran Interview | PART-2

இந்த பிரத்யேக நேர்காணலில், தி சென்னை சில்க்ஸின் நிர்வாக இயக்குனர் சந்திரன், வெறும் 100 சதுர அடியில் தொடங்கப்பட்ட ஒரு சிறிய நிறுவனம் இன்று 50,000 பேருக்கு வேலை செய்யும் அளவிற்கு வளர்ந்துள்ளது என்ற எழுச... மேலும் பார்க்க

ஜிஆர்டி ஜுவல்லர்ஸுடன் தீபாவளியை மங்களகரமாக தொடங்குங்கள்; தங்கத்துடன் வெள்ளியை இலவசமாக பெறுங்கள்!

1964 ஆம் ஆண்டு முதல், ஜி.ஆர்டி ஜூவல்லர்ஸ் நம்பிக்கைக்கு பெயர் பெற்றது. கைவினைத்திறன மற்றும் தூய்மைக்கான அதன் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்காக புகழ்பெற்றது. தென்னிந்தியா மற்றும் சிங்கப்பூரில் வலுவான நன... மேலும் பார்க்க

சீனாவில் வேலைக்கு செல்லும் செல்லப் பிராணிகள் - ஆச்சர்யமாக இருக்கிறதா?!

ஜேன் ஜூய் (Jane xue )என்பவர் தனது இரண்டு வயதான சாமோட் (samoyed) வகை வளர்ப்பு நாய் ஒன்றுக்கு ஓகே(ok)என பெயர் வைத்து அதனை தென்கிழக்கு சீனாவில் உள்ள `பெட் கஃபேவுக்கு செப்டம்பர் மாதத்தில் முதல் நாளாக வேலை... மேலும் பார்க்க

Savings Account: உங்கள் வங்கி சேமிப்பு கணக்கில் அதிகபட்சம் எவ்வளவு டெபாசிட் செய்யலாம்?

இன்றைய காலக்கட்டத்தில் வங்கி கணக்கு இல்லாமல் எவரும் இருக்க முடியாது. பண பரிவர்த்தனை எல்லாம் டிஜிட்டல் மயமாகிவிட்டது. பெரிய சூப்பர் மார்கெட் முதல் சிறிய சாலையோர பூக்கடை வரை எங்கு போனாலும் கியூ ஆர் கோர்... மேலும் பார்க்க

மதுரை ஸ்ரீ மீனாட்சி ஃபேன் ஹவுஸ் நிறுவனத்தின் 'புதிய மீனாட்சி டிஜிட்டல் ஷோரூம்' திறப்பு விழா

மதுரை ஸ்ரீ மீனாட்சி ஃபேன் ஹவுஸ் ( Madurai Shri Meenakshi Fan House) நிறுவனத்தின் புதிய மீனாட்சி டிஜிட்டல் ஷோரூம் - ஐ சோனி இந்தியா நிறுவனத்தின் விற்பனை இயக்குனர் திரு சதீஷ் பத்மநாபன் திறந்து வைத்தார்.இ... மேலும் பார்க்க