TVK Vijay Karur stampede - சதி நடந்தது என்றால் ஆதாரம் எங்கே? - VCK MLA Aloor Sha...
Rain Update: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கிறது. இதனைத்தொடர்ந்து பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் 27 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
அதாவது சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கரூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, கடலூர், கோவை, திண்டுக்கல், ஈரோடு, தஞ்சை, திருவாரூர், தென்காசி, நீலகிரி, நெல்லை, திருச்சி, திருப்பூர், தேனி, விருதுநகர், கள்ளக்குறிச்சி, நாகை, தூத்துக்குடி, விழுப்புரம், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, மதுரை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, வருகின்ற 21-ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெறக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு தெரிவித்து இருக்கிறது.